பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்சக்கிரப்பள்ளி திருப்புகழ் உரை 581 சொல்ல. யானையின் தந்தம் (உண்டு) - (அந்தத் தந்தத்தையும்) ஒடித்துத் தள்ளுவன நீர்க்குமிழியை ஒப்பிடலாம் என்றால் அதை இமைப்பொழுதில் அழியும்படிச் செய்வன: வயல்களில் உள்ள தாமரை மொட்டை உவமிக்கலாம் என்றால் அதை நீரில் அலையச் செய்வன: காமர்த்தியம் உள்ள சக்கிரவாகப்பகூழியை உவமிக்கலாம் என்றால் அதை ஆகாயத்தில் பறக்க விடுவன, (ஆடவர்களின்) உள்ளத்தைத் தன்னொடு சண்டை செய்யவிட்டு அதை அழியச் செய்வன; புஷ்ப பாணத்தையும் கரும்பு வில்லையும் கொண்ட மன்மதனுடைய கிரீடத்தை உவமிக்கலாம் என்றால் அந்த முடியையும் குறிவைத்துத் தள்ளுவன (சிவனது நெற்றிக்கண்ணால் எரிபட்டுத் தொலைவன).இளநீரை (உவமிக்கலாம் என்றால்) அதுவும் எடுத்து உடைக்கப்படுவதாம் (இங்ங்ணம் எதுவும் தமக்கு உவமையாக முடியா என்னும் உண்மையை) முத்திரையிட்டு விளக்கும் கொங்கைகளை (விலைக்கு) விற்பவராம் பொதுமகளிரின் நிலைத்திராத - பொய்யான . புணர்ச்சியின்பம் வேண்டித் திரியும் புத்தி எனக்குப் பொருந்தியுள்ளதே! அது அற்றுத் தொலைய (நீ) எனக்கு எப்பொழுது அருள் புரிவாய்! துஷடர்களை அடக்கும் சத்திவேலைத் தரிப்பவனே! பிரபலமும், பிரசித்தமும் கொண்ட (மஹா கீர்த்திகொண்ட சமர்த்தனே! (தமிழ்த்ரய) முத்தமிழில் (துஷகரம்) முடிப்பதற்கு (யாத்தற்கு) அருமையானவையான பாடல்களைத் (திருஞான சம்பந்தராய்)ப் (புகலி) சீகாழிக்கு அரசு என்னும் (நாமம்) புகழ் பெற்று. (580-ஆம் பக்கத் தொடர்ச்சி) 1 புள் - சக்ரவாகப்புள். t புட்ப இக்கன் - மன்மதன் - சிவபிரான் மன்மதனை எரித்தது -பாடல் 399-பக்கம் 510 கீழ்க்குறிப்பு.