திருப்புகழ் 877 தோடுற்றுக் காதள  (திருப்பழையாறை)
Thiruppugazh 877 thOdutRukkAdhaLa  (thiruppazhaiyARai)
Thiruppugazh - 877 thOdutRukkAdhaLa - thiruppazhaiyARaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தானத்தத் தானன தானன
     தானத்தத் தானன தானன
          தானத்தத் தானன தானன ...... தனதான

......... பாடல் .........

தோடுற்றுக் காதள வோடிய
     வேலுக்குத் தானிக ராயெழு
          சூதத்திற் காமனி ராசத ...... விழியாலே

சோடுற்றத் தாமரை மாமுகை
     போலக்கற் பூரம ளாவிய
          தோல்முத்துக் கோடென வீறிய ...... முலைமானார்

கூடச்சிக் காயவ ரூழிய
     மேபற்றிக் காதலி னோடிய
          கூளச்சித் தாளனை மூளனை ...... வினையேனைக்

கோபித்துத் தாயென நீயொரு
     போதத்தைப் பேசவ தாலருள்
          கோடித்துத் தானடி யேனடி ...... பெறவேணும்

வேடிக்கைக் காரவு தாரகு
     ணாபத்மத் தாரணி காரண
          வீரச்சுத் தாமகு டாசமர் ...... அடுதீரா

வேலைக்கட் டாணிம காரத
     சூரர்க்குச் சூரனை வேல்விடு
          வேழத்திற் சீரரு ளூறிய ...... இளையோனே

ஆடத்தக் காருமை பாதியர்
     வேதப்பொற் கோவண வாடையர்
          ஆலித்துத் தானரு ளூறிய ...... முருகோனே

ஆடப்பொற் கோபுர மேவிய
     ஆடிக்கொப் பாமதிள் சூழ்பழை
          யாறைப்பொற் கோயிலின் மேவிய ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

தோடு உற்றுக் காது அளவு ஓடிய வேலுக்குத் தான் நிகர்
ஆய் எழு
... தோடுகளை அணிந்த காது வரைக்கும் ஓடி வேலுக்கு
ஒப்பானது என்று சொல்லும்படி விளங்கி,

சூதத்தில் காமனி(ன்) இராசத விழியாலே ... வஞ்சனை மிகுந்து,
மன்மதனின் ரஜோ குணம் படைத்த கண்களும்,

சோடு உற்றத் தாமரை மா முகை போலக் கற்பூரம் அளாவிய
தோல் முத்துக் கோடு என வீறிய முலை மானார்
...
இரட்டையாகப் பொருந்தி தாமரையின் அழகிய மொட்டுப் போன்ற,
பச்சைக் கற்பூரம் சேர்ந்த கலவையைப் பூசிய தோலும், முத்து மாலையும்
அணிந்த, யானையின் தந்தம் போல் மேலிட்டெழுந்த மார்பகங்களும்
உடைய விலைமாதர்களின்

கூடச் சிக்காயவர் ஊழியமே பற்றிக் காதலின் ஓடிய
கூள(னை)ச் சித்து ஆளனை மூளனை வினையேனை
...
வசத்தில் அகப்பட்டு, அவர்களுக்குத் தொண்டு செய்து ஆசையுடன்
காலம் கழிக்கும் குப்பை போல் பயன் இல்லாதவனாகிய என்னை,
சிற்றேவல் செய்யும் என்னை, சிற்றறிவுடன் செயல் படும் என்னை,
வினைக்கு ஈடான என்னை,

கோபித்துத் தாய் என நீ ஒரு போதத்தைப் பேச அதால்
அருள் கோடித்துத் தான அடியேன் அடி பெற வேணும்
...
நீ கண்டித்து, தாய் போல நீ ஒப்பற்றதான ஒரு ஞானத்தை உபதேசிக்க,
அதனால் ஞானம் பெற்றமையால் உனது திருவருளைப் புகழ்ந்து
உன்னைப் பிரார்த்திக்க அடியேன் உன் திருவடியைப் பெற
வேண்டுகிறேன்.

வேடிக்கைக்கார உதார குணா பத்மத் தாரணி காரண ...
விநோதமான திருவிளையாடல்களைச் செய்பவனே, தாராள குணம்
உடையவனே, தாமரை மலர் மாலை அணியும் மூலப்பொருளே,

வீரச் சுத்தா மகுடா சமர் அடு தீரா வேலைக் கட்டாணி ...
வீரனே, பரிசுத்தமானவனே, மகுடம் தரித்தவனே, போரில் (பகைவரைக்)
கொல்லும் தீரனே, செய்யும் தொழிலில் சமர்த்தனே,

மகாரத சூரர்க்கு சூரனை வேல் விடு வேழத்தில் சீர் அருள்
ஊறிய இளையோனே
... ரதம் ஓட்டுவதில் வல்ல சூரர்களுக்கு
எல்லாம் மேலான சூரன் மீது வேலைச் செலுத்துபவனே, ஐராவதம்
என்னும் யானையின் மீது சீரான திருவருள் ஊறிய இளையவனே,

ஆடத் தக்கார் உமை பாதியர் வேதப் பொன் கோவண
ஆடையர் ஆலித்துத் தான் அருள் ஊறிய முருகோனே
...
கூத்தாட வல்லவர், உமா தேவியைப் பாகத்தில் கொண்டவர், வேதத்தையே
அழகிய கோவணமாகக் கொண்டவர் ஆகிய சிவபிரான் களித்து மகிழ்ச்சி
பூண்டு திருவருள் சுரந்த குழந்தை முருகனே,

ஆடப் பொன் கோபுரம் மேவிய ஆடிக்கு ஒப்பா மதிள் சூழ்
பழையாறைப் பொன் கோயிலின் மேவிய பெருமாளே.
...
பொன்னாலாகிய கோபுரத்தைக் கொண்டதும், கண்ணாடிக்கு ஒப்பான
மதில் சூழ்ந்த பழையாறை என்னும் தலத்தின் அழகிய கோவிலில்
வீற்றிருக்கும் பெருமாளே.


* பழையாறை கும்பகோணத்துக்கு தென்மேற்கே 5 மைலில் உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.1133  pg 2.1135  pg 2.1136  pg 2.1137  pg 2.1138 
 WIKI_urai Song number: 881 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 877 - thOdutRuk kAthaLa (ThiruppazhaiyARai)

thOdutRuk kAthaLa vOdiya
     vElukkuth thAnika rAyezhu
          cUthaththiR kAmani rAsatha ...... vizhiyAlE

sOdutRath thAmarai mAmukai
     pOlakkaR pUrama LAviya
          thOlmuththuk kOdena veeRiya ...... mulaimAnAr

kUdacchik kAyava rUzhiya
     mEpatRik kAthali nOdiya
          kULacchith thALanai mULanai ...... vinaiyEnaik

kOpiththuth thAyena neeyoru
     pOthaththaip pEsava thAlaruL
          kOdiththuth thAnadi yEnadi ...... peRavENum

vEdikkaik kAravu thAraku
     NApathmath thAraNi kAraNa
          veeracchuth thAmaku dAsamar ...... adutheerA

vElaikkat tANima kAratha
     cUrarkkuc cUranai vElvidu
          vEzhaththiR seeraru LURiya ...... iLaiyOnE

Adaththak kArumai pAthiyar
     vEthappoR kOvaNa vAdaiyar
          Aliththuth thAnaru LURiya ...... murukOnE

AdappoR kOpura mEviya
     Adikkop pAmathiL cUzhpazhai
          yARaippoR kOyilin mEviya ...... perumALE.

......... Meaning .........

thOdu utRuk kAthu aLavu Odiya vElukkuth thAn nikar Ay ezhu: Their spear-like eyes run right up to the ears wearing the studs;

cUthaththil kAmani (n) irAsatha vizhiyAlE: those eyes look treacherous as if they have taken in the aggressive attribute of Manmathan (God of Love);

sOdu utRath thAmarai mA mukai pOlak kaRpUram aLAviya thOl muththuk kOdu ena veeRiya mulai mAnAr: these whores are endowed with raised-up twin-bosom, looking like buds of the lotus and ivory tusks of the elephant, protruding from the skin of their chest smeared with camphorated paste and adorned with pearl necklace;

kUdac chikkAyavar UzhiyamE patRik kAthalin Odiya kULa (nai) siththu ALanai mULanai vinaiyEnai: being ensnared by these whores, I have been serving them ardently all the time; I am whiling away my time uselessly turning into rubbish; I am running errands, my actions are small-minded; I am tormented by my past deeds;

kOpiththuth thAy ena nee oru pOthaththaip pEsa athAl aruL kOdiththuth thAna adiyEn adi peRa vENum: You should reprimand me like a mother; You should then preach to me the true and matchless knowledge enabling me to praise Your glory in worship and obtain Your hallowed feet!

vEdikkaikkAra uthAra kuNA pathmath thAraNi kAraNa: You have performed several amusing deeds playfully; You have enormous compassion; You are the Primordial Principle, wearing a garland of lotus!

veerac chuththA makudA samar adu theerA vElaik kattANi: Oh valorous One! You are impeccable; You wear the crown, and destroy (enemies) in the battlefield, Oh Brave One! You are an expert in all the activities of Your field!

makAratha cUrarkku cUranai vEl vidu vEzhaththil seer aruL URiya iLaiyOnE: You wielded the spear upon the demon SUran, who surpassed all demons who were themselves expert-charioteers! You are seated on the elephant AirAvatham exuding grace, Oh Young one!

Adath thakkAr umai pAthiyar vEthap pon kOvaNa Adaiyar Aliththuth thAn aruL URiya murukOnE: He is an eminent dancer; on His side is UmAdEvi concorporate; He wears the scriptures as His elegant loin-cloth; that Lord SivA graciously delivered You, in elation, as His Son, Oh MurugA!

Adap pon kOpuram mEviya Adikku oppA mathiL cUzh pazhaiyARaip pon kOyilin mEviya perumALE.: This town PazhaiyARai* has temple-tower made of gold and is surrounded by fortress walls looking like sheer glass sheets; You are seated in the beautiful temple of this town, Oh Great One!


* PazhaiyARai is 5 miles southwest of KumbakONam.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 877 thOdutRuk kAdhaLa - thiruppazhaiyARai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]