திருப்புகழ் 885 கந்த வார்குழல்  (தஞ்சை)
Thiruppugazh 885 kandhavArkuzhal  (thanjai)
Thiruppugazh - 885 kandhavArkuzhal - thanjaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தந்த தானன தான தான தத்த தந்த
     தந்த தானன தான தான தத்த தந்த
          தந்த தானன தான தான தத்த தந்த ...... தனதான

......... பாடல் .........

கந்த வார்குழல் கோதி மாலை யைப்பு னைந்து
     மஞ்ச ளாலழ காக மேனி யிற்றி மிர்ந்து
          கண்ட மாலைக ளான ஆணி முத்த ணிந்து ...... தெருவூடே

கண்ட பேரையெ லாம வாவி னிற்கொ ணர்ந்து
     வண்ப யோதர பார மேரு வைத்தி றந்து
          கண்க ளாகிய கூர வேலை விட்டெ றிந்து ...... விலைகூறி

வந்த பேர்களை யேகை யாலெ டுத்த ணைந்து
     கொண்டு தேனித ழூறு வாயை வைத்த ருந்தி
          மந்த மாருதம் வீசு பாய லிற்பு ணர்ந்து ...... மயல்பூணு

மங்கை மாரநு போக தீவி னைப்ப வங்கள்
     மங்கி யேகிடு மாறு ஞான வித்தை தந்து
          வண்டு லாவிய நீப மாலை சற்றி லங்க ...... வருவாயே

இந்த்ர தாருவை ஞால மீதி னிற்கொ ணர்ந்த
     சங்க பாணிய னாதி கேச வப்ர சங்க
          னென்று வாழ்மணி மார்பன் வீர விக்ர மன்றன் ...... மருகோனே

எண்டி சாமுக வேலை ஞால முற்று மண்டு
     கந்த தாருக சேனை நீறு பட்டொ துங்க
          வென்று பேரொளி சேர்ப்ர காசம் விட்டி லங்கு ...... கதிர்வேலா

சந்த்ர சேகரி நாக பூஷ ணத்தி யண்ட
     முண்ட நாரணி யால போஜ னத்தி யம்பை
          தந்த பூரண ஞான வேள்கு றத்தி துஞ்சு ...... மணிமார்பா

சண்ட நீலக லாப வாசி யிற்றி கழ்ந்து
     கஞ்சன் வாசவன் மேவி வாழ்ப திக்கு யர்ந்த
          தஞ்சை மாநகர் ராஜ கோபு ரத்த மர்ந்த ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

கந்த வார் குழல் கோதி மாலையைப் புனைந்து மஞ்சளால்
அழகாக மேனியில் திமிர்ந்து
... நறு மணம் வீசும் நீண்ட கூந்தலைச்
சிக்கெடுத்து வாரி, மாலையைச் சூடிக்கொண்டு, மஞ்சளை அழகுடன்
உடலில் நிரம்பப் பூசி,

கண்ட(ம்) மாலைகள் ஆன ஆணி முத்து அணிந்து
தெருவூடே கண்ட பேரை எ(ல்)லாம் அவாவினில்
கொணர்ந்து
... கழுத்தில் மாலைகளாக உயர்தரமான முத்து மாலைகளை
அணிந்து, தெருவில் பார்த்த பேர்வழிகளை எல்லாம் ஆசையுடன்
அழைத்துக் கொண்டு வந்து,

வண் பயோதர பார மேருவை திறந்து கண்களாகிய கூர
வேலை விட்டு எறிந்து விலை கூறி
... வளப்பம் உள்ள, கனத்த
மேரு மலையை ஒத்த மார்பகங்களைத் திறந்து காட்டி, கண்கள் என்னும்
கூர்மையான வேலாயுதத்தை வேகமாகச் செலுத்தி, (தமக்கு வேண்டிய)
விலையைப் பேசி,

வந்த பேர்களையே கையால் எடுத்து அணைந்து கொண்டு
தேன் இதழ் ஊறு வாயை வைத்து அருந்தி மந்த மாருதம் வீசு
பாயலில் புணர்ந்து மயல் பூணும்
... வந்தவர்களைக் கையால்
எடுத்துத் தழுவிக் கொண்டு, தேன் போல் இனிக்கும் வாயிதழ் ஊறலை
உதடுகளில் வைத்துக் குடிக்கச்செய்து, தென்றல் வீசும் படுக்கையில்
புணர்ந்து காம மயக்கம் கொள்ளும்,

மங்கைமார் அநுபோக தீ வினைப் பவங்கள் மங்கி ஏகிடுமாறு
ஞான வித்தை தந்து வண்டு உலாவிய நீப மாலை சற்று
இலங்க வருவாயே
... விலைமாதர்களுடன் அநுபோகம் செய்வதால்
வரும் கொடிய வினைகளுடன் கூடிய பிறப்புகள் எல்லாம் தொலைந்து
போகும்படி, ஞான வித்தையைக் கொடுத்து, வண்டுகள் உலாவும் கடப்ப
மாலை என் முன் சற்றே விளங்க வருவாயாக.

