திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 878 திட்டெனப் பல (திருச்சக்கிரப்பள்ளி) Thiruppugazh 878 thittenappala (thiruchchakkirappaLLi) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தத்த தத்தன தத்தன தத்தன தத்த தத்தன தத்தன தத்தன தத்த தத்தன தத்தன தத்தன ...... தனதான ......... பாடல் ......... திட்டெ னப்பல செப்பைய டிப்பன பொற்கு டத்தையு டைப்பன வுத்தர திக்கி னிற்பெரு வெற்பைவி டுப்பன ...... வதின்மேலே செப்ப வத்திம ருப்பையொ டிப்பன புற்பு தத்தையி மைப்பில ழிப்பன செய்த்த லைக்கம லத்தைய லைப்பன ...... திறமேய புட்ட னைக்கக னத்தில்வி டுப்பன சித்த முற்பொர விட்டுமு றிப்பன புட்ப விக்கன்மு டிக்குறி யுய்ப்பன ...... இளநீரைப் புக்கு டைப்பன முத்திரை யிட்டத னத்தை விற்பவர் பொய்க்கல விக்குழல் புத்தி யுற்றமை யற்றிட எப்பொழு ...... தருள்வாயே துட்ட நிக்ரக சத்தித ரப்ரப லப்ர சித்தச மர்த்தத மிழ்த்ரய துட்க ரக்கவி தைப்புக லிக்கர ...... செனுநாமச் சொற்க நிற்கசொ லட்சண தட்சண குத்த ரத்தில கத்திய னுக்கருள் சொற்கு ருத்வம கத்துவ சத்வஷண் ...... முகநாத தட்ட றச்சமை யத்தைவ ளர்ப்பவ ளத்தன் முற்புகழ் செப்பவ நுக்ரக சத்து வத்தைய ளித்திடு செய்ப்பதி ...... மயிலேறி சட்ப தத்திரள் மொய்த்தம ணப்பொழில் மிக்க ரத்நம திற்புடை சுற்றிய சக்கி ரப்பளி முக்கணர் பெற்றருள் ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... திட்டு எனப் பல செப்பை அடிப்பன ... (பெண்களின் மார்பகங்களுக்குச் செப்புக் குடத்தை உவமை கூறலாம் என்றால்) திட் திட் என்று செப்புத் தட்டை அடிபடும்படிச் செய்வன. பொன் குடத்தை உடைப்பன உத்தர திக்கினில் பெரு வெற்பை விடுப்பன ... (பொற் குடத்தை உவமை கூறலாம் என்றால்) பொன்னாலாகிய குடத்தை உடைபடும்படி செய்வன. (மேரு மலையை உவமை கூறலாம் என்றால்) வடக்கு திசையில் பெருத்த மேரு மலையும் தள்ளி விடப்பட்டது. அதின் மேலே செப்ப அத்தி மருப்பை ஒடிப்பன புற்பதத்தை இமைப்பில் அழிப்பன செய்த் தலைக் கமலத்தை அலைப்பன ... அதற்கு உவமை தேடிச் சொல்ல யானையின் தந்தமும் உண்டு என்றால் யானையின் தந்தத்தையும் அம் மார்பகங்கள் ஒடித்துத் தள்ளுவன. நீர்க் குமிழியை (ஒப்பிடலாம் என்றால்) அவற்றை இமைப் பொழுதினில் அழியும்படிச் செய்வன. வயல்களில் உள்ள தாமரை மொட்டை (உவமை கூறலாம் என்றால்) தாமரை மொட்டை நீரில் அலையச் செய்வன. திறம் ஏய புள் தனைக் ககனத்தில் விடுப்பன சித்த முன் பொரவிட்டு முறிப்பன புட்ப இக்கன் முடிக் குறி உய்ப்பன ... வல்லமை உடைய சக்ரவாகப் பறவையை (உவமை கூறலாம் என்றால்) அந்தப் பக்ஷியை ஆகாயத்தில் பறக்க விடுப்பன. (ஆடவர்களின்) உள்ளத்தைத் தன்னோடு சண்டை செய்ய விட்டு அதை அழியச் செய்வன. புஷ்ப பாணத்தையும் கரும்பு வில்லையும் கொண்ட மன்மதனின் கிரீடத்தை (உவமிக்கலாம் என்றால்), (அந்த முடியையும்) குறி வைத்துத் தள்ளுவன. இள நீரைப் புக்கு உடைப்பன முத்திரை இட்ட தனத்தை விற்பவர் பொய்க் கலவிக்கு உழல் புத்தி உற்றமை அற்றிட எப்பொழுது அருள்வாயே ... இளநீரை (உவமிக்கலாம் என்றால்) அதுவும் எடுத்து உடைக்கப் படுவதாகும். (இங்ஙனம் எதுவும் நமக்கு உவமையாக அமையாது என்ற உண்மையை) முத்திரை இட்டு விளக்கும் மார்பகங்களை விற்கும் விலைமாதர்களின் நிலைத்திராத புணர்ச்சி இன்பத்தை வேண்டித் திரியும் புத்தி எனக்குப் பொருந்தி உள்ளதே. அது விலகி ஒழிந்து, நீ எப்போது அருள் புரிவாய்? துட்ட நிக்ரக சத்திதர ப்ரபல ப்ரசித்த சமர்த்த தமிழ் த்ரய துட்கர(ம்) கவிதைப் புகலிக்கு அரச எனு(ம்) நாமச் சொற்க(ம்) நிற்க சொல் லட்சண ... துஷ்டர்களை அடக்கும் சக்தி வேலைத் தரிப்பவனே, புகழும் கீர்த்தியும் கொண்ட வல்லமை வாய்ந்தவனே, முத்தமிழில் முடிப்பதற்கு அருமையான (தேவாரப்) பாடல்களை (திருஞான சம்பந்தராக வந்து) சீகாழிக்கு அரசு என்னும் புகழ் பெற்று, (அப்பாடல்களைக் கற்றவர்களுக்கு) வீட்டுப் பேறு நிலைத்து நிற்கும்படி சொன்ன அழகை உடையவனே, தட்சண குத் தரத்தில் அகத்தியனுக்கு