பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பழையாறை) திருப்புகழ் உரை 577 திருப்பழையாறை 881. (காதில் உள்ள) தோட்டினைச் சேர்ந்து காது வரைக்கும் بكلامي வேலுக்கு ஒப்பாக விளங்கி, (சூதத்தில்) குது அதில் உபாயத்தில் மன்மதனது ரஜோகுணம் அடங்கின கண்கள். (சோடு) இரட்டையாய்ப் பொருந்தி, தாமரையின் அழகிய மொட்டுப் போன்று, பச்சைக்கற்பூரம் சேர்ந்த கலவையை அணிந்து. தோல்) தோலும், முத்து மாலையும் கொண்ட மலைபோல (அல்ல்து யானையின் முத்து உள்ள தந்தம்போல) மேலிட்டெழுந்த கொங்கைகளை உடைய மாதர்கள். கூடுதற்குச் சிக்கலாயிருப்பவர் எளிதில் அகப்படாதவர். (தடை பல செய்பவர்) அத்தகைய வேசையர்க்கு (ஊழியமே பற்றி) பணிவிடைகளே (தொண்டே) செய் து. ஆசையுடன் காலங் கழிக்கும் (கூலுனை) குப்பை போன்று உபயோகம் இல்லாத (சித்து - ஆளனை) அறிவுகொண்ட என்னை, (மூளனை) அத்தகைய சிற்றறிவுடன் முயற்சிகள் செய்ய முற்படும் என்னை, வினைக்கு ஈடான என்ன்ன. (நீ கோபித்து கண்டித்து, தாய் போல நீ ஒப்பற்றதான ஞானத்தை உபதேசிக்க (அதால்) அங்ங்னம் ஞானம் பெற்றமையால் உன்னுடைய திரு அருளைக் (கோடித்து) புகழ்ந்து (உன்னை)ப் பிரார்த்தித் து. அடியேன் (உன்னுடைய) திருவடியைப் பெறவேண்டும்; விநோதமான திருவிளையாடல்களைச் செய்பவனே! (உதாரகுனா) தாராளகுணம் உடையவனே (கொடையாளனே) தாமரை மலர்மாலை அணியும் மூலபுருஷனே (தலைவனே) வீரம் பொருந்திய பரிசுத்த மூர்த்தியே கிரீடம் அணிந்தவனே போரிற் கொல்லும் திரனே! வேலையில் (கட்டாணி) சமர்த்தனே! (அல்லது) வேலையில் சமர்த்தனும், (அல்லது கடலில் மாவாய் நின்ற சமர்த்தனும்) மகாரத குரர்களுக்கெல்லாம் சூரனுமாகிய சூரன்மீது வேலைச் செலுத்தின் (இளையோனே) (வேழத்தில்) ஐராவதம் என்னும் யானையின்மீது சீரான திருவருள் ஊறின இளையோனே! மற்றும் வானவர் யாவரும் அவரொடு பொருது மாண்டனர். பின்னர் பிரகஸ்பதி வந்து முருகனை வேண்ட யாவரும் உயிர்பெற்று எழ, முருகவேள் அருளினர் (தொடர்ச்சி 5 78ஆம் பக்கம் பார்க்க)