திருப்புகழ் 927 முட்ட மருட்டி  (கருவூர்)
Thiruppugazh 927 muttamarutti  (karuvUr)
Thiruppugazh - 927 muttamarutti - karuvUrSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தத்தன தத்த தனதன, தத்தன தத்த தனதன
     தத்தன தத்த தனதனத் ...... தனதான

......... பாடல் .........

முட்டம ருட்டி யிருகுழை தொட்டக டைக்க ணியலென
     மொட்பைவி ளைத்து முறையளித் ...... திடுமாதர்

முத்தமி ரத்ந மரகதம் வைத்தவி சித்ர முகபட
     மொச்சிய பச்சை யகில்மணத் ...... தனபாரம்

கட்டிய ணைத்து நகநுதி பட்டக ழுத்தி லிறுகிய
     கைத்தல மெய்த்து வசனமற் ...... றுயிர்சோருங்

கட்டமு யக்கி னநுபவம் விட்டவி டற்கு நியமித
     கற்பனை பக்ஷ முடனளித் ...... தருளாதோ

வெட்டிய கட்க முனைகொடு வட்டகு ணத்து ரணமுக
     விக்ரம வுக்ர வெகுவிதப் ...... படைவீரா

வெற்றியை யுற்ற குறவர்கள் பெற்றகொ டிக்கு மிகமகிழ்
     வித்தக சித்த வயலியிற் ...... குமரேசா

கிட்டிய பற்கொ டசுரர்கள் மட்டற வுட்க வடலொடு
     கித்திந டக்கு மலகைசுற் ...... றியவேலா

கெட்டவ ருற்ற துணையென நட்டருள் சிட்ட பசுபதி
     கெர்ப்பபு ரத்தி லறுமுகப் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

முட்ட மருட்டி இரு குழை தொட்ட கடைக் கண் இயல் என
மொட்பை விளைத்து முறை அளித்திடு மாதர்
... மயக்குவதாகி
இரண்டு காதின் குண்டலங்களையும் தொடுகின்ற கடைக் கண்ணின்
தன்மை இதுவே என்று (காண்போர்) உள்ளத்தைக் கவர்ந்து உறவு
முறையைக் கூட்டி வைக்கும் பொது மகளிர்களின்,

முத்தம் இரத்ந மரகதம் வைத்த விசித்ர முகபட(ம்) மொச்சிய
பச்சை அகில் மணத் தன பாரம் கட்டி அணைத்து நகநுதி
பட்ட கழுத்தில் இறுகிய கைத் தலம் எய்த்து
... முத்து, ரத்தினம்,
மரகதம் இவை வைத்து ஆக்கப்பட்ட விநோதமான மேலாடை இறுக்கச்
சுற்றியுள்ள, பூசிய அகிலின் நறு மணம் கொண்ட மார்புப் பாரங்களைக்
கட்டிப் பிடித்துத் தழுவி, நகங்களின் நுனி பட்டுள்ள கழுத்தில்
அழுத்தமாக அணைத்த கைகள் சோர்ந்து,

வசனம் அற்று உயிர் சோரும் கட்ட(ம்) முயக்கின் அநுபவம்
விட்ட விடற்கு நியமித கற்பனை பக்ஷமுடன் அளித்து
அருளாதோ
... பேச்சும் அற்றுப்போய், உயிரும் சோரும்படியான
கடினமான புணர்தலின் அனுபவத்தை விட்டு ஒழித்த தூர்த்த
காமுகனாகிய எனக்கு, வகைப்பட்ட ஒழுக்க நெறி ஒன்றை (உன்
திருவடியை) அன்புடனே தந்து அருள்வாயாக.

வெட்டிய கட்கம் முனை கொ(ண்)டு அட்ட குணத்து ரணமுக
விக்ரம உக்ர வெகு விதப் படை வீரா
... வெட்ட வல்ல வாளின்
முனையைக் கொண்டு (பகைவர்களை) அழித்த குணம் கொண்ட
வீரனே, போர்க் களத்தில் வலிமையாளனே, கோபம் கொள்பவனே,
பலவிதமான படை வீரனே,

வெற்றியை உற்ற குறவர்கள் பெற்ற கொடிக்கு மிக மகிழ்
வித்தக சித்த வயலியில் குமரேசா
... வெற்றியைப் பெறுகின்ற
வேடர்கள் பெற்ற கொடி போன்ற வள்ளியின் மீது மிகவும் மகிழ்ச்சி
கொண்ட பேரறிஞனே, சித்த* மூர்த்தியே, வயலூரில் வீற்றிருக்கும்
குமரேசனே,

கிட்டிய பல் கொ(ண்)டு அசுரர்கள் மட்டு அற உட்க
அடலோடு கித்தி நடக்கும் அலகை சுற்றிய வேலா
...
(அச்சத்தால்) பற்கள் ஒன்றோடொன்று பட்டு இறுகும்படி அசுரர்கள்
அளவு கடந்து பயப்பட, வலிமையோடு ஒற்றைக் காலால் தாவி நடக்கும்
பேய்கள் சூழ்ந்துள்ள வேலனே,

கெட்டவர் உற்ற துணை என நட்டு அருள் சிட்ட பசுபதி
கெர்ப்ப புரத்தில் அறு முகப் பெருமாளே.
... (நான் என்னும்
ஆணவம்) அழிந்தவர்களுக்கு உற்ற துணையாக இருந்து, அவர்களை
விரும்பி திருவருள் பாலிக்கும் மேலானவனே, பசுபதீசுரர் என்னும் நாமம்
படைத்த சிவபெருமானுடைய தலமாகிய கெர்ப்ப புரத்தில் (கருவூர்**
என்னும் ஊரில்) வீற்றிருக்கும் ஆறுமுகப் பெருமாளே.


* சித்தன் - இது முருகன் திருநாமங்களில் ஒன்று, சித்தத்தை நிறைப்பவன்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.1269  pg 2.1270  pg 2.1271  pg 2.1272 
 WIKI_urai Song number: 931 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 927 - mutta marutti (karuvUr)

muttama rutti yirukuzhai thottaka daikka Niyalena
     motpaivi Laiththu muRaiyaLith ...... thidumAthar

muththami rathna marakatham vaiththavi chithra mukapada
     mocchiya pacchai yakilmaNath ...... thanapAram

kattiya Naiththu nakanuthi pattaka zhuththi liRukiya
     kaiththala meyththu vasanamat ...... RuyirsOrung

kattamu yakki nanupavam vittavi daRku niyamitha
     kaRpanai paksha mudanaLith ...... tharuLAthO

vettiya katka munaikodu vattaku Naththu raNamuka
     vikrama vukra vekuvithap ...... padaiveerA

vetRiyai yutRa kuRavarkaL petRako dikku mikamakizh
     viththaka chiththa vayaliyiR ...... kumarEsA

kittiya paRko dasurarkaL mattaRa vutka vadalodu
     kiththina dakku malakaisut ...... RiyavElA

kettava rutRa thuNaiyena nattaruL sitta pasupathi
     kerppapu raththi laRumukap ...... perumALE.

......... Meaning .........

mutta marutti iru kuzhai thotta kadaik kaN iyal ena motpai viLaiththu muRai aLiththidu mAthar: Showing the nature of their tantalising eyes that roll from corner to corner and touch the swinging studs on both ears, these whores captivate the hearts (of their suitors);

muththam irathna marakatham vaiththa vichithra mukapada(m) mocchiya pacchai akil maNath thana pAram katti aNaiththu nakanuthi patta kazhuththil iRukiya kaith thalam eyththu: their strange upper garment, interwoven with pearls, gems and emerald stones, is tightly wrapped around their huge bosom, fragrant with the aroma of fresh incence; hugging those breasts, with two aching arms firmly joining hands around their neck bearing nail-marks,

vasanam atRu uyir sOrum katta(m) muyakkin anupavam vitta vidaRku niyamitha kaRpanai pakshamudan aLiththu aruLAthO: with speech coming to a halt and life tottering, I have given up that experience of fierce physical copulation; to such a despicable scoundrel of lust, kindly show (me) the path of righteous discipline (namely, Your hallowed feet), Oh Lord!

vettiya katkam munai ko(N)du atta kuNaththu raNamuka vikrama ukra veku vithap padai veerA: You are the Valorous One who has destroyed the enemies with the sharp edge of Your sword! You are the strongest in the battlefield! You are incensed with anger! You have the dexterity of using many a weapon, Oh Lord!

vetRiyai utRa kuRavarkaL petRa kodikku mika makizh viththaka chiththa vayaliyil kumarEsA: Oh Wizard, You dote on VaLLi, the creeper-like damsel of the triumphant hunters! Oh Lord ChiththA*! You are seated in VayalUr, Oh Lord KumarA!

kittiya pal ko(N)du asurarkaL mattu aRa utka adalOdu kiththi nadakkum alakai sutRiya vElA: Making the teeth of the demons rattle out of extreme fear, You brandished Your spear around which the fiends thronged strongly, all of them limping on lone leg, Oh Lord!

kettavar utRa thuNai ena nattu aruL sitta pasupathi kerppa puraththil aRu mukap perumALE.: You are the close companion of those who have destroyed their arrogance, and You protect them happily showering Your blessings, Oh Supreme One! In this town, called KaruvUr** (known as the Shrine of Womb), ruled by Lord SivA with the name Pasupatheesurar, You are also seated with Your six hallowed faces, Oh Great One!


* Chiththan - is another name of Lord Murugan, meaning the Lord who fills the heart.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 927 mutta marutti - karuvUr

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]