பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சப்தஸ்தானம்) திருப்புகழ் உரை 599 எட்டுத் திக்கிலும் உள்ள கடல் (கடலால் சூழப்பட்ட) பூமி முற்றிலும் நிறைந்து விளங்கும் கந்தனே! தாருகனும் அவன் சேனையும் (அல்லது , முற்றிலும் அண்டு உகந்த நெருங்கி மகிழ்ந்த தாருகன் சேனை) துள்பட்டு அழிய ஜெயித்து பெரும்புகழ் கொண்ட ஒளி பரப்பி விளங்கும் ஒளி வேலனே! சந்திரனைச் சூடினவள், பாம்பை ஆபரணமாகக் கொண்டவள், பூவுலகை உண்ட நாரணி (வைஷ்ணவி), விஷத்தை உண்டவள், அம்பிகை ஆகிய பார்வதி பெற்ற ஞான பூரணனாம் வேளே! குறத்தி - வள்ளிதுயில் கொள்ளும் அழகிய மார்பனே! அதிவேகம் கொண்டதும், நீலநிறத் தோகை உள்ளதுமான மயிலாம் குதிரைமீது விளங்கிப், பிரமன் - இந்திரன் வீற்றிருந்துவாழும் பதிகளாகிய (தலைநகராகிய) மனோவதி, அமராவதி என்னும் ஊர்களினும் மேம்பட்டதான தஞ்சை (தஞ்சாவூர்) என்னும் பெரும் பட்டணத்தில் உள்ள ராஜ கோபுரத்தில் அமர்ந்தருளும் பெருமாளே! (நீபமாலை சற்றிலங்க வருவாயே) சப்தஸ்தானம் 890. நறுமணம் உலவும் கூந்தலைக் கலைத்து அவிழ்ப்பவர்; போருக்கு உற்ற வேல் என்று சொல்லத்தக்க நீண்ட கண்களை உடையவர்கள்: மனதிலே வஞ்சனை ஊறும் பரத்தையர்; ரதியின் கணவனாகிய (598-ஆம் பக்கத் தொடர்ச்சி) உய்த்தவன் என்னைப் புறம்புல்குவான்" உம்பர்கோன் என்னைப் புறம் புல்குவான்" பெரியாழ்வார் 3-9-1: 1-9-9: அருட்கொண்டல் அன்ன அரங்கர் சங்கோசையில் அண்டமெல்லாம் வெருட்கொண் டிடர்ப்பட மோகித்து வீழ்ந்தனர் வேகமுடன் தருக்கொண்டு போகப் பொறாதே தொடருஞ் சதுர்முகனும் செருக்கொண்ட முப்பத்து முக்கோடி தேவருஞ் சேனையுமே. -(பிள்ளைப் பெருமாளையங்கார்).