திருப்புகழ் 983 வாலவயதாகி  (இராமேசுரம்)
Thiruppugazh 983 vAlavayadhAgi  (rAmEsuram)
Thiruppugazh - 983 vAlavayadhAgi - rAmEsuramSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தானதன தானதன தானதன தானதன
     தானதன தானதன தானதன தானதன
          தானதன தானதன தானதன தானதன ...... தனதான

......... பாடல் .........

வாலவய தாகியழ காகிமத னாகிபணி
     வாணிபமொ டாடிமரு ளாடிவிளை யாடிவிழல்
          வாழ்வுசத மாகிவலு வாகிமட கூடமொடு ...... பொருள்தேடி

வாசபுழு கேடுமல ரோடுமன மாகிமகிழ்
     வாசனைக ளாதியிட லாகிமய லாகிவிலை
          மாதர்களை மேவியவ ராசைதனி லேசுழல ...... சிலநாள்போய்த்

தோல்திரைக ளாகிநரை யாகிகுரு டாகியிரு
     கால்கள்தடு மாறிசெவி மாறிபசு பாசபதி
          சூழ்கதிகள் மாறிசுக மாறிதடி யோடுதிரி ...... யுறுநாளிற்

சூலைசொறி யீளைவலி வாதமொடு நீரிழிவு
     சோகைகள மாலைசுர மோடுபிணி தூறிருமல்
          சூழலுற மூலகசு மாலமென நாறியுட ...... லழிவேனோ

நாலுமுக னாதியரி யோமெனஅ தாரமுரை
     யாதபிர மாவைவிழ மோதிபொரு ளோதுகென
          நாலுசிர மோடுசிகை தூளிபட தாளமிடு ...... மிளையோனே

நாறிதழி வேணிசிவ ரூபகலி யாணிமுத
     லீணமக வானைமகிழ் தோழவன மீதுசெறி
          ஞானகுற மாதைதின காவில்மண மேவுபுகழ் ...... மயில்வீரா

ஓலமிடு தாடகைசு வாகுவள ரேழுமரம்
     வாலியொடு நீலிபக னோடொருவி ராதனெழு
          மோதகட லோடுவிறல் ராவணகு ழாமமரில் ...... பொடியாக

ஓகைதழல் வாளிவிடு மூரிதநு நேமிவளை
     பாணிதிரு மார்பனரி கேசன்மரு காஎனவெ
          யோதமறை ராமெசுர மேவுகும ராவமரர் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

வால வயதாகி அழகாகி மதனாகி ... கட்டிளமை வயதை அடைந்து,
அழகு நிரம்பப்பெற்று, மன்மதன் போல் விளங்கி,

பணி வாணிபமோடு ஆடி மருளாடி விளையாடி ... ஊதியம் தரும்
பல வாணிபப் பணிகளை மேற்கொண்டு நடத்தி, மயக்க அறிவைப்பெற்று
காம விளையாட்டுக்கள் ஆடி,

விழல் வாழ்வு சதமாகி வலுவாகி மட கூடமோடு பொருள்
தேடி
... பயனற்ற வாழ்க்கையையே நிலையானது என்று கருதி,
அதிலேயே மனம் உறுதிபெற்று, மாட கூடம் கொண்ட செல்வனாயப்
பொருளைத் தேடி,

வாச புழுகு ஏடு மலரோடு மனமாகி ... நறு மணம் உள்ள
புனுகு, மற்றும் இதழ்களோடு கூடிய மலர்கள் இவற்றில் மனத்தைச்
செலுத்தியவனாக,

மகிழ் வாசனைகள் ஆதி இடல் ஆகி மயலாகி ... மகிழ்ச்சியுடன்
வாசனைப் பொருள்கள் முதலியவற்றை அணிந்தவனாய், காமப்
பற்றைக்கொண்டு

விலைமாதர்களை மேவி அவர் ஆசை தனிலே சுழல சில நாள்
போய்
... பொது மகளிரை விரும்பி அவர்கள் மீது மோகம் கொண்டு
அவர்கள் பின் சுழல, (அங்ஙனம்) சில நாட்கள் கழிய,

தோல் திரைகள் ஆகி நரையாகி குருடாகி ... உடலில் தோல்
சுருங்கலுற்று, மயிர் வெண்ணிறம் பூண்டு, கண்கள் பார்வை இழந்து,

இரு கால்கள் தடுமாறி செவி மாறி ... இரண்டு கால்களும்
தடுமாற்றம் அடைந்து, காதுகள் கேட்கும் தொழில் அற்று,

பசு பாச பதி சூழ் கதிகள் மாறி சுகம் மாறி ... உயிர், தளை,
கடவுள் என்னும் முதற் பொருள்களைப் பற்றிய அறிவு யாவும்
மறைதலுற்று, சுகமெல்லாம் கெட்டு,

தடியோடு திரி உறு நாளில் ... கையில் தடி ஏந்தித் திரிகின்ற
முதுமைப் பருவத்தில்,

சூலை சொறி ஈளை வலி வாதமோடு நீரிழிவு ... சூலை நோய்,
சொறி நோய், கோழை, இழுப்பு, வாயு மிகுதலால் வரும் பிணிகள், நீரிழிவு,

சோகைகள மாலை சுரமோடு பிணி தூறிருமல் ...
இரத்தமின்மையால் வரும் சோகை, கண்ட மாலை, காய்ச்சல்
இவைகளுடன் சேர்ந்துள்ள கக்குவான் இருமல்,

சூழல் உற மூல கசுமாலம் என நாறி உடல் அழிவேனோ ...
இவை எல்லாம் சூழ்ந்து, அடிக்காரணமாகிய இந்தக் கூளம் போன்ற
உடல் துர் நாற்றம் அடைந்து நான் மடிந்து போவேனோ?

நாலுமுகன் ஆதி அரி ஓம் என அதாரம் உரையாத பிரமாவை ...
நான்கு முகங்களைக் கொண்டவனும், யாவற்றுக்கும் ஆதாரமான
பிரணவத்தின் பொருளைச் சொல்லத் தெரியாதவனுமாகிய பிரமனை,

விழ மோதி பொருள் ஓதுக என நாலு சிரமோடு சிகை
தூளிபட தாளம் இடும் இளையோனே
... விழும்படியாகத் தாக்கி,
சரியான பொருளைச் சொல்லுக என்று அவனுடைய நான்கு
முகங்களுடன் குடுமியும் சிதறுண்டு அலைய தாளமிடுவது போல்
குட்டிய இளையவனே,

நாறு இதழி வேணி சிவ ரூப கலியாணி முதல் ஈண
மகவானை மகிழ் தோழ
... நறுமணம் வீசும் கொன்றையை அணிந்த
ஜடையை உடைய சிவபெருமானுடைய பாகத்தில் அமைந்துள்ள தேவி
பார்வதி முதலில் ஈன்ற குழந்தையாகிய கணபதி மகிழும் சகோதர
நண்பனே,

வனம் மீது செறி ஞான குற மாதை தின காவில் மணமேவு
புகழ் மயில் வீரா
... வள்ளி மலைக் காட்டில் பொருந்தி இருந்த
ஞானக் குறப் பெண் வள்ளியை, தினைப் புனச்சோலையில் திருமணம்
செய்துகொண்ட புகழை உடைய மயில் வீரனே,

ஓலம் இடு தாடகை சுவாகு வளர் ஏழு மரம் ... கூச்சலிட்டு வந்த
தாடகை, சுபாகு, வளர்ந்திருந்த மரா மரங்கள் ஏழு,

வாலியோடு நீலி பகனோடு ஒரு விராதன் எழும் ஓத
கடலோடு விறல் ராவண குழாம் அமரில் பொடியாக
... வாலி
மற்றும் நீலி, பகன், ஒப்பற்ற விராதன், அலைகள் எழுந்து வீசும் கடல்,
இவைகளுடன் வலிமை வாய்ந்த ராவணனுடைய கூட்டம் யாவும் போரில்
இறந்து பொடிபட்டழிய,

ஓகை தழல் வாளிவிடு மூரி தநு நேமி வளை பாணி திரு
மார்பன் அரி கேசன் மருகா எனவே
... களிப்புடன் நெருப்பு
அம்பை வீசும் வலிமை வாய்ந்த வில், சக்கரம், சங்கு ஆகிய ஆயுதங்களைக்
கையில் ஏந்தியவனும், லக்ஷ்மியை மார்பில் தரித்தவனுமான ஹரி, கேசவன்
ஆகிய திருமாலின் மருகனே என்று

ஓத மறை ராமெசுர மேவும் குமரா ... வேதங்கள் ஓதிப் புகழும்
இராமேசுரத்தில் வீற்றிருக்கும் குமரனே,

அமரர் பெருமாளே. ... தேவர்களின் பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.1411  pg 2.1412  pg 2.1413  pg 2.1414  pg 2.1415  pg 2.1416 
 pg 2.1417  pg 2.1418 
 WIKI_urai Song number: 987 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss

Song 983 - vAla vayadhAgi (ramEswaram)

vAlavaya thAkiyazha kAkimatha nAkipaNi
     vANipamo dAdimaru LAdiviLai yAdivizhal
          vAzhvusatha mAkivalu vAkimada kUdamodu ...... poruLthEdi

vAsapuzhu kEdumala rOdumana mAkimakizh
     vAsanaika LAthiyida lAkimaya lAkivilai
          mAtharkaLai mEviyava rAsaithani lEsuzhala ...... silanALpOyth

thOlthiraika LAkinarai yAkikuru dAkiyiru
     kAlkaLthadu mARisevi mARipasu pAsapathi
          sUzhkathikaL mARisuka mARithadi yOduthiri ...... yuRunALiR

cUlaisoRi yeeLaivali vAthamodu neerizhivu
     sOkaikaLa mAlaisura mOdupiNi thURirumal
          sUzhaluRa mUlakasu mAlamena nARiyuda ...... lazhivEnO

nAlumuka nAthiyari yOmena athAramurai
     yAthapira mAvaivizha mOthiporu LOthukena
          nAlusira mOdusikai thULipada thALamidu ...... miLaiyOnE

nARithazhi vENisiva rUpakali yANimuthal
     eeNamaka vAnaimakizh thOzhavana meethuseRi
          njAnakuRa mAthaithina kAvilmaNa mEvupukazh ...... mayilveerA

Olamidu thAdakaisu vAkuvaLa rEzhumaram
     vAliyodu neelipaka nOdoruvi rAthanezhu
          mOthakada lOduviRal rAvaNaku zhAmamaril ...... podiyAka

Okaithazhal vALividu mUrithanu nEmivaLai
     pANithiru mArpanari kEsanmaru kAenave
          yOthamaRai rAmesura mEvukuma rAvamarar ...... perumALE.

......... Meaning .........

vAla vayathAki azhakAki mathanAki: Growing up into a robust youth, looking handsome like Manmathan, the God of Love;

paNi vANipamOdu Adi maruLAdi viLaiyAdi: undertaking profitable business assignments; becoming deluded and playing quite a few love games;

vizhal vAzhvu sathamAki valuvAki mada kUdamOdu poruL thEdi: thinking that this wasteful life would last; seeking wealth to be a rich man owning palatial houses with balconies and halls;

vAsa puzhuku Edu malarOdu manamAki: setting my heart on fragrant musk and flowers with petals;

makizh vAsanaikaL Athi idal Aki mayalAki: happily applying lavish perfumes over my body and rambling about fanatically;

vilai mAtharkaLai mEvi avar Asai thanilE suzhala sila nAL pOy: running after whores chasing them around with passion; after several days of such wasteful life,

thOl thiraikaL Aki naraiyAki kurudAki: noticing wavy wrinkles on my skin; my hair turning grey; losing my eyesight;

iru kAlkaL thadumARi sevi mARi: both my legs tottering; my ears losing their hearing power;

pasu pAsa pathi sUzh kathikaL mARi sukam mARi: my abilty to discern distinctly the diverse principles of life, God and bondage gone; my happiness lost;

thadiyOdu thiri uRu nALil: old age creeping in, and moving around leaning on a stick;

cUlai soRi eeLai vali vAthamOdu neerizhivu: stomach ache, rashes, phlegm, wheezing, diseases caused by gastritis, diabetes,

sOkaikaLa mAlai suramOdu piNi thURirumal: anaemia, ring worm around my neck, high fever, whooping cough -

sUzhal uRa mUula kasumAlam ena nARi udal azhivEnO: all these closing in on me; and the basic container of these diseases, namely, my filthy body emitting a foul odour; should I have to die like this?

nAlumukan Athi ari Om ena athAram uraiyAtha piramAvai: He has four faces; He was unable to interpret the meaning of the PraNava ManthrA which is the fundamental principle for everything; He is BrahmA;

vizha mOthi poruL Othuka ena nAlu siramOdu sikai thULipada thALam idum iLaiyOnE: You knocked Him down demanding to know the correct meaning of that ManthrA and forcefully hit His four heads with Your knuckles, blowing apart His faces and tufts, like beating the drums, Oh Young One!

nARu ithazhi vENi siva rUpa kaliyANi muthal eeNa makavAnai makizh thOzha: You are the friendly brother of GaNapathi, the first-born of DEvi PArvathi, concorporate with the body of Lord SivA who wears the fragrant kondRai (Indian laburnum) flower on His matted hair!

vanam meethu seRi njAna kuRa mAthai thina kAvil maNamEvu pukazh mayil veerA: She was happily residing in the forest of Mount VaLLimalai; She was the wise damsel of the kuRavAs; and You have the honour of marrying that VaLLi in the grove surrounded by the millet fields, Oh valorous One mounting the peacock!

Olam idu thAdakai suvAku vaLar Ezhu maram: The shrieking She-demon ThAdakai, SubAgu, tall trees of maRamaram numbering seven,

vAliyOdu neeli pakanOdu oru virAthan ezhum Otha kadalOdu viRal rAvaNa kuzhAm amaril podiyAka: VAli, Neeli, Bagan, unique demon VirAthan, the seas with rising waves and, in addition, the entire clan of mighty RAvaNA were all destroyed by Him in the war and shattered to pieces;

Okai thazhal vALividu mUri thanu nEmi vaLai pANi thiru mArpan ari kEsan marukA Otha maRai enavE: He merrily holds in His hands the bow that shoots fiery arrows, the disc and the conch-shell; He holds Goddess Lakshmi on His hallowed chest; He is Lord VishNU known as Hari and KEsavan; You are His nephew; You are thus praised by the VEdAs!

rAmesura mEvum kumarA: Oh KumarA! You have Your abode in RAmeswaram!

amarar perumALE.: You are the Lord of the Celestials, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 983 vAlavayadhAgi - rAmEsuram

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]