பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1076

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பந்தனை நல்லுர்) திருப் புகழ் உரை 517 சோர்வு கொண்டு (நான்) பொழுது போக்கினும், (உன்னுடைய) தாமரையன்ன திருவடிகளையும், தோள்கள் பன்னிரண்டையும், (இந்துளம்) கடம்பு முதலிய பல மலர்களாலாய மாலை அணிந்த திருமார்பையும் (பரிவு உளம்) அன்பு நிறைந்த (எனது) மனதில் (கொள்வேன்) (நான்) தியானிப்பேன் (அன்புடன் நான் தியானிப்பேன்). ஓம் நம (சிவாய) என்னும் அந்த சிவத்துடன் கலந்த உருவத்தினள், அஞ்சு திருமுகங்களைக் கொண்ட நீலி, கண்டி கலியாணி ரத்னமாலை அணிந்துள்ள கலியாணி, (விந்து)-சிவஞான சக்தி, ஒளி ஒசை இவைக்கு ஆதாரமாம் அபிராமி, அம்பிகை ஆன உமை பெற்ற (செவ்) வேள்ே! அபயக்குறிப்புடன் எழுந்த சத்தம் இட்ட அசுரர்களின் கூட்டமும் அவர்களின் மங்கையர்களும் (இறந்துபட) அவர்தம் உடற்சேறுடன் (மாமிசச் சேறுடன்) ரத்தம் புரண்டு ஒட, எட்டுத் திசையிலும் இருந்து புகழும் கந்தருவர்கள் பாட, நடனம் கொண்ட வேலனே! தினைப்புனத்து மங்கை, பரிசுத்தமான ஞானமய ரம்பை, எனது தாய், சந்திரன் போன்ற திருமுகம் கொண்ட பாவை, வஞ்சிக்கொடி போல்வாள், ஆகிய குறமான்-வள்ளியையும், தேவர் வளர்த்த மான் தேவசேனையையும் அணைந்து அழகு விளங்கும் திருமார்பனே! அழகிய (கரந்தை) திருநீற்றுப் பச்சை அறுகு தலையோடு, கொன்றை, நிலா, கங்கையாறு ᎦayyᎢ அணிந்த சடையை உடையவர் எழுந்தருளியுள்ளதும். அழகுள்ளதும், அழிவிலாததுமான திருப்பந்தணைநல்லூர் என்னும் தலத்தில் வீற்றிருந்து விளங்கும் தம்பிரானே! (கமலபாதமும்.மார்பமும்.உளங்கொள்வேனே) 860. சந்திரனும் அஞ்சி நானும் படியான பொலிவு நிறைந்த அழகிய முகத்துடன், மயிலும் (இவர்களின் சாயலின்முன் நமதுசாயல் எந்தமூலை) என பயப்படக் கிளியின் கூட்டங்கள் போல விளங்கி, இனிமை தரும்படியான மொழிகளைப் பேசும் மேனகை, ரதி எனப்படும் தேவலோகத்து அரம்பை போல விளங்கி,