பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குரங்காடுதுறிை திருப்புகழ் உரை 583 (அப் பாடல்களைக் கற்பவர்களுக்கு) சொர்க்கம் நிற்க வானுலகம் நிலைத்து நிற்கும்படி (சொல் லக்ஷன) சொன்ன அழகை உடையவனே! (தட்சணம்) தெற்குத் திசையில் உள்ள-கு) பூமியாகிய பொதிய மலையில் உள்ள அகத்திய முநிவருக்குத் தரத்தில் மேன்மையான வகையில் உபதேசச் சொல்லைச் சொன்ன குருமூர்த்தியாம் பெருமையை உடைய வுண்முக நாதனே! (தட்டு அற) தடையிலாத - குற்றமிலாத வகையில் (சமயத்தை) சைவ சமயத்தை - சிவமதத்தை வளர்ப்பவளாகிய தேவி பார்வதி, (அத்தன்) சிவபிரான் - (முன்) இவர்களின் திருக்கோயில் சந்நிதானத்தில், (அல்லது முன்பு) புகழ் செப்ப உனது திருப்புகழைப் பாடும்படியான (அநுக்ரக சத்துவத்தை) திருவருள் (சத்துவத்தை) சாரத்தை வலிமையை எனக்குப் பிரசாதித்த வயலூர் என்னும் தலத்தில் மயில் வாகனனாய் விளங்குபவனே! (அல்லது - சிவபிரான் முன்பு உன்னைப் (புகழ் செப்ப) புகழும்படியாக அவருக்குக் குருமூர்த்தியாய்) உண்மைப் பொருளை அவருக்கு அனுக்கிரகம் செய்த (உபதேசித்த) வயலூர் மயில்வாகனா! (சட் பதத்திரள்) அறுகால் கொண்ட வண்டின் கூட்டம் மொய்க்கின்ற நறுமணச்சோலை மிக்குற்று விளங்குவதும், ரத்னமயமான மதில் பக்கங்களிற் சுற்றியுள்ளதுமான சக்கிரப் பள்ளி என்னும் தலத்தில் வீற்றிருக்கும் முக்கண்ணராம் சிவபிரான் பெற்றருளிய பெருமாளே! (கலவிக்கு உழல் புத்தி...அற்றிட...அருள்வாயே) திருக்குரங்காடுதுறை. 883. அலங்காரமான கிரீடம், ஒளி திரண்டுள்ள ஆறுமுகங்களிலும் அழகுடன் அசைந்தாடுகின்ற குழைகள், கவசம், திரண்ட தோள்களின்மேல்

  1. அருணகிரியார் வயலூரில் அனுக்கிரகம் பெற்றது - பாடல் 105-பார்க்க. (அருணகிரியார் வரலாறு-பக்கம் 64). X "வண்டறை மலர்மலி ....சக்கரப்பள்ளி'சம்பந்தர் 3-27-4.