அருள் சொல் குருத்வ(ம்) மகத்துவ சத்வ ஷண்முக நாத ... தெற்கு திசையில் உள்ள பூமியாகிய பொதிகை மலையில் அகத்திய முனிவருக்கு மேன்மையாகிய வகையில் உபதேச சொல்லைச் சொன்ன குரு மூர்த்தியாகிய பெருமையை உடைய சத்துவ குணம் கொண்ட ஷண்முக நாதனே, தட்டு அறச் சமையத்தை வளர்ப்பவள் அத்தன் முன் புகழ் செப்ப அனுக்ரக சத்துவத்தை அளித்திடு செய்ப்பதி மயில் ஏறி ... குற்றமில்லாத வகையில் சைவ சமயத்தை வளர்ப்பவளாகிய பார்வதி, சிவபெருமான் ஆகியோரின் சந்நிதியில் உனது திருப்புகழைப் பாடும்படியான திருவருள் வலிமையை எனக்கு அருளிய வயலூரில் மயில் வாகனனாய் விளங்குபவனே, சட் பதத் திரள் மொய்த்த மணப் பொழில் மிக்க ரத்ந மதில் புடை சுற்றிய சக்கிரப்ப(ள்)ளி முக்கணர் பெற்று அருள் பெருமாளே. ... ஆறு கால்கள் கொண்ட வண்டுகளின் கூட்டம் மொய்க்கின்ற நறு மணச் சோலைகள் மிகுந்த ரத்தின மயமான மதில் பக்கங்களில் சுற்றியுள்ள திருச்சக்கிரப்பள்ளி* என்னும் தலத்தில் வீற்றிருக்கும் முக்கண்ணராகிய சிவபெருமான் பெற்றருளிய பெருமாளே. |
இப்பாடலின் முதல் 10 வரிகள் பெண்களின் மார்பகங்களை உவமைகளைக் கூறி இன்ன காரணத்தால் அவை இணையாக மாட்டா என்று விளக்குகின்றன. இதே முறையைப் பின் வரும் திருப்புகழ்ப் பாடல்களிலும் காணலாம். 408 - கமலமொட்டை - (திருவருணை), 563 - குடத்தைத்தகர் - (திருக்கற்குடி). |
* திருச்சக்கிரப்பள்ளி தஞ்சாவூருக்கு வடகிழக்கே 11 மைலில் ஐயம்பேட்டை ரயில் நிலையத்துக்கு அருகில் உள்ளது. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 2.1137 pg 2.1138 pg 2.1139 pg 2.1140 pg 2.1141 pg 2.1142 WIKI_urai Song number: 882 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
திரு சபா. மெய்யப்பன் Thiru S. Meyyappan பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 878 - thittenap pala (thiruchchakkirappaLLi) thitte nappala cheppaiya dippana poRku daththaiyu daippana vuththara thikki niRperu veRpaivi duppana ...... vathinmElE seppa vaththima ruppaiyo dippana puRpu thaththaiyi maippila zhippana seyththa laikkama laththaiya laippana ...... thiRamEya putta naikkaka naththilvi duppana siththa muRpora vittumu Rippana putpa vikkanmu dikkuRi yuyppana ...... iLaneeraip pukku daippana muththirai yittatha naththai viRpavar poykkala vikkuzhal puththi yutRamai yatRida eppozhu ...... tharuLvAyE thutta nikraka saththitha raprapa lapra siththasa marththatha mizhthraya thutka rakkavi thaippuka likkara ...... senunAmac choRka niRkaso latchaNa thatchaNa kuththa raththila kaththiya nukkaruL soRgu ruthvama kaththuva sathvashaN ...... mukanAtha thatta Racchamai yaththaiva Larppava Laththan muRpukazh seppava nukraka saththu vaththaiya Liththidu seyppathi ...... mayilERi satpa thaththiraL moyththama Nappozhil mikka rathnama thiRpudai chutRiya sakki rappaLi mukkaNar petRaruL ...... perumALE. ......... Meaning ......... thittu enap pala cheppai adippana: (If one attempts to compare women's breasts to copper pots,) they cause the copper plate to be beaten up repeatedly; pon kudaththai udaippana uththara thikkinil peru veRpai viduppana: (if golden pots are sought in comparison,) they also break the golden pots; (if Mount MEru is taken for comparison,) the huge Mount MEru in the North is toppled over; athin mElE seppa aththi maruppai odippana puRpathaththai imaippil azhippana seyth thalaik kamalaththai alaippana: if comparison is drawn with the ivory tusks of the elephant, these breasts are capable of breaking those tusks as well; if water bubbles are used in comparison, those bubbles are