திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 887 சொரியு மாமுகில் (திருவையாறு) Thiruppugazh 887 soriyumAmugil (thiruvaiyARu) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனன தானன தானன தானன தனன தானன தானன தானன தனன தானன தானன தானன ...... தனதான ......... பாடல் ......... சொரியு மாமுகி லோஇரு ளோகுழல் சுடர்கொள் வாளிணை யோபிணை யோவிழி சுரர்த மாரமு தோகுயி லோமொழி ...... யிதழ்கோவை துவர தோஇல வோதெரி யாஇடை துகளி லாவன மோபிடி யோநடை துணைகொள் மாமலை யோமுலை தானென ...... உரையாடிப் பரிவி னாலெனை யாளுக நானொரு பழுதி லானென வாணுத லாரொடு பகடி யேபடி யாவொழி யாஇடர் ...... படுமாயப் பரவை மீதழி யாவகை ஞானிகள் பரவு நீள்புக ழேயது வாமிகு பரம வீடது சேர்வது மாவது ...... மொருநாளே கரிய மேனிய னானிரை யாள்பவன் அரிய ராவணை மேல்வளர் மாமுகில் கனகன் மார்பது பீறிய வாளரி ...... கனமாயக் கபடன் மாமுடி யாறுட னாலுமொர் கணையி னால்நில மீதுற நூறிய கருணை மால்கவி கோபக்ரு பாகரன் ...... மருகோனே திரிபு ராதிகள் தூளெழ வானவர் திகழ வேமுனி யாவருள் கூர்பவர் தெரிவை பாதியர் சாதியி லாதவர் ...... தருசேயே சிகர பூதர நீறுசெய் வேலவ திமிர மோகர வீரதி வாகர திருவை யாறுறை தேவக்ரு பாகர ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... சொரியும் மா முகிலோ இருளோ குழல் ... கூந்தல் மழையாய் சொரிந்து விழும் இருண்ட மேகமோ அல்லது இருளே தானோ? சுடர் கொள் வாள் இணையோ பிணையோ விழி ... கண்கள் ஒளிகொண்ட இரு வாள்களோ, அல்லது மானின் கண்களோ? சுரர் தம் ஆர அமுதோ குயிலோ மொழி ... தேவர்களுடைய அருமையான அமுதமோ, அல்லது குயிலின் குரல் தானோ? இதழ் கோவை துவர் அதோ இலவோ ... வாயிதழ் கொவ்வைக் கனி தானோ, பவளமோ, அல்லது இலவ மலரோ? தெரியா இடை துகள் இலா அ(ன்)னமோ பிடியோ நடை ... இவர்களின் இடுப்பு கண்ணுக்கே தெரியாததோ? நடை குற்றம் இல்லாத அன்னப் பறவையினதோ, அல்லது பெண் யானையோ? துணை கொள் மா மலையோ முலை தான் என உரை ஆடி ... மார்பகங்கள் இரட்டையாயுள்ள பெரிய மலைகளோ? - என்றெல்லாம் உவமைகள் எடுத்துப் பேசி, பரிவினால் எனை ஆளுக நான் ஒரு பழுது இலான் என வாள் நுதலாரொடு பகடியே படியா ஒழியா இடர் படு மாயப் பரவை மீது அழியா வகை ... அன்புடன் என்னை ஆண்டருளுக, நான் ஒரு குற்றமும் இல்லாதவன் என்று ஒளி மிக்க நெற்றியை உடைய மாதர்களுடன் வெளி வேஷப் பேச்சுக்களையே பேசிப் படித்து, நீங்காத துன்பத்துக்கு இடமான (இந்தப் பிறவிச் சுழல்) என்னும் மாயக் கடலில் அழியாதபடி, ஞானிகள் பரவு நீள் புகழே அதுவாம் மிகு பரம வீடு அது சேர்வதும் ஆவதும் ஒரு நாளே ... ஞானிகள் போற்றுகின்ற பெரும் புகழே உருவான சிறந்த மேலான மோட்சத்தைச் சேர்வதும், அங்ஙனம் சேரத் தகுந்தவன் ஆவதுமான, ஒரு நாள் எனக்குக் கிட்டுமோ? கரிய மேனியன் ஆ நிரை ஆள்பவன் அரி அரா அணை மேல் வளர் மா முகில் கனகன் மார்பு அது பீறிய ஆளரி ... கரு நிற உடல் உடையவன், பசுக் கூட்டத்தை மேய்த்து ஆள்பவன், திருமால், (ஆதிசேஷன் என்ற) பாம்பணையின் மேல் (துயில்) வளர் கரிய மேகம் போன்றவன், பொன்னிறம் படைத்த கனகன் (இரணியனுடைய) மார்பைப் பிளந்த நரசிம்மன், கன மாயக் கபடன் மா முடி ஆறுடன் நாலும் ஒர் கணையினால் நிலம் மீது உற நூறிய கருணை மால் கவி கோப க்ருபாகரன் மருகோனே ... வலிமையான மாயங்களில் வல்ல வஞ்சகனாகிய ராவணனின் சிறந்த பத்து முடிகளும் ஒரே