பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1078

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பந்தணைநல்லுர்) திருப்புகழ் உரை 519 பொருந்தியுள்ள தங்கக்குடம் போல எழுந்துள்ள அழகிய கொங்கைகளுடன், விளங்கும் வஞ்சிக்கொடி நடந்து உலவுவது போல நடந்து, (துங்கக் கடல்வரு அணங்கு போல்பவர்) உயர்ந்த கடலில் தோன்றி எழுந்த தேவி இலக்குமி போன்ற அழகினர், தெருக்களிலே தினந்தோறும் இந்த மாதிரி இருந்து (தம்மிடம்) (வாறவர்) வருபவர்களுடைய பொருள்களையும் தம்மிடமே தங்கும்படியாகப் பண்ணி, அவர்களுடன் கலந்து, போகவும் வரவும் வழி கொடுப்பவர்களின் வசப்பட்டவன் என்று சொல்லும்படியாக நான் திரியாமல். செல்வம் (பொருட்டிரள்) பொங்கவும், Լ/GՆ) தவப்பேற்றின் பயனால் உன்னைப் புகழும்படியான அறிவு புலப்பட்டு நான் உன்னை ஒளிவீசும் சந்தத் தமிழ்ப்பாக்களை நிரம்பப் பொழிந்து பாடவும் உன்னுடைய திருவருளைத் தந்தருளுக; கங்கை பொங்கியெழும் சடைவிரிந்த தேவர், உமை அன்போடு செய்த சிறந்த பூஜையை நன்று இது எனக் கொண்டு உள்ளங் குளிர்ந்த சிவன், பராபரமூர்த்தி அருளிய குழந்தையே! புதுமை நிறைந்த கங்கை நதிக்கு ஒப்பாகும் என்று சொல்லப்பட்டுள்ள மண்ணி யாற்றின் பக்கத்தே விளங்குகின்ற (கந்துகாபுரி) பந்தணைநல்லூர் என்னும் திருப்பதியானது செல்வங்களெல்லாம் மேம்பட்டு விளக்கமுறும் வண்ணம் (அத்தலத்துக்கு) வந்து வாழ்வு கொள்ளும் முருகனே! நற்கதி நிலை தம்மிடம் தங்குவதற்கு வேண்டிய பெருமை பொருந்திய பதினெண் கணங்கள். (வானவர்) தேவர், (அரி) இந்திரன், (கஞ்சத்தவர்) பிரமன், (முகுந்தர்) திருமால், நாவலர் (புலவர்கள்).இவர்தம் (கிளை) கூட்டம் சிறப்புற்று விளங்க, அருள்பாலித்து, வாழுங்கள் என்று அருளிய நாதனே! 0 மணிநதி மண்ணியாறு * கந்துகாபுரி - பந்தனை நல்லூர் கந்துகம்பந்து 11. அரி-இந்திரன்.