destroyed in a fraction of a second; if the lotus buds in the fields are sought in comparison, those buds are driven in many ways by the water; thiRam Eya puL thanaik kakanaththil viduppana siththa mun poravittu muRippana putpa ikkan mudik kuRi uyppana: if the powerful chakravAka bird (krouncha) is taken up for comparison, these breasts let the bird free to fly in the sky; they provoke the mind of the men by waging war and destroy them in the ensuing fight; if the crown of the God of Love, Manmathan, holding the flowery arrows and the bow of sugarcane, is compared to them, they are capable of aiming at that crown and knocking it down; iLa neeraip pukku udaippana muththirai itta thanaththai viRpavar poyk kalavikku uzhal puththi utRamai atRida eppozhuthu aruLvAyE: if the baby coconut is sought to be compared, that coconut is subject to being broken open; thus the breasts beat any object of comparison, and that fact is established by the seal of the breasts which are sold for a price by these whores; why do I have a fixation on these women seeking the transient carnal pleasure offered by them? When will I get rid of this obsession and be blessed by You, Oh Lord? thutta nikraka saththithara prapala prasiththa samarththa thamizh thraya thutkara(m) kavithaip pukalikku arasa enu(m) nAmac choRka(m) niRka sol latchaNa: You hold the powerful spear that subdues the wicked ones! You are the Valorous One with name and fame! (Coming as ThirugnAna Sambandhar) You composed many rare songs (ThEvAram) in the three branches of Tamil language and won the distinction as the King of SeekAzhi; (to those people who learnt and sang those songs) You beautifully expressed the method of attaining sustained liberation, Oh Lord! thatchaNa kuth tharaththil akaththiyanukku aruL sol guruthva(m) makaththuva sathva shaNmuga nAtha: In Mount Pothikai, situated in the Southern part of the country, You preached to Sage Agasthiyar the principle of the highest order, and You have the distinction of becoming the greatest Master, Oh Lord ShaNmugA, with the attribute of tranquility! thattu aRac chamaiyaththai vaLarppavaL aththan mun pukazh seppa anukraka saththuvaththai aLiththidu seyppathi mayil ERi: She makes Saivism flourish in an unblemished manner; that Mother PArvathi along with Lord SivA are seated in VayalUr; in their shrine, You blessed me graciously with the power to compose songs on Your glory, Oh Lord mounting the peacock! sat pathath thiraL moyththa maNap pozhil mikka rathna mathil pudai chutRiya sakkirappa(L)Li mukkaNar petRu aruL perumALE.: The six-legged beetles swarm in the fragrant groves that abound in this town ThiruchchakkirappaLi* which is surrounded by fortress walls embedded with precious gems; the three-eyed Lord SivA is seated in this town, and He delivered You, Oh Great One! |
The first 10 lines of the song seek to compare the women's breasts to many things, discarding each one as unworthy of comparison. Similar comparisons are found in the following songs as well: 408 - kamalamottai (thiruvaNNAmalai), 563 - kudaththaiththakar (thirukkaRkudi). |
* ThirucchakkirappaLi is located near AiyampEttai Railway Station, 11 miles northeast of ThanjAvUr. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |