திருப்புகழ் 1014 படிதனில் உறவெனும்  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1014 padidhaniluRavenum  (common)
Thiruppugazh - 1014 padidhaniluRavenum - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

mp3
 
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதன தனதன தனதன தனதன
     தத்தத் தத்தன தத்தத் தத்தன ...... தந்ததான

......... பாடல் .........

படிதனி லுறவெனு மனைவர்கள் பரிவொடு
     பக்கத் திற்பல கத்திட் டுத்துயர் ...... கொண்டுபாவப்

பணைமர விறகிடை யழலிடை யுடலது
     பற்றக் கொட்டுகள் தட்டிச் சுட்டலை ...... யொன்றியேகக்

கடிசம னுயிர்தனை யிருவிழி யனலது
     கக்கச் சிக்கென முட்டிக் கட்டியு ...... டன்றுபோமுன்

கதிதரு முருகனு மெனநினை நினைபவர்
     கற்பிற் புக்கறி வொக்கக் கற்பது ...... தந்திடாயோ

வடகிரி தொளைபட அலைகடல் சுவறிட
     மற்றுத் திக்கெனு மெட்டுத் திக்கிலும் ......வென்றிவாய

வலியுட னெதிர்பொரு மசுரர்கள் பொடிபட
     மட்டித் திட்டுயர் கொக்கைக் குத்திம ...... லைந்தவீரா

அடர்சடை மிசைமதி யலைஜல மதுபுனை
     அத்தர்க் குப்பொருள் கற்பித் துப்புகழ் ...... கொண்டவாழ்வே

அடியுக முடியினும் வடிவுட னெழுமவு
     னத்திற் பற்றுறு நித்தச் சுத்தர்கள் ...... தம்பிரானே.

......... சொல் விளக்கம் .........

படி தனில் உறவு எனும் அனைவர்கள் பரிவொடு பக்கத்தில்
பல கத்திட்டுத் துயர் கொண்டு பாவ
... இப்பூமியில்
சுற்றத்தார்களாக உள்ள எல்லாரும் அன்புடன் பக்கத்திலே நின்று
அழுகைக் கூச்சலிட்டு துக்கம் கொண்டு சூழ்ந்து பரவி நிற்க,

பணை மர விறகு இடை அழல் இடை உடலது பற்றக்
கொட்டுகள் தட்டிச் சுட்டு அலை ஒன்றி ஏக
... பெருத்த மரக்
கட்டைகளில் உண்டாகும் நெருப்பிடையே உடல் தீப்பிடிக்க, பறைகள்
கொட்டி, உடலைச் சுட்டு, அலைகள் உள்ள நீரில் படிந்து குளித்து,
அவரவர் வீட்டுக்குச் செல்ல,

கடி சமன் உயிர் தனை இரு விழி அனல் அது கக்கச் சிக்கென
முட்டிக் கட்டி உடன்று போ முன்
... அழித்தல் தொழிலை உடைய
யமன் உயிரை (தனது) இரு கண்களும் நெருப்பு உமிழ அகப்படும்படித்
தாக்கி, கட்டி, கோபத்துடன் கொண்டு போவதற்கு முன்பாக,

கதி தரு முருகனும் என நினை நினைபவர் கற்பில் புக்கு
அறிவு ஒக்கக் கற்பது தந்திடாயோ
... நற்கதியை நமக்கு முருகன்
ஒருவனே தருவான் என்று உன்னை நினைப்பவர்களுடைய கதியான
நெறியில் (நானும்) புகுந்து, நல்லறிவு கூடும்படி உன்னை ஓதிப் பயிலும்
கருத்தை எனக்குத் தந்திடாயோ?

வட கிரி தொளை பட அலை கடல் சுவறிட மற்றுத் திக்கு
எனும் எட்டுத் திக்கிலும் வென்றிவாய
... வடக்கே உள்ள
கிரெளஞ்ச மலை தொளைபட்டு அழியவும், அலை வீசும் கடல்
வற்றிப் போகவும், மற்றுத் திசைகளாகிய எட்டுத் திக்குகளிலும் வெற்றி
கிடைக்கவும்,

வலியுடன் எதிர் பொரும் அசுரர்கள் பொடிபட மட்டித்திட்டு
உயர் கொக்கைக் குத்தி மலைந்த வீரா
... வலிமையுடன் உன்னை
எதிர்த்துச் சண்டை செய்த அசுரர்கள் பொடிபட்டு அழியவும், அவர்களை
முறியடித்திட்டு, உயரமான மாமரமாக உருமாறிய சூரனை வேலால் குத்தி
எதிர்த்த வீரனே,

அடர் சடை மிசை மதி அலை ஜலம் அது புனை அத்தர்க்குப்
பொருள் கற்பித்துப் புகழ் கொண்ட வாழ்வே
... நெருங்கிய
சடையின் மேல் நிலவையும், அலை கொண்ட கங்கை நீரையும் சூடியுள்ள
தந்தையாகிய சிவ பெருமானுக்கு, பிரணவப் பொருளை உபதேசித்து
தகப்பன் சாமி என்று புகழைக் கொண்ட செல்வனே,

