திருப்புகழ் 886 மரு உலாவிடும்  (சப்தஸ்தானம்)
Thiruppugazh 886 maruulAvidum  (sabdhasdhAnam)
Thiruppugazh - 886 maruulAvidum - sabdhasdhAnamSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனன தானன தான தனத்தன
     தனன தானன தான தனத்தன
          தனன தானன தான தனத்தன ...... தனதான

......... பாடல் .........

மருவு லாவிடு மோதி குலைப்பவர்
     சமர வேலெனு நீடு விழிச்சியர்
          மனதி லேகப டூரு பரத்தைய ...... ரதிகேள்வர்

மதன னோடுறழ் பூச லிடைச்சியர்
     இளைஞ ராருயிர் வாழு முலைச்சியர்
          மதுர மாமொழி பேசு குணத்தியர் ...... தெருமீதே

சருவி யாரையும் வாவெ னழைப்பவர்
     பொருளி லேவெகு ஆசை பரப்பிகள்
          சகல தோதக மாயை படிப்பரை ...... யணுகாதே

சலச மேவிய பாத நினைத்துமுன்
     அருணை நாடதி லோது திருப்புகழ்
          தணிய வோகையி லோத எனக்கருள் ...... புரிவாயே

அரிய கானக மேவு குறத்திதன்
     இதணி லேசில நாளு மனத்துடன்
          அடவி தோறுமெ வாழி யல்பத்தினி ...... மணவாளா

அசுரர் வீடுகள் நூறு பொடிப்பட
     உழவர் சாகர மோடி யொளித்திட
          அமரர் நாடுபொன் மாரி மிகுத்திட ...... நினைவோனே

திருவின் மாமர மார்ப ழனப்பதி
     அயிலு சோறவை யாளு துறைப்பதி
          திசையி னான்மறை தேடி யமுற்குடி ...... விதியாதிச்

சிரமு மாநிலம் வீழ்த ருமெய்ப்பதி
     பதும நாயகன் வாழ்ப திநெய்ப்பதி
          திருவை யாறுட னேழு திருப்பதி ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

மரு உலாவிடும் ஓதி குலைப்பவர் ... நறுமணம் உலவும் கூந்தலை
வேண்டுமென்றே அவிழ்ப்பவர்கள்,

சமர வேல் எனு(ம்) நீடு விழிச்சியர் ... போருக்கு உற்ற வேல் என்று
சொல்லத் தக்க நீண்ட கண்களை உடையவர்கள்,

மனதிலே கபடு ஊரு பரத்தையர் ... உள்ளத்தில் வஞ்சனை
ஊர்கின்ற வேசியர்கள்,

ரதி கேள்வர் மதனனோடு உறழ் பூசல் இடைச்சியர் ... ரதியின்
கணவனான மன்மதனுக்கு ஒப்பானதும்*, போருக்கு ஏற்றதுமான
இடையை உடையவர்கள்,

இளைஞர் ஆருயிர் வாழும் முலைச்சியர் ... இளைஞர்களின்
அருமையான உயிர் தங்கி வாழ்கின்ற மார்பகங்களை உடையவர்கள்,

மதுர மா மொழி பேசு(ம்) குணத்தியர் ... இனிமையான பெரிய
பேச்சுக்களைப் பேசும் குணம் கொண்டவர்கள்,

தெரு மீதே சருவி யாரையும் வா என அழைப்பவர் ... தெருவில்
கொஞ்சிக் குலாவி யாரையும் (வீட்டுக்கு) வரும்படி அழைப்பவர்கள்,

பொருளிலே வெகு ஆசை பரப்பிகள் ... பொருள் பெறுவதிலேயே
மிக்க ஆசை பரந்துள்ள மனத்தினர்கள்,

சகல தோதக மாயை படிப்பரை அணுகாதே ... எல்லா விதமான
வஞ்சக மாய வித்தைகளையும் கற்றவர்களாகிய வேசியரை நான்
நெருங்காமல்,

சலசம் மேவிய பாத(ம்) நினைத்து முன் அருணை நாடு
அதில் ஓது திருப்புகழ்
... தாமரையை ஒத்த உனது திருவடியைத்
தியானித்து, முன்பு திருவண்ணாமலை நாட்டில் நான் ஓதிய திருப்புகழை

தணிய ஓகையில் ஓத எனக்கு அருள் புரிவாயே ... மனம் குளிர
மகிழ்ச்சியுடன் (எப்போதும்) ஓதும்படியான பாக்கியத்தை எனக்கு அருள்
புரிவாயாக.

அரிய கானகம் மேவும் குறத்தி தன் இதணிலே சில நாளு(ம்)
மனத்துடன் அடவி தோறுமெ வாழ் இயல் பத்தினி
மணவாளா
... அருமையான (வள்ளி மலைக்) காட்டில் இருந்த
குறப்பெண்ணின் பரண் மீது சிறிது காலம் மனம் வைத்து, (சந்தனக்காடு,
சண்பகக் காடு முதலிய) பல காடுகள் தோறும் வாழ்ந்து உலவிய பத்தினி
வள்ளியின் காதல் கணவனே,

அசுரர் வீடுகள் நூறு பொடிப் பட உழவர் சாகரம் ஓடி
ஒளித்திட அமரர் நாடு பொன் மாரி மிகுத்திட
நினைவோனே
... அசுரர்கள் இருப்பிடம் யாவும் பொடியாக, அசுரப்
படை வீரர்கள் கடலுள் ஓடி ஒளிந்து கொள்ள, தேவர்களின்
பொன்னுலகத்தில் பொன் மழை மிகப் பொழிய நினைந்து உதவியவனே,

திருவின் மா மரம் ஆர் பழனப் பதி அயிலும் சோறவை
ஆளு(ம்) துறைப் பதி
... லக்ஷ்மிகரம் பொருந்திய பெரிய மாமரங்கள்
நிறைந்த திருப்பழனம் [1] என்னும் தலம், உண்பதற்குரிய
திருச்சோற்றுத்துறை [2] என்ற தலம்,

திசையில் நான் மறை தேடிய முன் குடி ... திசைகள் தோறும்
நான்கு வேதங்கள் (ஈசனைத்) தேடி அடைந்த பழம் பதியாகிய
திருவேதிக்குடி [3] என்ற தலம்,

விதி ஆதிச் சிரமும் மா நிலம் வீழ் தரு மெய்ப்பதி ...
பிரமனுடைய முதல் (உச்சித்) தலை பெரிய பூமியில் (சிவபிரானால்)
கிள்ளி வீழ்த்தப்பட்ட திருக்கண்டியூர் [4] என்ற தலம்,

பதும நாயகன் வாழ் பதி நெய்ப்பதி திருவையாறுடன் ஏழு
திருப்பதி பெருமாளே.
... தாமரையில் வாழும் நாயகனான சூரியன்
பூஜித்து வாழ்ந்த ஊராகிய திருப்பூந்துருத்தி [5] என்ற தலம்,
திருநெய்த்தானம் [6], திருவையாறு [7] என்ற தலங்களுடன், ஏழு
திருப்பதிகளில் (சப்தஸ்தானத்தில்**) வாழ்கின்ற பெருமாளே.


* இடைக்கு மன்மதனை உவமித்த காரணம், மன்மதன் சிவசாபம் காரணமாக
அருவமாக இருப்பதால் கண்ணுக்குத் தெரியான், பெண்களின் இடை மெலிந்து
அருவமாக இருப்பதால் கண்ணுக்குத் தெரியாது.


** இவை திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிக்குடி, திருக்கண்டியூர்,
திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம், திருவையாறு என்னும் ஏழு தலங்கள்
- தஞ்சாவூருக்கு அருகில் உள்ளன.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.1157  pg 2.1158  pg 2.1159  pg 2.1160  pg 2.1161  pg 2.1162 
 WIKI_urai Song number: 890 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 886 - maru ulAvidum (sapthasthAnam)

maruvu lAvidu mOthi kulaippavar
     samara vElenu needu vizhicchiyar
          manathi lEkapa dUru paraththaiya ...... rathikELvar

mathana nOduRazh pUsa lidaicchiyar
     iLainja rAruyir vAzhu mulaicchiyar
          mathura mAmozhi pEsu kuNaththiyar ...... therumeethE

saruvi yAraiyum vAve nazhaippavar
     poruLi lEveku Asai parappikaL
          sakala thOthaka mAyai padipparai ...... yaNukAthE

salasa mEviya pAtha ninaiththumun
     aruNai nAdathi lOthu thiruppukazh
          thaNiya vOkaiyi lOtha enakkaruL ...... purivAyE

ariya kAnaka mEvu kuRaththithan
     ithaNi lEsila nALu manaththudan
          adavi thORume vAzhi yalpaththini ...... maNavALA

asurar veedukaL nURu podippada
     uzhavar sAkara mOdi yoLiththida
          amarar nAdupon mAri mikuththida ...... ninaivOnE

thiruvin mAmara mArpa zhanappathi
     ayilu sORavai yALu thuRaippathi
          thisaiyi nAnmaRai thEdi yamuRkudi ...... vithiyAthi

siramu mAnilam veezhtha rumeyppathi
     pathuma nAyagan vAzhpa thineyppathi
          thiruvai yARuda nEzhu thiruppathi ...... perumALE.

......... Meaning .........

maru ulAvidum Othi kulaippavar: They deliberately let loose their fragrant hair;

samara vEl enu(m) needu vizhicchiyar: their long eyes look like spears ready for combat;

manathilE kapadu Uru paraththaiyar: their mind is the place where treachery crawls (like a worm);

rathi kELvar mathananOdu uRazh pUsal idaicchiyar: their slender waist, ever ready for warfare, is like Manmathan*, the consort of Rathi;

iLainjar Aruyir vAzhum mulaicchiyar: the dear lives of young men dwell on their bosom;

mathura mA mozhi pEsu(m) kuNaththiyar: these whores have the habit of talking sweet and tall;

theru meethE saruvi yAraiyum vA ena azhaippavar: they flirt with anyone on the street, readily extending invitation (to their home);

poruLilE veku Asai parappikaL: they are very keen on extracting money from others;

sakala thOthaka mAyai padipparai aNukAthE: without letting me go near these whores who practise all kinds of treacheries and sorceries,

salasam mEviya pAtha(m) ninaiththu mun aruNai nAdu athil Othu thiruppukazh thaNiya Okaiyil Otha enakku aruL purivAyE: kindly bless me to meditate on Your hallowed lotus-feet and bestow upon me the bliss of heartily chanting (at all times) the songs of Your glory which I sang previously in the region of ThiruvaNNAmalai!

ariya kAnakam mEvum kuRaththi than ithaNilE sila nALu(m) manaththudan adavi thORume vAzh iyal paththini maNavALA: In the unique forest of VaLLimalai, You set Your heart on a raised platform over the millet-field where she dwelt for some time; later, she lived and roamed about in many forests (like sandalwood forest and shaNbaga forest); She is VaLLi, the chaste damsel of the KuRavAs, and You are her consort, Oh Lord!

asurar veedukaL nURu podip pada uzhavar sAkaram Odi oLiththida amarar nAdu pon mAri mikuththida ninaivOnE: Shattering all the houses of the demons into pieces and driving their armies into the seas where they hid themselves, You thoughtfully arranged for a heavy shower of gold in the celestial land, Oh Lord!

thiruvin mA maram Ar pazhanap pathi ayilum sORavai ALu(m) thuRaip pathi: There is a town called Thiruppazhanam [1] where big mango trees blessed by Goddess Lakshmi abound; another town called ThiruchchOtRuththuRai [2] where plenty of food is available;

thisaiyil nAn maRai thEdiya mun kudi: an ancient town named ThiruvEthikkudi [3] where all the four VEdAs pursued the search of, and attained, Lord SivA;

vithi Athis siramum mA nilam veezh tharu meyppathi: yet another ThirukkaNdiyUr [4] that witnessed the fall on its vast ground of the primal head of Lord BrahmA (that was severed by Lord SivA);

pathuma nAyagan vAzh pathi neyppathi thiruvaiyARudan Ezhu thiruppathi perumALE.: the town of ThiruppUnthuruththi [5] where the Sun, seated on a lotus, resided worshipping Lord SivA, the town of ThiruneyththAnam [6], and finally, the town ThiruvaiyARu [7] all of which constitute the seven sacred places (sapthasthAnanam**) and Your abode, Oh Great One!


* The reason why the waist of women is compared to Manmathan, God of Love - due to the curse of Lord SivA, Manmathan is invisible to the eyes; so also is the slender waist of women which cannot be seen by the eyes!


** These comprise the towns of Thiruppazhanam, ThirucchOtRuththuRai, ThiruvEthikkudi, ThirukkaNdiyUr, ThiruppUnthuruththi, ThiruneyththAnam and ThiruvaiyARu all of which are near ThanjAvUr.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 886 maru ulAvidum - sabdhasdhAnam

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]