திருப்புகழ் 996 ஏகமாய் பலவாய்  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 996 EgamAipalavAi  (common)
Thiruppugazh - 996 EgamAipalavAi - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தான தாத்தன தாத்தன தான தாத்தன தாத்தன
     தான தாத்தன தாத்தன ...... தனதானா

......... பாடல் .........

ஏக மாய்ப்பல வாய்ச்சிவ போக மாய்த்தெளி வாய்ச்சிவ
     மீதெ னாக்குரு வார்த்தையை ...... யுணராதே

ஏழு பார்க்கும்வி யாக்கிரன் யானெ னாப்பரி தேர்க்கரி
     யேறு மாப்பிறு மாப்புட ...... னரசாகி

தோகை மார்க்கொரு காற்றொலை யாத வேட்கையி னாற்கெடு
     சோர்வி னாற்கொடி தாக்கையை ...... யிழவாமுன்

சோதி காட்டவ ராச்சுத நாத னார்க்கருள் போற்றிய
     தூரி தாப்பர மார்த்தம ...... தருள்வாயே

நாக மேற்றுயில் வார்க்கய னான பேர்க்கரி யார்க்கொரு
     ஞான வார்த்தையி னாற்குரு ...... பரனாய

நாத நாட்டமு றாப்பல காலும் வேட்கையி னாற்புகல்
     நாவ லோர்க்கரு ளாற்பத ...... மருள்வாழ்வே

வேக மேற்கொ ளராப்புடை தோகை மேற்கொடு வேற்கொடு
     வீர மாக்குலை யாக்குல ...... வரைசாய

மேலை நாட்டவர் பூக்கொடு வேல போற்றியெ னாத்தொழ
     வேலை கூப்பிட வீக்கிய ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

ஏகமாய் பலவாய்ச் சிவபோகமாய் தெளிவாய் ... ஒன்றாகி,
பலவாகி, சிவ அனுபூதியாகி, தெளிவுப் பொருளாகி,

சிவம் ஈதெனாக் குரு வார்த்தையை உணராதே ... மங்கலப்
பொருளாயுள்ளது இதுவே என்று குரு செய்த உபதேசத்தை நான்
உணர்ந்து அதன்படி நடக்காமல்,

ஏழு பார்க்கும் வியாக்கிரன் யானெனாப் பரி தேர்க் கரி ஏறும்
மாப்பு இறுமாப்புடன் அரசாகி
... ஏழு உலகங்களுக்கும் புலி நானே
என்று, குதிரை, தேர், யானை இவற்றின் மீது ஏறும் மிகுந்த
செருக்குடனேஅரசாட்சியை வகித்து,

தோகைமார்க்கு ஒரு கால் தொலையாத வேட்கையினால் ...
மாதர்களிடத்தே ஒரு போதும் நீங்காத காம இச்சையால்

கெடு சோர்வினால் கொடிது ஆக்கையை இழவா முன்சோதி
காட்ட
... அழிவைத் தரும் தளர்ச்சியால் தீய வழியிலே இந்த உடலை நான்
இழப்பதற்கு முன்பாக, ஒளிவளர் உண்மையை அடியேன் கண்டு உணர,

வர அச்சுதநாதனார்க்கு அருள் போற்றிய தூரிதா பரமார்த்தம்
அது அருள்வாயே
... (நீ ஞானசம்பந்தராய் வந்து), சிவ சாரூபம்
வேண்டி வரம் கிடந்த திருமாலுக்கு அருள் பாலித்ததும்* எட்டாததுமான
மேலான பொருளை உபதேசித்து அருள்வாயாக.

நாகம் மேல் துயில்வார்க்கு அயனான பேர்க்கு அரியார்க்கு ...
பாம்புப் படுக்கை (ஆதிசேஷன்) மேல் துயிலும் திருமாலுக்கும், அயன்
எனப்படும் பிரமனுக்கும் அரியவரான சிவபெருமானுக்கு

ஒரு ஞான வார்த்தையினால் குரு பரன் ஆய நாத ... ஒரு ஞான
உபதேசம் செய்த காரணத்தால் குரு மூர்த்தியாய் விளங்கின நாதனே,

நாட்டம் உறாப் பல காலும் வேட்கையினால் புகல்
நாவலோர்க்கு அருளால் பதம் அருள் வாழ்வே
... தமது கருத்தை
வைத்துப் பல பொழுதும் ஆசை கொண்டவராய் உன் திருப்புகழைச்
சொல்லிப் போற்றும் புலவர்களுக்கு திருவருள் பாலித்து, திருவடியை
அருள்கின்ற செல்வமே,

வேகம் மேற்கொள் அராப் புடை தோகை மேல் கொடு வேல்
கொடு
... வேகத்தை மேற்கொண்ட பாம்பைத் துவைக்கும் மயிலின் மீது
ஏறி வேலாயுதத்தால்

வீர மாக் குலையா குலவரை சாய ... வீரம் பொருந்திய மாமரமாக
நின்ற சூரனைஅழித்து, சிறப்புற்ற கிரெளஞ்ச மலை சாய்ந்து அழிய,

மேலை நாட்டவர் பூக்கொடு வேல போற்றி எனாத் தொழ ...
விண்ணுலகத்தோர் பூமாரி பொழிந்து வேலாயுத மூர்த்தியே போற்றி எனக்
கூறி வணங்க,

வேலை கூப்பிட வீக்கிய பெருமாளே. ... கடல் கலங்கி ஓலமிட,
வேலைச் செலுத்திய பெருமாளே.