அடி உக முடியினும் வடிவுடன் எழும் மவுனத்தில் பற்று உறு
நித்தச் சுத்தர்கள் தம்பிரானே.
... கடைசியான யுகாந்த காலத்தும்
தங்கள் வடிவு குலையாமல் தோற்றம் தருபவர்களும், மெளன நிலையில்
பற்று வைத்துள்ளவர்களும், நித்ய சூரிகளுமான பரிசுத்தர்கள் போற்றும்
தம்பிரானே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.66  pg 3.67  pg 3.68  pg 3.69 
 WIKI_urai Song number: 1017 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 1014 - padithani luRavenu (Common)

padithani luRavenu manaivarkaL parivodu
     pakkath thiRpala kaththit tuththuyar ...... koNdupAvap

paNaimara viRakidai yazhalidai yudalathu
     patRak kottukaL thattic chuttalai ...... yonRiyEkak

kadisama nuyirthanai yiruvizhi yanalathu
     kakkac chikkena muttik kattiyu ...... danRupOmun

kathitharu murukanu menaninai ninaipavar
     kaRpiR pukkaRi vokkak kaRpathu ...... thanthidAyO

vadakiri thoLaipada alaikadal suvaRida
     matRuth thikkenu mettuth thikkilum ......venRivAya

valiyuda nethirporu masurarkaL podipada
     mattith thittuyar kokkaik kuththima ...... lainthaveerA

adarsadai misaimathi yalaijala mathupunai
     aththark kupporuL kaRpith thuppukazh ...... koNdavAzhvE

adiyuka mudiyinum vadivuda nezhumavu
     naththiR patRuRu niththac chuththarkaL ...... thambirAnE.

......... Meaning .........

padi thanil uRavu enum anaivarkaL parivodu pakkaththil pala kaththittuth thuyar koNdu pAva: All the relatives on this earth stand nearby surrounding the body, with outpouring love and shrieks of crying;

paNai mara viRaku idai azhal idai udalathu patRak kottukaL thattic chuttu alai onRi Eka: the body is then laid on huge logs of wood that are ignited amidst the background beats of the drums; after consigning the body to fire, the various relatives take a dip in the wavy water and depart for their respective homes;

kadi saman uyir thanai iru vizhi anal athu kakkac chikkena muttik katti udanRu pO mun: Yaman, the God of Death, whose mission is destruction, attacks the life subduing it with his two fiery eyes that spew flames and angrily prepares to take it away; before that event,

kathi tharu murukanum ena ninai ninaipavar kaRpil pukku aRivu okkak kaRpathu thanthidAyO: will You not grant me the wisdom to join the righteous path of Your devotees who firmly believe that Murugan alone is the one to confer salvation so that I too become more sensible and chant Your name?

vada kiri thoLai pada alai kadal suvaRida matRuth thikku enum ettuth thikkilum venRivAya: Mount Krouncha in the north was pierced and destroyed; the wavy seas dried up; victory was achieved in all the eight cardinal directions;

valiyudan ethir porum asurarkaL podipada mattiththittu uyar kokkaik kuththi malaintha veerA: the demons who confronted You and fought with vigour were shattered to pieces; and, after defeating them, You challenged the demon SUran, who took the disguise of a tall mango tree, by attacking him with Your spear, Oh Great Warrior!

adar sadai misai mathi alai jalam athu punai aththarkkup poruL kaRpiththup pukazh koNda vAzhvE: He wears on His dense and matted hair the crescent moon and wavy water of the river Gangai; He is Lord SivA, Your father; You preached to Him the meaning of the PraNava ManthrA and earned name and fame as the Father's Teacher, Oh Precious Treasure!

adi uka mudiyinum vadivudan ezhum mavunaththil patRu uRu niththac chuththarkaL thambirAnE.: Even at the end of the Yugam (aeon) their form and figure remain intact without any deterioration; they are firm believers in practicing solemn silence and are called the Eternal Dazzlers; these pure souls always worship You, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

mp3
 

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1014 padidhanil uRavenum - common


   Kaumaram.com சமீபத்தில் DDOS தாக்குதலால் பாதிக்கப்பட்டது.
எனவே, படங்கள் மற்றும் ஆடியோ தற்காலிகமாக கிடைக்காது.
நான் இதை படிப்படியாக சரிசெய்ய முயற்சிக்கிறேன்.
உங்கள் பொறுமைக்கும் புரிந்துணர்வுக்கும் நன்றி. ... வலைத்தள நிர்வாகி.  



  Kaumaram.com was recently affected by DDOS attack.
As such, images and audio will be temporarily unavailable.
I am trying to correct this progressively.
Thank you for your patience and understanding. ... webmaster.  


... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 


Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

© Copyright Kaumaram dot com - 2001-2040

COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED.

Please contact me (the webmaster), if you wish to place a link in your website.

email: kaumaram@gmail.com

Disclaimer:

Although necessary efforts have been taken by me (the webmaster),
to keep the items in www.kaumaram.com safe from viruses etc.,
I am NOT responsible for any damage caused by use of
and/or downloading of any item from this website or from linked external sites.
Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items
from the internet for maximum safety and security.

[W3]