திருப்புகழ் 1000 வேடர் செழுந்தினை  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1000 vEdarsezhundhinai  (common)
Thiruppugazh - 1000 vEdarsezhundhinai - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தானன தந்தன தாத்தன தானன தந்தன தாத்தன
     தானன தந்தன தாத்தன ...... தனதான

......... பாடல் .........

வேடர்செ ழுந்தினை காத்திதண் மீதிலி ருந்தபி ராட்டிவி
     லோசன அம்புக ளாற்செயல் ...... தடுமாறி

மேனித ளர்ந்துரு காப்பரி தாபமு டன்புன மேற்றிரு
     வேளைபு குந்தப ராக்ரம ...... மதுபாடி

நாடறி யும்படி கூப்பிடு நாவலர் தங்களை யார்ப்பதி
     னாலுல கங்களு மேத்திய ...... இருதாளில்

நாறுக டம்பணி யாப்பரி வோடுபு ரந்தப ராக்ரம
     நாடஅ ருந்தவம் வாய்ப்பது ...... மொருநாளே

ஆடக மந்தர நீர்க்கசை யாமலு ரம்பெற நாட்டியொ
     ராயிர வெம்பகு வாய்ப்பணி ...... கயிறாக

ஆழிக டைந்தமு தாக்கிய நேகர்பெ ரும்பசி தீர்த்தரு
     ளாயனு மன்றெயில் தீப்பட ...... அதிபார

வாடைநெ டுங்கிரி கோட்டிய வீரனு மெம்பர மாற்றிய
     வாழ்வென வஞ்சக ராக்ஷதர் ...... குலமாள

வாசவன் வன்சிறை மீட்டவ னூரும டங்கலு மீட்டவன்
     வானுல குங்குடி யேற்றிய ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

வேடர் செழும் தினை காத்து ... வேடர்களுடைய செழுமை வாய்ந்த
தினைப் புனத்தைக் காவல் காத்து,

இதண் மீதில் இருந்த பிராட்டி ... (அங்கு) பரண் மீது இருந்த
வள்ளிப்பிராட்டியாருடைய

விலோசன அம்புகளால் செயல் தடுமாறி ... கண்கள் ஆகிய
அம்புகள் பாய்வதால் செயல் தடுமாற்றம் அடைந்ததுபோல நடித்து,

மேனி தளர்ந்து உருகாப் பரிதாபமுடன் ... உடல் சோர்வு
அடைந்து மனம் உருகி நின்று, பரிதபிக்கத் தக்க நிலையில் (கிழவேடம்
பூண்டு)

புனம் மேல் திரு வேளை புகுந்த பராக்ரமம் அது பாடி ...
தினைப் புனத்திற்கு சிறந்த சமயம் பார்த்து உள்ளே புகுந்த திறமையைக்
கவிகளில் அமைத்துப் புகழ்ந்து பாடி,

நாடு அறியும்படி கூப்பிடு நாவலர் தங்களை ஆர் ... உலகத்தோர்
(உனது கருணையை) அறிந்து உய்யும்படி ஓலமிட்டு உரைக்கின்ற
நாவல்ல புலவர்களைக் கட்டி வசீகரிக்கும்,

பதினாலு உலகங்களும் ஏத்திய இரு தாளில் ... பதினான்கு
உலகில் உள்ளோரும் போற்றும் உனது இரண்டு திருவடிகளில்,

நாறு கடம்பு அணியாப் பரிவோடு புரந்த பராக்ரம ... மணம்
கமழும் கடப்பமாலையை அணிந்த உன் திருவடிகளில், அன்புடன்
வைத்துக் காக்கின்ற உனது திறமையை,

நாட அரும் தவம் வாய்ப்பதும் ஒரு நாளே ... நாடி நிற்க,
அருமையான தவச் செயலால் அடியேனுக்கும் கூடும்படியான ஒரு நாள்
கிட்டுமோ?

ஆடகம் மந்தர நீர்க்கு அசையாமல் உரம் பெற நாட்டி ... பொன்
மயமான மந்தர மலையை பாற்கடல் நீரில் அசையாதபடி வலிமையுடன்
மத்தாகப் பொருத்தி வைத்து,

ஒரு ஆயிரம் வெம் பகுவாய்ப் பணி கயிறாக ... ஒப்பற்ற ஆயிரக்
கணக்கான வெப்பம் மிகுந்த பிளவான நாக்குகளை உடைய பாம்பாகிய
வாசுகியை (மத்தின்) கயிறாகச் சுற்றி,

ஆழி கடைந்து அமுது ஆக்கி ... பாற்கடலைக் கடைந்து
அமுதத்தை வரவழைத்து,

அநேகர் பெரும் பசி தீர்த்து அருள் ஆயனும் ... இந்திராதி
தேவர்களுடைய மிகுந்த பசியை நீக்கி (மோகினியாக)
அருள்புரிந்தவனும், ஆயர் குலத்தில் அவதரித்தவனுமான திருமாலும்,

அன்று எயில் தீப்பட அதி பார வாடை நெடும் கிரி கோட்டிய
வீரனும்
... முன்பு, முப்புரங்களும் தீயில் அழிவதற்காக, அதிக கனமாக
வடக்கே உள்ள பெரிய மேரு மலையை (வில்லாக) வளைத்த வீரனுமாகிய
சிவபெருமானும்,

எம் பரம் ஆற்றிய வாழ்வு என ... எங்களது சுமையைக் குறைத்த*
செல்வமே என்று உன்னைத் துதிக்க,

வஞ்சக ராக்ஷதர் குலம் மாள ... வஞ்சக அரக்கர்களின் கூட்டம்
அழிய,

வாசவன் வன்சிறை மீட்டு அவன் ஊரும் அடங்கலும் மீட்டு ...
இந்திரனின் கொடிய சிறையை நீக்கி அவனை விடுவித்து, அவன்
ஊராகிய பான்னுலகத்தையும் மற்றும் செல்வங்களையும் முழுவதுமாக
மீட்டுத் தந்து,

அவன் வான் உலகும் குடி ஏற்றிய பெருமாளே. ... அவனுடைய
விண்ணுலகத்தில் குடி ஏற்றி வைத்த பெருமாளே.


* திருமாலின் தொழிலாகிய காத்தல் தொழிலை தேவர்களைக் காத்ததால்
முருகனே செய்தான். சிவனின் அழித்தல் தொழிலை அரக்கர்களை அழித்து
முருகனே செய்தான். எனவே இருவரின் தொழில் பாரத்தையும் குறைத்தான்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.30  pg 3.31  pg 3.32  pg 3.33 
 WIKI_urai Song number: 1003 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss

Song 1000 - vEdar sezhundhinai (common)

vEdar sezhun thinai kAththi thaNmeedhil irundha
     pirAttivi lOchana ambugaLAR seyal ...... thadumARi

mEni thaLarndh urugAp parithApam udan puna mEtriru
     vELai pugundha parAkramam ...... adhu pAdi

nAd aRiyum padi kUppidu nAvalar thangaLai Arppadhi
     nAl ulagangaLum Eththiya ...... iruthALil

nARu kadamb aNiyAp parivOdu purandha parAkrama
     nAda arunthavam vAyppadhum ...... orunALE

Adaga manthara neerk kasaiyAmal urampeRa nAtti yo
     rAyira vembahu vAyp paNi ...... kayiRAga

Azhi kadaindh amudhAkki anEkar perumpasi theerth aruL
     Ayanum andreyil theeppada ...... athibAra

vAdai nedungiri kOttiya veeranum empara mAtriya
     vAzhvena vanjaka rAkshadhar ...... kulamALa

vAsavan vanciRai meettavan Urum adangalum eettavan
     vAn ulagun kudi Etriya ...... perumALE.

......... Meaning .........

vEdar sezhun thinai kAththi thaNmeedhil irundha: Standing on the high bamboo platform in the hunters' millet field, She guarded the full-grown millet;

pirAttivi lOchana ambugaLAR seyal thadumARi: when You were struck by that VaLLi's arrow-like eyes, You reeled over and pretended to totter;

mEni thaLarndh urugAp parithApam udan: as if Your body had lost its vigour, with a melting heart, You pathetically assumed the disguise of an old man

puna mEtriru vELai pugundha parAkramam adhu pAdi: and waited for the most opportune moment to enter the millet field; that calculative skill is the subject of many a poem

nAd aRiyum padi kUppidu nAvalar thangaLai Arppadhi: composed by poets of this world who proclaim Your glory loudly. They are enchanted by Your hallowed feet,

nAl ulagangaLum Eththiya iruthALil: which are praised by all the fourteen worlds. With those holy feet,

nARu kadamb aNiyAp parivOdu purandha: wearing the fragrant kadappa garlands, Your devotees are kindly protected;

parAkrama nAda arunthavam vAyppadhum orunALE: Will there be a day when I can do a rare penance to seek and attain that greatness?

Adaga manthara neerk kasaiyAmal urampeRa nAtti: The golden mount, Manthara, was firmly fixed as the churning rod in the middle of the milky ocean;

orAyira vembahu vAyp paNi kayiRAga: the great serpent VAsuki, having thousands of hot poisonous split tongues and fangs, was wound like a rope around that mount;

Azhi kadaindh amudhAkki anEkar perumpasi theerth aruL Ayanum: when the ocean was churned, nectar was produced which was served (by Mohini) to satiate the large hunger of the celestials; He also came as the cowherd, Krishna - that Vishnu;

andreyil theeppada athibAra vAdai nedungiri kOttiya veeranum: Once, to burn away the Thiripuram Kingdoms, He arched the heavy Mount Meru in the north into a bow; that valiant Lord SivA; - both of them praised You saying,

empara mAtriya vAzhvena: "You have reduced our burden*, Oh Lord";

vanjaka rAkshadhar kulamALa: the clan of the treacherous demons was destroyed;

vAsavan vanciRai meettavan Urum adangalum eettu: IndrA was rescued from his rigorous prison, and his entire kingdom and wealth were restored;

avan vAn ulagun kudi Etriya perumALE.: and in his celestial land, You resettled the DEvAs, Oh Great One!


* Vishnu is the Lord responsible for protection, and SivA for destruction. Here, as Murugan destroyed all the demons and protected all the celestials, He has considerably reduced the burden of both Vishnu and SivA.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1000 vEdar sezhundhinai - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]