பாணத்தால் நிலத்தின் மேல் விழும்படி தூளாக்கிய கருணை மிகுத்த திருமால், (வாலி என்னும்) குரங்கைக் கோபித்தவனும், கிருபைக்கு இடமானவனுமான விஷ்ணுவின் மருகனே, திரி புராதிகள் தூள் எழ வானவர் திகழவே முனியா அருள் கூர்பவர் தெரிவை பாதியார் சாதி இலாதவர் தருசேயே சிகர பூதர நீறு செய் வேலவ ... திரிபுர அசுரர்கள் பொடியாகுமாறும், தேவர்கள் விளங்கும் பொருட்டும், (திரிபுராதிகள் மீது) கோபித்து (தேவர்களுக்கு) அருள் பாலிப்பவர், உமா தேவிக்குத் தன் உடலில் பாதியைக் கொடுத்தவர், சாதி என்பதே இல்லாதவர் ஆகிய சிவபெருமான் பெற்ற குழந்தையே, சிகரங்களை உடைய கிரெளஞ்ச மலையை தூளாக்கி அழித்த வேலவனே, திமிர மோகரம் வீர திவாகர திருவையாறு* உறை தேவ க்ருபாகர பெருமாளே. ... அஞ்ஞானம் என்னும் இருளைப் போக்க வல்ல வீர ஞானபானுவே, திருவையாற்றில்* வீற்றிருக்கும் தேவனே, கிருபாகர மூர்த்தியே, பெருமாளே. |
* திருவையாறு தஞ்சாவூருக்கு வடக்கே 6 மைலில் காவேரி ஆற்றின் கரையில் உள்ளது. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 2.1161 pg 2.1162 pg 2.1163 pg 2.1164 WIKI_urai Song number: 891 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை & சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) Sri Maha Periyava Thirupugazh Sabha & Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) | பாடகர் பக்கத்திற்கு to singer's page |
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) இப்பாடலின் பொருள் Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) meanings in Tamil |
திரு சபா. மெய்யப்பன் Thiru S. Meyyappan பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 887 - soriyu mAmugil (thiruvaiyARu) coriyu mAmuki lOiru LOkuzhal sudarkoL vALiNai yOpiNai yOvizhi surartha mAramu thOkuyi lOmozhi ...... yithazhkOvai thuvara thOila vOtheri yAidai thukaLi lAvana mOpidi yOnadai thuNaikoL mAmalai yOmulai thAnena ...... uraiyAdip parivi nAlenai yALuka nAnoru pazhuthi lAnena vANutha lArodu pakadi yEpadi yAvozhi yAidar ...... padumAyap paravai meethazhi yAvakai njAnikaL paravu neeLpuka zhEyathu vAmiku parama veedathu sErvathu mAvathu ...... morunALE kariya mEniya nAnirai yALpavan ariya rAvaNai mElvaLar mAmukil kanakan mArpathu peeRiya vALari ...... kanamAyak kapadan mAmudi yARuda nAlumor kaNaiyi nAlnila meethuRa nURiya karuNai mAlkavi kOpakru pAkaran ...... marukOnE thiripu rAthikaL thULezha vAnavar thikazha vEmuni yAvaruL kUrpavar therivai pAthiyar sAthiyi lAthavar ...... tharusEyE sikara pUthara neeRusey vElava thimira mOkara veerathi vAkara thiruvai yARuRai thEvakru pAkara ...... perumALE. ......... Meaning ......... coriyum mA mukilO iruLO kuzhal: "Is their hair the rain-pouring dark cloud, or darkness itself? sudar koL vAL iNaiyO piNaiyO vizhi: Are their eyes two bright swords, or do they belong to a female deer? surar tham Ara amuthO kuyilO mozhi: Is their voice the rare Divine nectar or the cuckoo's cooing? ithazh kOvai thuvar athO ilavO: Are their lips kovvai fruit, coral or the flower of the silk-cotton (ilavu) tree? theriyA idai thukaL ilA a(n)namO pidiyO nadai: Is their waist-line visible at all? Is their gait that of the unblemished swan or the she-elephant? thuNai koL mA malaiyO mulai thAn ena urai Adi: are their breasts the twin giant-mountains?" - so making many a comparison, parivinAl enai ALuka nAn oru pazhuthu ilAn ena vAL nuthalArodu pakadiyE padiyA ozhiyA idar padu mAyap paravai meethu azhiyA vakai: I implored them to accept me kindly, pleading that I am an innocent fellow. Lest I speak to these whores with a bright forehead in a superficial and hypocritical way leading me to an insurmountable misery (namely, the cycle of birth) by sinking in the sea of delusion, njAnikaL paravu neeL pukazhE athuvAm miku parama veedu athu sErvathum Avathum oru nALE: will there be a day when I shall attain the very famous state of liberation extolled by the realised souls or at least a day when I may be eligible to attain that bliss? kariya mEniyan Anirai ALpavan ari arA aNai mEl vaLar mA mukil kanakan mArpu athu peeRiya ALari: His body is of dark complexion; He is a cowherd who tends the cows; He is Lord VishNu; He is like a black cloud slumbering on a serpent-bed (AdhisEshan); He is Lord Narasimhan (Man-Lion) who split open the chest of the demon HiraNyan of a golden hue; kana mAyak kapadan mA mudi ARudan nAlum or kaNaiyinAl nilam meethu uRa nURiya karuNai mAl kavi kOpa krupAkaran marukOnE: the demon RAvaNan was treacherous and capable of many daunting acts of delusion; his ten great heads were felled on the earth by His single arrow, shattering them to pieces; He is the compassionate Lord VishNu; He showed His rage on VAli, the monkey; He is the repository of mercy; and You are the nephew of that Lord! thiri purAthikaL thUL ezha vAnavar thikazhavE muniyA aruL kUrpavar therivai pAthiyAr sAthi ilAthavar tharusEyE sikara pUthara neeRu sey vElava: Annihilating the demons of Thiripuram by turning them into dust and uplifting the DEvAs, He showed His rage (on the demons of Thiripuram) and blessed the celestials graciously; He offered the left part of His body to UmA DEvi to concorporate; He is above any caste or creed; and You are the child of that Lord SivA! You destroyed the Mount Krouncha with its many peaks by smashing it to smithereens, Oh Lord with the Spear! thimira mOkaram veera thivAkara thiruvaiyARu uRai thEva krupAkara perumALE.: To dispel the darkness of ignorance, You rise as the Valorous Sun of Knowledge, Oh Lord! You are the deity enshrined in ThiruvaiyARu*, Oh Compassionate Lord! Oh Great One! |
* ThiruvaiyARu is on the banks of KAvEri River, 6 miles north of ThanjAvUr. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |