பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவையாறு) திருப்புகழ் உரை 603 லகூழ்மீகரம் பொருந்திய மாமரங்கள் நிறைந்த திருப்பழனம் என்னும் ஊர், உண்பதற்குஉரிய (சோறவையாளு துறைப்பதி) திருச் சோற்றுத்துறை, திசைகள் தோறும் நான்கு வேதங்கள் (ஈசனைத்) தேடிய (தேடி அடைந்த பழம்பதியாகிய திருவேதிகுடி, பிரமனுடைய முதல் தலை (உச்சித்தலை) பெரிய பூமியில் கிள்ளப்பட்டு வீழ்த்தப்பட்ட உண்மை நகரமாம் திருக்கண்டியூர், தாமரையின் நாயகனாம் சூரியன் பூசித்து வாழ்ந்த ஊராகிய திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம், திருவையாறுடன் ஆக ஏழு திருப்பதிகளிலும் வாழ்கின்ற பெருமாளே! (திருப்புகழ்.ஓத எனக்கருள் புரிவாயே) திருவையாறு 891. சொரிந்து மழையாய் விழும் இருண்ட மேகமோ அல்லது இருள்தானோ கூந்தல், ஒளிகொண்ட வாள்கள் இரண்டோ அல்லது மானோ கண்; தேவர்களின் அருமையான அமுதம் தானோ அல்லது குயிலின் குரல்தானோ மொழி: வாயிதழானது கொவ்வைக்கனி தானோ (அல்லது) பவளமோ, இலவமலரோ தெரியா - கண்ணுக்குத் தெரியாத உருவத்ததோ இடையானது; குற்றம் இல்லாத அன்னமோ, பெண் யானையோ (அன்ன நடையோ - பெண் யானை நடையோ) நடையானது, இரட்டையாயுள்ள பெரிய மலைகளோ கொங்கைகள் - என்றெல்லாம் உவமைகள் எடுத்துப் பேசி, அன்புடன் என்னை ஆண்டருளுக', நான் ஒரு குற்றமுமில்லாதவன்' என்று ஒள்ளிய நெற்றியை உடைய மாதர்களுடன் (பகடியே) வெளி வேஷப் பேச்சுக்களையே பேசிப் படித்து, நீங்காத துன்பத்திற்கு இடமான (இந்தப் பிறவி யென்னும்) மாயக். (602 ஆம் பக்கத் தொடர்ச்சி) # தெரியா இடை - பாடல் 201 (இராத இடை)