திருப்புகழ் 997 தோடு மென்குழை  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 997 thOdumenkuzhai  (common)
Thiruppugazh - 997 thOdumenkuzhai - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தான தந்தன தானா தானன
     தான தந்தன தானா தானன
          தான தந்தன தானா தானன ...... தனதானா

......... பாடல் .........

தோடு மென்குழை யூடே போரிடு
     வாணெ டுங்கயல் போலே யாருயிர்
          சூறை கொண்டிடு வேல்போ லேதொடர் ...... விழிமானார்

சூத கந்தனி லேமா லாயவர்
     ஓது மன்றறி யாதே யூழ்வினை
          சூழும் வெந்துய ராலே தானுயிர் ...... சுழலாதே

ஆடு வெம்பண காகோ தாசன
     மூறு கண்டிட மேல்வீழ் தோகையி
          லாரும் வண்கும ரேசா ஆறிரு ...... புயவேளே

ஆரு நின்றரு ளாலே தாடொழ
     ஆண்மை தந்தருள் வாழ்வே தாழ்வற
          ஆதி தந்தவ நாயேன் வாழ்வுற ...... அருள்வாயே

ஓடு வெங்கதி ரோடே சோமனு
     மூழி யண்டமும் லோகா லோகமு
          மூரு மந்தர நானா தேவரு ...... மடிபேண

ஊழி டம்புயன் வேலா வாலய
     மூடு தங்கிய மாலா ராதர
          வோத வெண்டிரை சூர்மார் பூடுற ...... விடும்வேலா

வேடு கொண்டுள வேடா வேடைய
     வேழ வெம்புலி போலே வேடர்கள்
          மேவு திண்புன மீதே மாதொடு ...... மிகமாலாய்

மேக மென்குழ லாய்நீ கேளினி
     வேறு தஞ்சமு நீயே யாமென
          வேளை கொண்டபி ரானே வானவர் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

தோடு(ம்) மென் குழை ஊடே போரிடு வாள் நெடும் கயல்
போலே ஆருயிர் சூறை கொண்டிடு வேல் போலே தொடர்
விழி மானார்
... தோடும் மெல்லிய குண்டலமும் அணிந்துள்ள காதில்
போர் செய்யும் ஒளி பொருந்திய பெரிய கயல் மீனைப் போல் விளங்கி அரிய
உயிரையும் கொள்ளை கொள்ளும் வேல் போல் பாய்வதான கண்களை
உடைய விலைமாதர்களின்

சூதகம் தனிலே மாலாய் அவர் ஓதும் அன்று அறியாதே ஊழ்
வினை சூழும் வெம் துயராலே தான் உயிர் சுழலாதே
... வஞ்சகம்
நிறைந்த உள்ளத்தினிடத்தே மோகம் கொண்டவனாய் அவர்கள்
பேசுகின்ற சொற்களின் உண்மை நிலையை அன்று உணராமல், தலை
விதி சூழ்ச்சி செய்து தருகின்ற கொடிய துன்பத்தால் என் உயிர் சுழன்று
சஞ்சலம் அடையாமல்,

ஆடு(ம்) வெம் பண காகோதம் அசனம் ஊறு கண்டிட மேல்
வீழ் தோகையில் ஆரும் வண் குமரேசா ஆறு இரு புய
வேளே
... ஆடும் கொடிய படத்தை உடைய பாம்பாகிய உணவைச்
சுவைத்து உண்பதற்காக அதன் மேல் விழுகின்ற மயிலை வாகனமாகக்
கொண்டு நிறைந்து விளங்கும் வளப்பம் கொண்ட குமரேசனே, பன்னிரு
தோள்களை உடையவனே,

ஆரு(ம்) நின்று அருளாலே தாள் தொழ ஆண்மை தந்து
அருள் வாழ்வே தாழ்வு அற ஆதி தந்தவ நாயேன் வாழ்வு உற
அருள்வாயே
... யாரும் நின்று உன் திருவருளால் உன் திருவடிகளைத்
தொழ (அவர்களுக்கு) மன வலிமையைக் தந்து அருளும் செல்வனே,
இழிவான நிலை ஒழிவதற்கு, ஆதி நாயகனான சிவ பெருமான் தந்தருளிய
பெருமானே, அடியேன் நல் வாழ்வு பெற அருள்வாயாக.

ஓடு(ம்) வெம் கதிரோடே சோமனும் ஊழி அண்டமும் லோகா
லோகமும் ஊரும் அந்தர(ம்) நானா தேவரும் அடி பேண
...
தினமும் ஓடிக் கொண்டிருக்கும் கொடிய வெப்பமுடைய சூரியனுடன்
சந்திரனும், ஊழிக் காலம் வரை அழியாத அண்டங்களும், பல
உலகங்களும், அங்குள்ள ஊர்களும், விண்ணில் உள்ள பலவகையான
தேவர்களும் உன் அடிகளைப் போற்றித் தொழ,

ஊழிடு அம்புயன் வேலாவாலயம் ஊடு தங்கிய மாலார் ஆதரவு
ஓத வெண் திரை சூர் மார்பு ஊடுற விடும் வேலா
... அவரவர்க்கு
விதியை விதிக்கின்ற பிரமனும், பாற்கடலில் தங்கியிருக்கின்ற திருமாலும்
உனது அன்பும் உதவியையும் வேண்ட, வெண்ணிற அலை வீசும்
கடலிடையை நின்ற சூரனுடைய மார்பை ஊடுருவிப் பிளக்கும்படி
வேலாயுதத்தைச் செலுத்தியவனே,

