திருப்புகழ் 999 போதில் இருந்து  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 999 pOdhilirundhu  (common)
Thiruppugazh - 999 pOdhilirundhu - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தானன தந்தன தாத்தன தானன தந்தன தாத்தன
     தானன தந்தன தாத்தன ...... தனதான

......... பாடல் .........

போதிலி ருந்துவி டாச்சதுர் வேதமொ ழிந்தவ னாற்புளி
     னாகமு கந்தவ னாற்றெரி ...... வரிதான

போதுயர் செந்தழ லாப்பெரு வானநி றைந்தவி டாப்புக
     ழாளன ருஞ்சிவ கீர்த்திய ...... னெறிகாண

ஆதர வின்பருள் மாக்குரு நாதனெ னும்படி போற்றிட
     ஆனப தங்களை நாக்கரு ...... திடவேயென்

ஆசையெ ணும்படி மேற்கவி பாடுமி தம்பல பார்த்தடி
     யேனும றிந்துனை யேத்துவ ...... தொருநாளே

காதட ரும்படி போய்ப்பல பூசலி டுங்கய லாற்கனி
     வாயித ழின்சுவை யாற்பயில் ...... குறமாதின்

காரட ருங்குழ லாற்கிரி யானத னங்களி னாற்கலை
     மேவும ருங்கத னாற்செறி ...... குழையோலை

சாதன மென்றுரை யாப்பரி தாபமெ னும்படி வாய்த்தடு
     மாறிம னந்தள ராத்தனி ...... திரிவோனே

சாகர மன்றெரி யாக்கொடு சூரரு கும்படி யாத்திணி
     வேலையு ரம்பெற வோட்டிய ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

போதில் இருந்து விடாச் சதுர் வேத(ம்) மொழிந்தவனால்
பு(ள்)ளின் ஆகம் உகந்தவனால் தெரி அரிதான
... தாமரைப்
பூவில் வீற்றிருந்து அதை விட்டு நீங்காத, நான்கு வேதங்களையும் ஓதிய
பிரமனாலும், கருட வாகனத்தை விரும்பிய திருமாலாலும் அறிவதற்கு
அரிதான வகையில்,

போது உயர் செம் தழலாப் பெரு வான(ம்) நிறைந்த விடாப்
புகழாளன் அரும் சிவ கீர்த்தியன்
... தக்க சமயத்தில் (அவர்கள்
இருவரும் வாதிட்டபோது), உயர்ந்து எழுந்த செவ்விய தீப்பிழம்பாக
பெருத்த வானம் எல்லாம் நிறைவுற்று நின்ற நீங்காத புகழ் பெற்றவனாகிய
அரிய சிவன் என்று புகழ் கொண்ட ஈசன்

நெறி காண ஆதரவு இன்ப(ம்) அருள் மாக் குரு நாதன்
எனும்படி போற்றிட
... உண்மை நெறியைத் தான் காணும் பொருட்டு,
அன்பையும் இன்பத்தையும் ஊட்டிய சிறந்த குருநாதன் என்னும்
வகையில் (உன்னைப்) போற்றி செய்ய,

ஆன பதங்களை நாக் கருதிடவே என் ஆசை எ(ண்)ணும்படி
மேல் கவி பாடும் இதம் பல பார்த்து அடியேனும் அறிந்து
உனை ஏத்துவது ஒரு நாளே
... இருந்த உனது திருவடிகளை எனது
நா எண்ணித் துதித்திட என்னுடைய ஆசை உன்னை எண்ணியபடியே
உன் மேல் கவிகளைப் பாடும் இன்ப நிலையைப் பார்த்து அடியேனாகிய
நானும் உன்னை அறிந்து போற்றும்படியான ஒரு நாளும் எனக்குக்
கிட்டுமோ?

காது அடரும்படி போய்ப் பல பூசல் இடும் கயலால் கனி
வாய் இதழின் சுவையால் பயில் குற மாதின்
... காதை
நெருக்குவது போல அதன் அருகில் சென்று பல சச்சரவுகளைச் செய்யும்
கயல் மீன் போன்ற கண்ணாலும், கொவ்வைக் கனி போன்ற வாயிதழின்
இனிய சுவையாலும் நிரம்ப அழகு பெற்ற குறப் பெண் வள்ளியின்

கார் அடரும் குழலால் கிரியான தனங்களினால் கலை
மேவு(ம்) மருங்கு அதனால்
... கருமை நிறைந்த கூந்தலால், மலை
போன்ற மார்பகங்களால், ஆடை அணிந்துள்ள இடுப்பினால்,