* காஞ்சியில் திருமேற்றளி என்ற இடத்தில் திருமால் சிவசாரூபம் பெற வேண்டி,
நீண்ட தவம் செய்தார். திருஞானசம்பந்தர் உருவில் முருகன் அங்கு வந்து
முகுந்தனை லிங்க வடிவமாக்கினார் - காஞ்சிப்புராணம்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.20  pg 3.21  pg 3.22  pg 3.23 
 WIKI_urai Song number: 999 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 996 - EgamAi palavAi (common)

Eka mAyppala vAycciva pOka mAyththeLi vAycciva
     meethe nAkkuru vArththaiyai ...... yuNarAthE

Ezhu pArkkumvi yAkkiran yAne nAppari thErkkari
     yERu mAppiRu mAppuda ...... narasAki

thOkai mArkkoru kAtRolai yAtha vEtkaiyi nARkedu
     sOrvi nARkodi thAkkaiyai ...... yizhavAmun

sOthi kAttava rAccutha nAtha nArkkaruL pOtRiya
     thUri thAppara mArththama ...... tharuLvAyE

nAka mEtRuyil vArkkaya nAna pErkkari yArkkoru
     njAna vArththaiyi nARguru ...... paranAya

nAtha nAttamu RAppala kAlum vEtkaiyi nARpukal
     nAva lOrkkaru LARpatha ...... maruLvAzhvE

vEka mERko LarAppudai thOkai mERkodu vERkodu
     veera mAkkulai yAkkula ...... varaisAya

mElai nAttavar pUkkodu vEla pOtRiye nAththozha
     vElai kUppida veekkiya ...... perumALE.

......... Meaning .........

EkamAy palavAyc civapOkamAy theLivAy: "It is the one and only one. It is also diverse. It is the experience known as SivA. It is the utmost clarity.

sivam eethenA guru vArththaiyai uNarAthE: It is the only auspiciousness" - these are the words preached to me by my master. Not heeding to those words and deviating from the righteous path,

Ezhu pArkkum viyAkkiran yAnenAp pari thErk kari ERum mAppu iRumAppudan arasAki: I proclaimed myself the tiger of the seven worlds, mounting horses, chariots and elephants and became arrogant, ruling as a king.

thOkaimArkku oru kAl tholaiyAtha vEtkaiyinAl: With my never-ending lust for women,

kedu sOrvinAl kodithu Akkaiyai izhavA munsOthi kAtta: I pursued a destructive path which ruined my health. Before I lose this body of mine, kindly enlighten me in the same way as

vara accuthanAdharkku aruL pOtRiya thUrithA paramArththam athu aruLvAyE: You did (coming as ThirugnAna Sambandhar), by kindly guiding Lord VishNu*, who did penance (at KAnchipuram), to attain the True Spiritual Knowledge that is supreme and beyond reach!

nAkam mEl thuyilvArkku ayanAna pErkku ariyArkku: VishNu who slumbers on a bed of snake (AdhisEshan) and BrahmA, who is known as ayan, were never able to find the head or feet of Lord SivA; to that SivA,

oru njAna vArththaiyinAl guru paran Aya nAtha: You taught the meaning of the PraNava ManthrA and became His great Master, Oh Lord!

nAttam uRAp pala kAlum vEtkaiyinAl pukal nAvalOrkku aruLAl patham aruL vAzhvE: To those poets who ardently praise Your glory dedicating their love, You graciously grant Your hallowed feet, Oh Lord!

vEkam mERkoL arAp pudai thOkai mEl kodu vEl kodu: Mounting the peacock that thrashed bunches of fierce and swift snakes, and wielding the spear from Your hand,

veera mAk kulaiyA kulavarai sAya: You destroyed the valiant demon SUran, disguised as a mango tree, and shattered the famous Mount Krouncha as

mElai nAttavar pUkkodu vEla pOtRi enAth thozha: the celestials worshipped You showering flowers and praying "Oh Lord with the Spear, Hail to You!"

vElai kUppida veekkiya perumALE.: The ocean made an uproarious noise when You wielded the spear, Oh Great One!


* Once Lord VishNu desired to reach SivA's SarUpa Status (linga form) and did a long penance at KAnchipuram. When ThirugnAna Sambandhar (incarnation of Murugan) came to ThirumEtRaLi, a suburb of KAnchipuram, he granted the Linga form to Vishnu - KAnchi PurANam.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 996 EgamAi palavAi - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]