வேடு கொண்டு(ள்)ள வேடா வேடைய வேழ வெம் புலி
போலே வேடர்கள் மேவு(ம்) திண் புன(ம்) மீதே மாதொடு
மிக மாலாய்
... வேடனைப் போல் வேடம் கொண்டவனே, கொடுமை
வாய்ந்த புலி போல இருந்த வேடர்கள் வாழ்கின்ற திண்ணிய (தினைப்)
புனத்தில் இருந்த வள்ளி நாயகியிடம் மிகவும் காம மயக்கம்
கொண்டவனாய்,

மேக மென் குழலாய் நீ கேள் இனி வேறு தஞ்சமு(ம்)
நீயேயாம் என வேளை கொண்ட பிரானே வானவர்
பெருமாளே.
... மேகம் போன்ற மெல்லிய கூந்தலை உடையவளே, நீ
கேட்பாயாக. எனக்கு புகலிடம் நீயே ஆவாய் என்று கூறி அந்த மாதிடம்
தருணம் பார்த்து காத்திருந்து காவல் செய்த தலைவனே, தேவர்கள்
பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.22  pg 3.23  pg 3.24  pg 3.25 
 WIKI_urai Song number: 1000 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 997 - thOdu menkuzhai (common)

thOdu menkuzhai yUdE pOridu
     vANe dungkayal pOlE yAruyir
          cURai koNdidu vElpO lEthodar ...... vizhimAnAr

cUtha kanthani lEmA lAyavar
     Othu manRaRi yAthE yUzhvinai
          cUzhum venthuya rAlE thAnuyir ...... chuzhalAthE

Adu vempaNa kAkO thAsana
     mURu kaNdida mElveezh thOkaiyi
          lArum vaNkuma rEsA ARiru ...... puyavELE

Aru ninRaru LAlE thAdozha
     ANmai thantharuL vAzhvE thAzhvaRa
          Athi thanthava nAyEn vAzhvuRa ...... aruLvAyE

Odu vengkathi rOdE sOmanu
     mUzhi yaNdamum lOkA lOkamu
          mUru manthara nAnA thEvaru ...... madipENa

Uzhi dampuyan vElA vAlaya
     mUdu thangiya mAlA rAthara
          vOtha veNdirai cUrmAr pUduRa ...... vidumvElA

vEdu koNduLa vEdA vEdaiya
     vEzha vempuli pOlE vEdarkaL
          mEvu thiNpuna meethE mAthodu ...... mikamAlAy

mEka menkuzha lAynee kELini
     vERu thanjamu neeyE yAmena
          vELai koNdapi rAnE vAnavar ...... perumALE.

......... Meaning .........

thOdu(m) men kuzhai UdE pOridu vAL nedum kayal pOlE Aruyir cURai koNdidu vEl pOlE thodar vizhi mAnAr: Their bright and large eyes like the kayal fish keep on combating with the ears wearing the stud and the daintily swinging ear-ring; the look from those eyes of the whores leaps like the spear being capable of devouring the dear life;

cUthakam thanilE mAlAy avar Othum anRu aRiyAthE Uzh vinai cUzhum vem thuyarAlE thAn uyir chuzhalAthE: I have been infatuated with those whores possessing a treacherous mind, without realising the true meaning of their statements; I do not wish my life to be mired in the terrible misery due to the conspiring destiny; for that,

Adu(m) vem paNa kAkOtham asanam URu kaNdida mEl veezh thOkaiyil Arum vaN kumarEsA ARu iru puya vELE: Oh Lord KumarA, You mount the peacock that pounces all over preying upon, and munching with relish, the serpent that has an evil and dancing hood; Oh Lord with twelve hallowed shoulders,

Aru(m) ninRu aruLAlE thAL thozha ANmai thanthu aruL vAzhvE thAzhvu aRa Athi thanthava nAyEn vAzhvu uRa aruLvAyE: Oh Treasure, You graciously grant the mental strength to whoever Your devotees are so that they could worship Your holy feet in a steadfast manner with Your blessings! You were delivered by the Primeval Lord SivA to remove the state of degradation! Kindly bless me to tread the righteous path!

Odu(m) vem kathirOdE sOmanum Uzhi aNdamum lOkA lOkamum Urum anthara(m) nAnA thEvarum adi pENa: As the Sun, who traverses the sky everyday with intense heat, the Moon, the several planets that are immortal till the end of the aeon, many other worlds, the cities in those worlds and the myriads of celestials in the sky extolled Your hallowed feet in worship,

Uzhidu ampuyan vElAvAlayam Udu thangiya mAlAr Atharavu Otha veN thirai cUr mArpu UduRa vidum vElA: and as Brahma who dispenses the destiny of each and everyone, along with Lord VishNu who resides on the milky ocean, solicited Your love and patronage, You wielded the spear piercing and splitting the heart of the demon SUran who stood in the sea amidst white waves, Oh Lord!

vEdu koNdu(L)La vEdA vEdaiya vEzha vem puli pOlE vEdarkaL mEvu(m) thiN puna(m) meethE mAthodu mika mAlAy: You came in the disguise of a hunter, Oh Lord! You were enchanted with deep passion for VaLLi, who was in the fertile millet-field where hunters, with the ferocity of tiger, lived!

mEka men kuzhalAy nee kEL ini vERu thanjamu(m) neeyEyAm ena vELai koNda pirAnE vAnavar perumALE.: You told that damsel "Oh pretty girl with hair soft and dark like the black cloud, please listen to me; You are my only refuge!" and looked for an opportune moment to safeguard her, Oh Leader! You are the Lord of the celestials, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 997 thOdu menkuzhai - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]