திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 856 மதியஞ் சத்திரு (திருப்பந்தணை நல்லூர்) Thiruppugazh 856 madhiyanjchaththiru (thiruppandhaNai nallUr) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனனந் தத்தன தனந்த தானன தனனந் தத்தன தனந்த தானன தனனந் தத்தன தனந்த தானன ...... தனதான ......... பாடல் ......... மதியஞ் சத்திரு நிறைந்த மாமுக மயிலஞ் சக்கிளி யினங்க ளாமென மதுரஞ் செப்பிய மடந்தை மேனகை ...... ரதிபோல மருவும் பொற்குட மெழுந்த மாமுலை வளர்வஞ் சிக்கொடி நடந்த வாறென வருதுங் கக்கட லணங்கு போல்பவர் ...... தெருவூடே நிதமிந் தப்படி யிருந்து வாறவர் பொருள்தங் கப்பணி கலந்து போய்வர நெறிதந் திட்டவர் வசங்க ளாமென ...... வுழலாதே நிதிபொங் கப்பல தவங்க ளாலுனை மொழியும் புத்திகள் தெரிந்து நானுனை நிகர்சந் தத்தமிழ் சொரிந்து பாடவு ...... மருள்தாராய் நதிமிஞ் சச்சடை விரிந்த நாயக னுமையன் பிற்செயு மிகுந்த பூசனை நலமென் றுட்குளிர் சிவன்ப ராபர ...... னருள்பாலா நவகங் கைக்கிணை பகர்ந்த மாமணி நதிபங் கிற்குல வுகந்து காபுரி நகர்பொங் கித்தழை யவந்து வாழ்வுறு ...... முருகோனே கெதிதங் கத்தகு கணங்கள் வானவர் அரிகஞ் சத்தவர் முகுந்தர் நாவலர் கிளைபொங் கக்ருபை புரிந்து வாழ்கென ...... அருள்நாதா கெருவம் பற்றிகல் விளைந்த சூரொடு தளமஞ் சப்பொரு தெழுந்து தீயுகள் கிரவுஞ் சக்கிரி வகிர்ந்த வேலுள ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... மதி அஞ்சத் திரு நிறைந்த மா முகம் மயில் அஞ்சக் கிளி இனங்கள் ஆம் என ... சந்திரன் அஞ்சி நாணும்படியான பொலிவு நிறைந்த அழகிய முகத்துடன், மயிலும் (இவர்களின் சாயல் முன் நமது சாயல் எம்மாத்திரம் என்று) பயப்பட, கிளியின் கூட்டங்கள் போல விளங்கி, மதுரம் செப்பிய மடந்தை மேனகை ரதி போல மருவும் பொன் குடம் எழுந்த மா முலை வளர் வஞ்சிக் கொடி நடந்தவாறு என வரு(ம்) ... இனிமை தரும் பேச்சுக்களைப் பேசும் பெண்களாகிய தேவலோகத்து மேனகை, ரதி என்னும் அரம்பையர்கள் போல, பொருந்தியுள்ள தங்கக் குடம் போன்ற அழகிய மார்பகங்களுடன் விளங்கும், வஞ்சிக் கொடி நடந்து உலவுவது போல் நடந்து வருகின்ற, துங்கக் கடல் அணங்கு போல்பவர் தெரு ஊடே நிதம் இந்தப்படி இருந்து வாறவர் பொருள் தங்கப் ப(ண்)ணி கலந்து போய் வர நெறி தந்திட்டவர் வசங்களாம் என உழலாதே ... உயர்ந்த கடலில் தோன்றி எழுந்த லக்ஷ்மி போன்ற அழகினர் தெருவழியாக தினந்தோறும் இவ்விதமாய் இருந்து, வரும் ஆடவர்களுடைய பொருள்களை தம்மிடமே தங்கும்படியாகச் செய்து, அவர்களுடன் கலந்து, போகவும், வரவும் வழி கொடுப்பவர்களின் வசப்பட்டவன் என்று சொல்லும்படியாக நான் திரியாமல், நிதி பொங்கப் பல தவங்களால் உனை மொழியும் புத்திகள் தெரிந்து நான் உனை நிகர் சந்தத் தமிழ் சொரிந்து பாடவும் அருள் தாராய் ... (அருள்ச்) செல்வம் பொங்க பல தவப் பேற்றின் பயனால் உன்னைப் புகழும்படியான அறிவு புலப்பட்டு, நான் உன்னை ஒளி வீசும் சந்தத் தமிழ்ப் பாக்களை நிரம்பப் பொழிந்து பாடவும் உனது திருவருளைத் தருவாயாக. நதி மிஞ்சச் சடை விரிந்த நாயகன் உமை அன்பில் செயும் மிகுந்த பூசனை நலம் என்று உள் குளிர் சிவன் பராபரன் அருள் பாலா ... கங்கை பொங்கி எழும் சடை விரிந்த தேவன், உமா தேவி அன்போடு செய்த பூஜையை நன்று இது என ஏற்று உள்ளம் குளிர்ந்த சிவன், பராபர மூர்த்தி அருளிய குழந்தையே, நவ கங்கைக்கு இணை பகர்ந்த மா ம(ண்)ணி நதி பங்கில் குலவு கந்துகாபுரி நகர் பொங்கித் தழைய வந்து வாழ்வுறு முருகோனே ... புதுமை நிறைந்த கங்கை நதிக்கு ஒப்பாகும் என்று சொல்லப்பட்ட மண்ணி ஆற்றின் பக்கத்தில் விளங்குகின்ற கந்துகாபுரி என்னும் திருப்பந்தணைநல்லூர்* என்னும் பதி செல்வம் மேம்பட்டு விளக்கமுறும் முருகனே, கெதி தங்கத் தகு கணங்கள் வானவர் அரி கஞ்சத்தவர் முகுந்தர் நாவலர் கிளை பொங்க க்ருபை புரிந்து வாழ்க என அருள் நாதா ... நற்கதி நிலை தம்மிடம் தங்குவதற்கு, பொருந்திய கணங்கள், தேவர்கள், இந்திரன், தாமரையில் வாழும் பிரமன், திருமால், புலவர்கள் இவர்களுடைய கூட்டம் சிறப்புற்று வாழ அருள் கூர்ந்து வாழுங்கள் என்று அருளிய நாதனே, கெருவம் பற்றி இகல் விளைந்த சூரோடு தளம் அஞ்சப் பொருது எழுந்து தீ உகள் கிரவுஞ்சக் கிரி வகிர்ந்த வேல் உள பெருமாளே. ... கர்வம் கொண்டு பகைமை பூண்ட சூரனுடன் அவனுடைய சேனை பயப்படும்படி சண்டை செய்து, கிளம்பி தீ தாவி எழும் கிரவுஞ்ச மலையைப் பிளவுபடுத்திய வேலாயுதத்தைக் கொண்ட பெருமாளே. |
* இத்தலம் கும்பகோணத்துக்கு அருகிலுள்ள திருவிடைமருதூர் ரயில் நிலையத்துக்கு வடகிழக்கில் 8 மைல் தொலைவில் உள்ளது. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 2.1075 pg 2.1076 pg 2.1077 pg 2.1078 pg 2.1079 pg 2.1080 WIKI_urai Song number: 860 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
திரு சபா. மெய்யப்பன் Thiru S. Meyyappan பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 856 - madhiyanj chaththiru (thiruppandhaNai nallUr) mathiyan jaththiru niRaintha mAmuka mayilan jakkiLi yinanga LAmena mathuranj cheppiya madanthai mEnakai ...... rathipOla maruvum poRkuda mezhuntha mAmulai vaLarvan jikkodi nadantha vARena varuthung kakkada laNangu pOlpavar ...... theruvUdE nithamin thappadi yirunthu vARavar poruLthang kappaNi kalanthu pOyvara neRithan thittavar vasanga LAmena ...... vuzhalAthE nithipong kappala thavanga LAlunai mozhiyum puththikaL therinthu nAnunai nikarsan thaththamizh sorinthu pAdavu ...... maruLthArAy nathimin jacchadai virintha nAyaka numaiyan piRcheyu mikuntha pUsanai nalamen RutkuLir sivanpa rApara ...... naruLbAlA navagang kaikkiNai pakarntha mAmaNi nathipang kiRkula vukanthu kApuri nakarpong kiththazhai yavanthu vAzhvuRu ...... murukOnE kethithang kaththaku kaNangaL vAnavar arikan jaththavar mukunthar nAvalar kiLaipong kakrupai purinthu vAzhkena ...... aruLnAthA keruvam patRikal viLaintha cUrodu thaLaman japporu thezhunthu theeyukaL kiravun jakkiri vakirntha vEluLa ...... perumALE. ......... Meaning ......... mathi anjath thiru niRaintha mA mukam mayil anjak kiLi inangaL Am ena: Their face is so beautiful that the moon is put to shame; even the peacock is intimidated (because it suffers in comparison to the elegance of these women); they look like a bunch of parrots; mathuram cheppiya madanthai mEnakai rathi pOla