இந்த்ர தாருவை ஞால(ம்) மீதினில் கொணர்ந்த சங்க
பாணியன் ஆதி கேசவ ப்ரசங்கன் என்று வாழ் மணி மார்பன்
வீர விக்ரமன் தன் மருகோனே
... இந்திரலோகத்து கற்பக
விருட்சத்தை பூமிக்குக் கொண்டு வந்தவன், பாஞ்ச சன்னியம் என்னும்
சங்கைக் கையில் ஏந்தியவன், ஆதிகேசவன் என்னும் கீர்த்தியைப்
பெற்றவன், சூரியனுடைய ஒளி போன்று என்றும் பிரகாசிக்கும்
கெளஸ்துபம் என்னும் மணியை மார்பில் அணிந்தவன், வீர வல்லமை
வாய்ந்தவனாகிய திருமாலின் மருகனே,

எண் திசா முக வேலை ஞாலம் முற்று(ம்) மண்டு கந்த ...
எட்டுத் திசைகளிலும் உள்ள கடலால் சூழப்பட்ட பூமி முற்றிலும்
நிறைந்து விளங்கும் கந்தனே,

தாருக சேனை நீறு பட்டு ஒதுங்க வென்று பேரொளி சேர்
ப்ரகாசம் விட்டு இலங்கு கதிர்வேலா
... தாருகாசுரனும் அவன்
சேனையும் தூள்பட்டு அழிய அவர்களை வென்று, பெரும் புகழ்
கொண்ட ஒளி வீசி விளங்கும் கதிர் வேலனே,

சந்த்ர சேகரி நாக பூஷணத்தி அண்டம் உண்ட நாரணி ஆல
போஜனத்தி அம்பை தந்த பூரண ஞான வேள் குறத்தி துஞ்சு
மணி மார்பா
... சந்திரனைச் சூடியவள், பாம்பை ஆபரணமாகக்
கொண்டவள், பூவுலகை உண்ட வைஷ்ணவி, ஆலகால விஷத்தை
உண்டவள், அம்பிகை ஆகிய பார்வதி பெற்ற ஞான பூரணனாகிய
முருகவேளே, குற மகளாகிய வள்ளி உறங்கும் அகன்ற மார்பனே,

சண்ட நீல கலாப வாசியில் திகழ்ந்து கஞ்சன் வாசவன் மேவி
வாழ் பதிக்கு உயர்ந்த தஞ்சை மாநகர் ராஜ கோபுரத்து
அமர்ந்த பெருமாளே.
... அதி வேகம் கொண்டதும் நீலநிறத் தோகை
உள்ளதுமான மயிலாகிய குதிரை மீது விளங்கி, பிரமன், இந்திரன்
வீற்றிருந்து வாழும் தலைநகரான ஊர்களைக் காட்டிலும் மேலான
தஞ்சை மாநகரில் ராஜ கோபுரத்தில் அமர்ந்த பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.1155  pg 2.1156  pg 2.1157  pg 2.1158 
 WIKI_urai Song number: 889 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 885 - kandha vArkuzhal (thanjai)

kantha vArkuzhal kOthi mAlai yaippu nainthu
     manja LAlazha kAka mEni yitRi mirnthu
          kaNda mAlaika LAna ANi muththa Ninthu ...... theruvUdE

kaNda pEraiye lAma vAvi niRko Narnthu
     vaNpa yOthara pAra mEru vaiththi Ranthu
          kaNka LAkiya kUra vElai vitte Rinthu ...... vilaikURi

vantha pErkaLai yEkai yAle duththa Nainthu
     koNdu thEnitha zhURu vAyai vaiththa runthi
          mantha mArutham veesu pAya liRpu Narnthu ...... mayalpUNu

mangai mAranu pOka theevi naippa vangaL
     mangi yEkidu mARu njAna viththai thanthu
          vaNdu lAviya neepa mAlai satRi langa ...... varuvAyE

inthra thAruvai njAla meethi niRko Narntha
     sanga pANiya nAthi kEsa vapra sanga
          nenRu vAzhmaNi mArpan veera vikra manRan ...... marukOnE

eNdi sAmuka vElai njAla mutRu maNdu
     kantha thAruka sEnai neeRu patto thunga
          venRu pEroLi sErpra kAsam vitti langu ...... kathirvElA

chanthra sEkari nAka pUsha Naththi yaNda
     muNda nAraNi yAla bOja naththi yampai
          thantha pUraNa njAna vELku Raththi thunju ...... maNimArpA

chaNda neelaka lApa vAsi yitRi kazhnthu
     kanjan vAsavan mEvi vAzhpa thikku yarntha
          thanjai mAnakar rAja kOpu raththa marntha ...... perumALE.

......... Meaning .........

kantha vAr kuzhal kOthi mAlaiyaip punainthu manjaLAl azhakAka mEniyil thimirnthu: After untangling their long and fragrant hair, combing and adorning themselves with a garland, these women nicely smear turmeric paste on their body;

kaNda(m) mAlaikaL Ana ANi muththu aNinthu theruvUdE kaNda pErai e(l)lAm avAvinil koNarnthu: they wear around their neck expensive strings of pearls and lovingly invite to their home whoever they meet on the street;

vaN payOthara pAra mEruvai thiRanthu kaNkaLAkiya kUra vElai vittu eRinthu vilai kURi: they expose their firm and heavy bosom resembling Mount MEru, swiftly wield their sharp spear-like eyes and conclude the negotiation of their price;

vantha pErkaLaiyE kaiyAl eduththu aNainthu koNdu thEn ithazh URu vAyai vaiththu arunthi mantha mArutham veesu pAyalil puNarnthu mayal pUNum: they take their suitors in their arms in an embrace, make them imbibe the sweet honey-like saliva oozing from their lips, lay them on the breezy bed and make love to them in a dizzy spell;

mangaimAr anupOka thee vinaip pavangaL mangi EkidumARu njAna viththai thanthu vaNdu ulAviya neepa mAlai satRu ilanga varuvAyE: to get rid of all future births that are accompanied by evil deeds resulting from the carnal pleasure derived from these whores, kindly grant me the art of Knowledge and give me Your vision showing, to some extent at least, Your kadappa garland that is swarmed by beetles!

inthra thAruvai njAla(m) meethinil koNarntha sanga pANiyan Athi kEsava prasangan enRu vAzh maNi mArpan veera vikraman than marukOnE: He brought to the earth the kaRpaga tree belonging to the celestial world of IndrA; He holds in His hand PAncha janyam, the divine conch-shell; He is renowned as the Primordial Lord, KEsavan; He wears on His chest Kousthubam, the everlasting and dazzling pendant made of precious gems, bright as the sun's rays; He is the valorous Lord VishNu, and You are His nephew, Oh Lord!

eN thisA muka vElai njAlam mutRu(m) maNdu kantha: You are Lord Kanthan, omnipresent in the entire world surrounded by oceans in all the eight directions!

thAruka sEnai neeRu pattu othunga venRu pEroLi sEr prakAsam vittu ilangu kathirvElA: Shattering the demon ThArukan and his armies to pieces and conquering them in the war, Your bright spear gained a great reputation, Oh Lord with the radiating spear!

chanthra sEkari nAka pUshaNaththi aNdam uNda nAraNi Ala pOjanaththi ampai thantha pUraNa njAna vEL kuRaththi thunju maNi mArpA: She wears the crescent moon on Her tresses; She wears the serpent as an ornament; She is VaishNavi (the sister of Lord VishNu) who devoured the earth; She imbibed the evil poison, AlakAlam; She is the Goddess, Mother PArvathi; and She delivered You as the source absolute of Knowledge, Oh Lord MurugA! VaLLi, the damsel of the KuRavAs, slumbers on Your broad chest, Oh Lord!

saNda neela kalApa vAsiyil thikazhnthu kanjan vAsavan mEvi vAzh pathikku uyarntha thanjai mAnakar rAja kOpuraththu amarntha perumALE.: Mounting the extremely speedy horse-like peacock, endowed with blue plumes, You are seated in the Royal Temple Tower of ThanjAvUr that surpasses, in grandeur, the capital cities of Lord Brahma and IndrA, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 885 kandha vArkuzhal - thanjai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]