செறி குழை ஓலை சாதனம் என்று உரையாப் பரிதாபம்
எனும்படி வாய்த் தடுமாறி மனம் தளராத் தனி திரிவோனே
...
நெருங்கப் பொருந்தியுள்ள உன் காதோலையே (நான் உனக்கு அடிமை
என்று) எழுதித் தந்த சாசனப் பத்திரம் என்று கூறி, ஐயோ பாவம் என்று
சொல்லும்படியான நிலையை அடைந்து, பேச்சும் தடுமாற்றம் அடைந்து,
மனமும் சோர்வு அடைந்து திரிந்தவனே,

சாகரம் அன்று எரியாக் கொடு சூரர் உகும்படியாத் திணி
வேலை உரம் பெற ஓட்டிய பெருமாளே.
... சமுத்திரம் அன்று
எரிந்து கொந்தளிக்கும்படி கொடுமை வாய்ந்த சூரர்கள் மடிந்து சிதற,
வலிய வேலாயுதத்தை அவர்கள் மார்பில் வேகமாகச் செலுத்திய பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.28  pg 3.29  pg 3.30  pg 3.31 
 WIKI_urai Song number: 1002 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 999 - pOthili runthuvida (common)

pOthili runthuvi dAcchathur vEthamo zhinthava nARpuLi
     nAkamu kanthava nAtReri ...... varithAna

pOthuyar senthazha lApperu vAnani Rainthavi dAppuka
     zhALana rumsiva keerththiya ...... neRikANa

Athara vinparuL mAkkuru nAthane numpadi pOtRida
     Anapa thangaLai nAkkaru ...... thidavEyen

Asaiye Numpadi mERkavi pAdumi thampala pArththadi
     yEnuma Rinthunai yEththuva ...... thorunALE

kAthada rumpadi pOyppala pUsali dumkaya lARkani
     vAyitha zhinsuvai yARpayil ...... kuRamAthin

kArada rumkuzha lARkiri yAnatha nangaLi nARkalai
     mEvuma rungatha nARcheRi ...... kuzhaiyOlai

sAthana menRurai yAppari thApame numpadi vAyththadu
     mARima nanthaLa rAththani ...... thirivOnE

sAkara manReri yAkkodu cUraru kumpadi yAththiNi
     vElaiyu rampeRa vOttiya ...... perumALE.

......... Meaning .........

pOthil irunthu vidAc chathur vEtha(m) mozhinthavanAl pu(L)Lin Akam ukanthavanAl theri arithAna: Lord Brahma, seated on the lotus which He would never part from, and who is well-versed in the four VEdAs, and Lord VishNu who mounts with relish the big eagle (Garudan) were never able to discern Him;

pOthu uyar sem thazhalAp peru vAna(m) niRaintha vidAp pukazhALan arum siva keerththiyan: when those two went into an argument (as to who was greater among them), He rose and stood at the appropriate time as a tall and red effulgence of fire and pervaded the whole wide sky; He is the unique Lord SivA, of everlasting fame;

neRi kANa Atharavu inpa(m) aruL mAk kuru nAthan enumpadi pOtRida: when that Lord SivA sought to have an insight into the True Path, You preached to Him as the Great Master, and He worshipped Your hallowed feet stating that You had showered love and bliss on Him;

Ana pathangaLai nAk karuthidavE en Asai e(N)Numpadi mEl kavi pAdum itham pala pArththu adiyEnum aRinthu unai Eththuvathu oru nALE: in order that I too worship those feet praising with my tongue and to enable me to compose songs with my loving thoughts fixed on You, will there be a day for this slave when I too am able to attain the bliss of veneration after knowing You thoroughly?

kAthu adarumpadi pOyp pala pUsal idum kayalAl kani vAy ithazhin suvaiyAl payil kuRa mAthin: With her kayal-fish-like eyes that keep running up to the ears as if to accost them with many challenges, her sweet lips looking like the kovvai fruit and her exquisite beauty, VaLLi, the damsel of the KuRavAs,

kAr adarum kuzhalAl kiriyAna thanangaLinAl kalai mEvu(m) marungu athanAl: who was bestowed with dark and dense hair, mountain-like bosom and slender waist wrapped around by her attire,

seRi kuzhai Olai sAthanam enRu uraiyAp parithApam enumpadi vAyth thadumARi manam thaLarAth thani thirivOnE: made You declare that her closely set earstud would serve as the pledge deed (evidencing that You were her bonded slave); You then reached a highly pitiable stage, with Your speech faltering, and began to roam about alone aimlessly with a depressed mind, Oh Lord!

sAkaram anRu eriyAk kodu cUrar ukumpadiyAth thiNi vElai uram peRa Ottiya perumALE.: The ocean caught fire and boiled over, and the evil demons were killed, with their bodies scattered around, when You wielded the powerful spear on their chest, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 999 pOdhil irundhu - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]