maruvum pon kudam ezhuntha mA mulai vaLar vanjik kodi nadanthavARu ena varu(m): like the celestial damsels MEnakai and Rathi who have a sweet speech, these women walk with a lovely gait, with a waistline like the creeper vanji (rattan-reed), showing prominently their beautiful bosom looking like golden pot; thungak kadal aNangu pOlpavar theru UdE nitham inthappadi irunthu vARavar poruL thangap pa(N)Ni kalanthu pOy vara neRi thanthittavar vasangaLAm ena uzhalAthE: their elegance is like that of Lakshmi who arose from the pure milky ocean; these women walk through the streets everyday and ensure that the belongings of the men are usurped and then they make love to them; I do not wish to roam about being a victim of these whores who can beckon and reject men at their whim; nithi pongap pala thavangaLAl unai mozhiyum puththikaL therinthu nAn unai nikar santhath thamizh sorinthu pAdavum aruL thArAy: instead, I wish that my spiritual wealth accumulates to the point that I gain the knowledge of praising You by virtue of many good deeds and penance done in the past and that I am enabled to sing great songs of Your glory profusely with apt rhymes; for that, kindly bless me, Oh Lord! nathi minjas sadai virintha nAyakan umai anpil seyum mikuntha pUsanai nalam enRu uL kuLir sivan parAparan aruL pAlA: On His matted hair He wears the gushing River Gangai; when UmA DEvi offered worship to Him with devotion, He accepted it very gracefully and with delight; He is Lord SivA, who is the most supreme Lord; and You are His dear child, Oh Lord! nava kangaikku iNai pakarntha mA ma(N)Ni nathi pangil kulavu kanthukApuri nakar pongith thazhaiya vanthu vAzhvuRu murukOnE: This great river maNNi is comparable to the fresh river Gangai; on its bank is the town called KanthukApuri which is now known as ThiruppanthaNainallUr*; and You are seated here to glorify this place, Oh MurugA! kethi thangath thaku kaNangaL vAnavar ari kanjaththavar mukunthar nAvalar kiLai ponga krupai purinthu vAzhka ena aruL nAthA: In order that they are eternally blessed with salvation, an assembly of SivA's host of herds, the celestials, Indra, Brahma who is seated on the lotus, Lord VishNu, and a multitude of poets - all prayed, and You blessed them graciously to be prosperous, Oh Lord! keruvam patRi ikal viLaintha cUrOdu thaLam anjap poruthu ezhunthu thee ukaL kiravunjak kiri vakirntha vEl uLa perumALE.: When the arrogant demon SUran accosted You with enmity, You scared him and his entire army by wielding the spear that rose like a wild-fire and split the mount Krouncha, Oh Great One! |
* This town is 8 miles northeast of ThiruvidaimarudhUr railway station. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |