திருப்புகழ் 921 வாசனை மங்கையர்  (திருப்பராய்த்துறை)
Thiruppugazh 921 vAsanaimangkaiyar  (thirupparAiththuRai)
Thiruppugazh - 921 vAsanaimangkaiyar - thirupparAiththuRaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தானன தந்தன தாத்த தத்தன
     தானன தந்தன தாத்த தத்தன
          தானன தந்தன தாத்த தத்தன ...... தனதான

......... பாடல் .........

வாசனை மங்கையர் போற்று சிற்றடி
     பூஷண கிண்கிணி யார்ப்ப ரித்திட
          மாமலை ரண்டென நாட்டு மத்தக ...... முலையானை

வாடைம யங்கிட நூற்ற சிற்றிழை
     நூலிடை நன்கலை தேக்க இக்குவில்
          மாரன்வி டுங்கணை போற்சி வத்திடு ...... விழியார்கள்

நேசிகள் வம்பிக ளாட்ட மிட்டவர்
     தீயர்வி ரும்புவர் போற்சு ழற்றியெ
          நீசனெ னும்படி யாக்கி விட்டொரு ...... பிணியான

நீரின்மி குந்துழ லாக்கை யிற்றிட
     யோகமி குந்திட நீக்கி யிப்படி
          நீயக லந்தனில் வீற்றி ருப்பது ...... மொருநாளே

தேசம டங்கலு மேத்து மைப்புய
     லாயநெ டுந்தகை வாழ்த்த வச்சிர
          தேகமி லங்கிய தீர்க்க புத்திர ...... முதல்வோனே

தீரனெ னும்படி சாற்று விக்ரம
     சூரன டுங்கிட வாய்த்த வெற்புடல்
          தேயந டந்திடு கீர்த்தி பெற்றிடு ...... கதிர்வேலா

மூசளி பம்பிய நூற்றி தழ்க்கம
     லாசனன் வந்துல காக்கி வைத்திடு
          வேதன கந்தையை மாற்றி முக்கண ...... ரறிவாக

மூதறி வுந்திய தீக்ஷை செப்பிய
     ஞானம்வி ளங்கிய மூர்த்தி யற்புத
          மூவரி லங்குப ராய்த்து றைப்பதி ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

வாசனை மங்கையர் போற்று(ம்) சிற்றடி பூஷண கிண்கிணி
ஆர்ப்பரித்திட
... நறு மணம் கொண்ட விலைமாதர்களின் விரும்பத்தக்க
சிற்றடியில் ஆபரணமாய் விளங்கும் பாத சதங்கை ஒலி செய்ய,

மா மலை (இ)ரண்டு என நாட்டு மத்தக முலை யானை
வாடை மயங்கிட நூற்ற சிற்று இழை நூல் இடை நன் கலை
தேக்க
... அழகிய மலைகள் இரண்டு என்று சொல்லும்படியாக
நிறுத்தப்பட்டு, மத்தகத்தைக் கொண்ட யானை போன்ற மார்பின்
வாசனை கலந்து சேர, நூற்கப்பட்ட மெல்லிய இழை நூலை ஒத்த
இடையில் அழகிய ஆடை நிறைந்து விளங்க,

இக்கு வில் மாரன் விடும் கணை போல் சிவத்திடு விழியார்கள்
நேசிகள் வம்பிகள் ஆட்டம் இட்டவர் தீயர்
... கரும்பு வில்லை
ஏந்திய மன்மதன் ஏவும் தாமரைப் பூவைப் போல் சிவந்து விளங்கும்
கண்களை உடையவர்கள். யாருடனும் நேசம் பாராட்டுபவர்கள்.
பயனிலிகள். (வந்தவரை) பலவிதமான கூத்தாட்டங்கள் ஆடும்படி
ஆட்டுவிப்பவர்கள். பொல்லாதவர்கள்.

விரும்புவர் போல் சுழற்றியே நீசன் எனும்படி ஆக்கி விட்டு
ஒரு பிணியான நீரின் மிகுந்து உழல் ஆக்கையில்
... விரும்பி
நேசிப்பவர் போல் அலைய வைத்து இழிந்தோன் என்னும்படி என்னை
ஆக்கிவிட்டு ஒரு நோயாளன் என்னும்படியான நிலைமையில் விடப்பட்டு
நிரம்பவும் சுழன்று வேதனைப்படும் இந்த உடலில்,

திட யோகம் மிகுந்திட நீக்கி இப்படி நீ அகலந்தனில்
வீற்றிருப்பதும் ஒரு நாளே
... கலங்காத சிவ யோக நிலை மேம்பட்டு
எழ, என்னை கெட்ட நெறியின்று விலக்கி, இந்தக் கணமே நீ என்னுடைய
மார்பகத்தில் வீற்றிருக்கும் ஒப்பற்ற நாள் எனக்கு விடியுமா?

தேசம் அடங்கலும் ஏத்து(ம்) மைப் புயல் ஆய நெடும் தகை
வாழ்த்த வச்சிர தேகம் இலங்கிய தீர்க்க புத்திர
முதல்வோனே
... தேசம் எல்லாம் போற்றும் கரிய மேக நிறத்தினனான
பெருந்தகையாகிய திருமால் வாழ்த்த, அழியாத திருமேனி விளங்கும்
பூரணனாகிய சிவபெருமானின் மகனே, முதல்வனே,

தீரன் எனும்படி சாற்று விக்ரம சூரன் நடுங்கிட வாய்த்த
வெற்பு உடல் தேய நடந்திடு கீர்த்தி பெற்றிடு கதிர் வேலா
...
வீரன் என்னும்படி பேர் பெற்றிருந்த வலிமையாளனே, சூரன் நடுங்கும்படி,
வரத்தினால் கிடைத்த அவனது மலை போன்ற உடல் தேய்ந்து ஒழியும்படி,
(போரை) நடத்தி புகழை அடைந்த ஒளி வீசும் வேலனே,

மூசு அளி பம்பிய நூற்று இதழ்க் கமல ஆசனன் வந்து உலகு
ஆக்கி வைத்திடு வேதன் அகந்தையை மாற்றி
... மொய்க்கின்ற
வண்டுகள் நிறைந்த நூறு இதழ்களைக் கொண்ட தாமரை மலரில்
வீற்றிருப்பவனும், தோன்றி உலகங்களைப் படைத்து
வைத்துள்ளவனுமாகிய, வேதம் ஓதும் பிரமனுடைய ஆணவத்தை நீக்கி,

முக்க(ண்)ணர் அறிவாக மூது அறிவு உந்திய தீக்ஷை செப்பிய
ஞானம் விளங்கிய மூர்த்தி
... முக்கண்ணராகிய சிவ பெருமான்
தெரிந்து கொள்ளும்படி பேரறிவு விளங்கிய உபதேச மொழியைச் சொன்ன
ஞான ஒளி வீசும் மூர்த்தியே,

அற்புத மூவர் இலங்கு பராய்த்துறை பதி பெருமாளே. ...
அற்புதக் கடவுளராகிய (பிரமன், திருமால், சிவன் ஆகிய) திரிமூர்த்திகளும்
விளங்குகின்ற திருப்பராய்த்துறை* என்னும் பதியில் வீற்றிருக்கும்
பெருமாளே.


* திருப்பராய்த்துறை திருச்சிக்கு அருகில் உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.1253  pg 2.1254  pg 2.1255  pg 2.1256 
 WIKI_urai Song number: 925 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 921 - vAsanai mangkaiyar (thirupparAyththuRai)

vAsanai mangaiyar pOtRu sitRadi
     pUshaNa kiNkiNi yArppa riththida
          mAmalai raNdena nAttu maththaka ...... mulaiyAnai

vAdaima yangida nUtRa sitRizhai
     nUlidai nankalai thEkka ikkuvil
          mAranvi dungaNai pORchi vaththidu ...... vizhiyArkaL

nEsikaL vampika LAtta mittavar
     theeyarvi rumpuvar pORchu zhatRiye
          neesane numpadi yAkki vittoru ...... piNiyAna

neerinmi kunthuzha lAkkai yitRida
     yOkami kunthida neekki yippadi
          neeyaka lanthanil veetRi ruppathu ...... morunALE

thEsama dangalu mEththu maippuya
     lAyane dunthakai vAzhththa vacchira
          thEkami langiya theerkka puththira ...... muthalvOnE

theerane numpadi sAtRu vikrama
     cUrana dungida vAyththa veRpudal
          thEyana danthidu keerththi petRidu ...... kathirvElA

mUsaLi pampiya nUtRi thazhkkama
     lAsanan vanthula kAkki vaiththidu
          vEthana kanthaiyai mAtRi mukkaNa ...... raRivAka

mUthaRi vunthiya theekshai seppiya
     njAnamvi Langiya mUrththi yaRputha
          mUvari langupa rAyththu Raippathi ...... perumALE.

......... Meaning .........

vAsanai mangaiyar pOtRu(m) sitRadi pUshaNa kiNkiNi Arppariththida: The beads in the anklets adorning the attractive and petite feet of the fragrant whores make a jingling sound;

mA malai (i)raNdu ena nAttu maththaka mulai yAnai vAdai mayangida nUtRa sitRu izhai nUl idai nan kalai thEkka: standing erect like two beautiful mountains and looking like the protuberence on the temple of the elephant, their breasts exude a nice scent; their waist, slender like a spun thread, is wrapped around with a beautiful and flashy attire;

ikku vil mAran vidum kaNai pOl sivaththidu vizhiyArkaL nEsikaL vampikaL Attam ittavar theeyar: Their eyes are red like lotus that has been shot as an arrow by Manmathan, God of Love, from his bow of sugarcane; they befriend anyone in an openly demonstrative manner; these vain whores are capable of making (their suitors) dance in many ways; they are wicked;

virumpuvar pOl suzhatRiyE neesan enumpadi Akki vittu oru piNiyAna neerin mikunthu uzhal Akkaiyil: misleading me as if they are extremely loving, they make me roam about and finally discard me as if I am a debased sick man; in this body that has been miserably battered,

thida yOkam mikunthida neekki ippadi nee akalanthanil veetRiruppathum oru nALE: I wish to raise the unruffled state of Siva YOgA by being deflected from the unrighteous path; for that, You have to be seated in my heart right this moment; will such a unique day dawn for me?

thEsam adangalum Eththu(m) maip puyal Aya nedum thakai vAzhththa vacchira thEkam ilangiya theerkka puththira muthalvOnE: The entire world is in praise of the great Lord VishNu, with the complexion of dark cloud, who worships You; and You are the son of Lord SivA with an immortal and hallowed body, Oh Primeval One!

theeran enumpadi sAtRu vikrama cUran nadungida vAyththa veRpu udal thEya nadanthidu keerththi petRidu kathir vElA: You are a famous and strong warrior, Oh Lord! Making the demon SUran tremble with fear and destroying his mountain-like body that he obtained through boons bestowed upon him, You fought the war wielding Your eminent and dazzling spear, Oh Lord!

mUsu aLi pampiya nUtRu ithazhk kamala Asanan vanthu ulaku Akki vaiththidu vEthan akanthaiyai mAtRi: He is seated on the lotus with a hundred petals, swarmed by the beetles; He materialised in this universe to create all the worlds; He chants the VEdAs; You removed the arrogance of that Lord BrahmA;

mukka(N)Nar aRivAka mUthu aRivu unthiya theeAxa seppiya njAnam viLangiya mUrththi: and You preached to the three-eyed Lord SivA, in a lucid manner, the essence of the VEdic principle of great knowledge, Oh Lord who radiates wisdom!

aRputha mUvar ilangu parAyththuRai pathi perumALE.: The marvellous Trinity (BrahmA, VishNu and SivA) are seated in this place, ThirupparAyththuRai*, which is also Your abode, Oh Great One!


* ThirupparAyththuRai is near Thirucchi.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 921 vAsanai mangkaiyar - thirupparAiththuRai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]