பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1412

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராமேசுரம்) திருப்புகழ் உரை 853 போர்ச் செருக்குள்ள தேகத்தையுடைய கூட்டமான (பரி) குதிரைகளும். (உம்பல்) யானைகளும், (இறந்து) குப்பை களாகவும், அசுரர்களுடைய பிணங்கள் எட்டுத்திக்குகளையும் மூடி அவர்களின் ரத்தத்தால் திசைகளெல்லாம் செந்நிற மடையவும, (எட்டுத்) திக்குகளி லுள்ள யானைகள் (அவுடகஜங்கள்) அயர்ந்து அசைவு உறச் சிலசில பம்பை (பறைவகை) என்னும் வாத்திய்ங்கள் தத்தன தானத் தடுடுடு என்று ஒலிக்க, (செப்பறை தாளம்-தாளம் செப்பு அறை) தாளங்கள் ஒலிக்கும் ஒலி தொகு தொகு என்று ஒலிக்கச், சிலபேரி முரசு) வர்த்தியங்கள் (தடிபடு சம்பத்து உற்பனமாக) இடி இடிப்பதுபோலவும், மின்னல் மின்னுவதுபோல்வும் தோற்றம் கொடுக்க காட்சியை அளிக்க, அற்புதமான (மாகத்து) விண்ணுலகத்துத் தேவர்கள் தங்கள் ஊர் (பொன்னுலக்த்தைத்) திரும்பப் பெற்று, அவ்வூருக்கு உள்ள செல்வங்களையுமடைந்து (புஷபமாரியாகப்) பொன் மலர்களைச் சிந்தச் செலுத்தின வேலாயுதத்தை யுடையவனே! உண்மைப் பொருளை அறிந்த ஞானியாம் குறமகள் வள்ளியும். (உம்பல்) யானை (ஐராவதம்) வளர்த்த (சித்திரை) அழகை உடையவளாம் தேவசேனையும்,(நீடு)மேம்பட்ட அந்த வர்கனமாம் மயிலும், சந்நிதியில் ளங்கப் பெற்று உத்தர கோசமங்கை என்னுந் தலத்தில் வீற்றிருக்கின்ற கந்தப் பெருமாளே! (ஞான அமுதை உண்டிட்டிடுவேனோ) இராமேசுரம் 987. பால்ய வயதை (கட்டிளமை வயதை) அடைந்து அழி. நிரம்பப் பெற்று, (ம்தனாகி) மன்மதன்போல விளங்கி, ப வாணிபமொடு ஆடி, வாணிபப் பணியொடு ஆடி ஊதியத்தை (ன்பத்தைத்) தரவல்ல பல தொழில்களை மேற்கொன்டு நடத்தி, (மருளாடி) மருட்சி மயக்க அறிவைப் பெற்றுக், (கலவியிற்) காலம் போக்கி, விழல் வாழ்வு சதமாகி பயனற்ற வாழ்க்கையையே நித்தியமெனக்கொண்டு, அத்தகைய வாழ்விலேயே மனது உறுதிபெற்று, மாடகூடம் கொண் செல்வனாய்ப் பொருளைத் தேடி.