திருப்புகழ் 837 சுருதியாய்  (திருக்குடவாயில்)
Thiruppugazh 837 surudhiyAy  (thirukkudavAyil)
Thiruppugazh - 837 surudhiyAy - thirukkudavAyilSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனன தானன தானன தானன
     தனன தானன தானன தானன
          தனன தானன தானன தானன ...... தனதான

......... பாடல் .........

சுருதி யாயிய லாயியல் நீடிய
     தொகுதி யாய்வெகு வாய்வெகு பாஷைகொள்
          தொடர்பு மாயடி யாய்நடு வாய்மிகு ...... துணையாய்மேல்

துறவு மாயற மாய்நெறி யாய்மிகு
     விரிவு மாய்விளை வாயருள் ஞானிகள்
          சுகமு மாய்முகி லாய்மழை யாயெழு ...... சுடர்வீசும்

பருதி யாய்மதி யாய்நிறை தாரகை
     பலவு மாய்வெளி யாயொளி யாயெழு
          பகலி ராவிலை யாய்நிலை யாய்மிகு ...... பரமாகும்

பரம மாயையி னேர்மையை யாவரு
     மறியொ ணாததை நீகுரு வாயிது
          பகரு மாறுசெய் தாய்முதல் நாளுறு ...... பயனோதான்

கருது மாறிரு தோள்மயில் வேலிவை
     கருதொ ணாவகை யோரர சாய்வரு
          கவுணி யோர்குல வேதிய னாயுமை ...... கனபாரக்

களப பூண்முலை யூறிய பாலுணு
     மதலை யாய்மிகு பாடலின் மீறிய
          கவிஞ னாய்விளை யாடிடம் வாதிகள் ...... கழுவேறக்

குருதி யாறெழ வீதியெ லாமலர்
     நிறைவ தாய்விட நீறிட வேசெய்து
          கொடிய மாறன்மெய் கூனிமி ராமுனை ...... குலையாவான்

குடிபு கீரென மாமது ராபுரி
     யியலை யாரண வூரென நேர்செய்து
          குடசை மாநகர் வாழ்வுற மேவிய ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

சுருதியாய் இயலாய் இயல் நீடிய தொகுதியாய் ... வேதமாய்,
இயல் தமிழாய், அத்தகைய இயற்றமிழின் மிக்குள்ளதான பகுதியாய்,

வெகுவாய் வெகு பாஷை கொள் தொடர்புமாய் ... பலவுமாய்,
பல மொழிகளில் கொள்ளப்பட்ட சம்பந்தமுமாய்,

அடியாய் நடுவாய் மிகு துணையாய் மேல் ... அடிப்படையாய்,
நடுப்பாகமாய், மிக்க துணையாய், பின்னும்

துறவுமாய் அறமாய் நெறியாய் ... அனைத்தையும் துறந்த
நிலையதாய், தருமமாய், நல்லொழுக்க வழியாய்,

மிகு விரிவுமாய் விளைவாய் அருள் ஞானிகள் சுகமுமாய் ...
மிகுந்த விரிவு உடையதாய், விளைவுப் பொருளாய், அருள் நிறைந்த
ஞானிகள் அனுபவிக்கும் சுகப் பொருளாய்,

முகிலாய் மழையாய் எழுசுடர் வீசும் பருதியாய் மதியாய் ...
மேகமாய், மழையாய், ஏழு வகைச் சுடர்க் கிரணங்களை வீசும் சூரியனாய்,
சந்திரனாய்,

நிறை தாரகை பலவுமாய் வெளியாய் ஒளியாய் ... நிறைந்துள்ள
நட்சத்திரங்கள் பலவுமாய், ஆகாய வெளியாய் ஜோதியாய்,

எழு பகல் இராவு இலையாய் நிலையாய் ... உண்டாகின்ற பகலும்
இரவும் இல்லாததாய், நிலைத்துள்ளதாய்,

மிகு பரமாகும் பரம மாயையின் நேர்மையை ... மிக்க மேலான
பொருளான பெரிய மாயையின் உண்மைத் தத்துவத்தை,

யாவரும் அறிய ஒணாததை ... எவரும் அறிய முடியாததை,

நீ குருவாய் இது பகருமாறு செய்தாய் ... நீ குருவாக வந்து
(அதை உலகுக்கு) எடுத்து ஓதுமாறு (எனக்குத்) திருவருள் புரிந்தாய்*.

முதல் நாள் உறு பயனோ தான் ... (இந்த பாக்கியம்) நான் முற்
பிறப்பில் செய்த தவத்தின் பயன் தானோ?

கருதும் ஆறிரு தோள் மயில் வேல் இவை ... யாவராலும் கருதிப்
போற்றப்படும் பன்னிரு தோள்கள், மயில், வேல் இவற்றை

கருத ஒணா வகை ... எவரும் கண்டு கருதாத வகையில் (மறைத்து)**,

ஓர் அரசாய் வரு கவுணியோர் குல வேதியனாய் ...
(சீகாழிப்பதியின்) அரசாக வந்த கவுணிய குல அந்தணனாகி,

உமை கன பார களப பூண் முலை ஊறிய பால் உ(ண்)ணு
மதலையாய்
... பார்வதியின் மிக்க பாரமான, கலவைச் சாந்து அணிந்த
மார்பில் சுரந்த பாலைப் பருகிய குழந்தையாகி (திருஞானசம்பந்தனாகி),

மிகு பாடலின் மீறிய கவிஞனாய் விளையாடு இடம் ... மிக்க
பாடல்கள் (தேவாரம்) பாடுவதில் மேம்பட்ட கவித் திறன் பெற்றவனாய்
திருவிளையாடல்கள் செய்திருந்த சமயத்தில்,

வாதிகள் கழுவேற குருதி ஆறு எழ ... வீண் வாதத்துக்கு வந்த
(சமணர்கள்) கழுவில் ஏறவும், அவர்களுடைய இரத்தம் ஆறாகப்
பெருகவும்,

வீதி எ(ல்)லாம் மலர் நிறைவதாய் விட ... தெருக்களில் எல்லாம்
பூ மாரி நிரம்பிடவும்,

நீறு இடவே செய்து ... திரு நீற்றை யாவரும் இடும்படிச் செய்து,

கொடிய மாறன் மெய் கூன் நிமிரா ... முன்பு கொடியவனாக இருந்த
மாறனாகிய பாண்டிய மன்னனின் கூன்பட்ட உடல் நிமிர்ந்து விளங்கவும்,

முனை குலையா வான் குடி புகீர் என ... (சமண்) பகையை
அழித்து, பொன்னுலகில் உங்கள் ஊருக்குக் குடி புகுவீர்கள் என

மா மதுரா புரி இயலை ஆரண ஊர் என நேர் செய்து ... சிறந்த
மதுரையின் முன்னிருந்த சமண நிலையை மாற்றி வேதபுரி
என்னும்படியாக அந்த ஊரை நேர்மையான செந்நெறியில் சேர்ப்பித்து,

குடசை மா நகர் வாழ்வுற மேவிய பெருமாளே. ...
திருக்குடவாயில்*** என்னும் பெரிய நகரில் வாழ்வு கொண்டு வீற்றிருக்கும்
பெருமாளே.


* அருணகிரி நாதர் முருகவேளிடம் தான் பெற்ற உபதேசத்தின் பெருமையை
நினைத்து வியக்கின்றார்.


** முருகவேள் தமது பன்னிரு தோள், மயில், வேல் இவைகளை மறைத்து ஞான
சம்பந்தராக வந்தார் என்பது பொருள்.


*** திருக்குடவாயில் திருவாரூரிலிருந்து நீடாமங்கலம் போகும் வழியில் குறடாச்சேரி
ரயில் நிலையத்தின் வடக்கே 8 மைலில் உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.1023  pg 2.1024  pg 2.1025  pg 2.1026 
 WIKI_urai Song number: 841 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 837 - surudhiyAy (thirukkudavAyil)

surudhiyAy iyalAy iyal neediya
     thogudhiyAy veguvAy vegu bAshaikoL
          thodarbumAy adiyAy naduvAy migu ...... thuNaiyAymEl

thuRavumAy aRamAy neRiyAy migu
     virivumAy viLaivAy aruL nyAnigaL
          sukamumAy mugilAy mazhaiyAy ezhu ...... sudarveesum

parudhiyAy madhiyAy niRai thAragai
     palavumAy veLiyAy oLiyAy ezhu
          pagalirA vilaiyAy nilaiyAy migu ...... paramAgum

paRama mAyaiyi nErmaiyai yAvarum
     aRiyo NAdhadhai nee guruvAy idhu
          pagarumARu seydhAy mudhal nALuRu ...... payanOthAn

karudhum ARiru thOL mayil vEl ivai
     karu dhONA vagaiyOr arasAy varu
          kavuNiyOr kula vEdhiyanAy umai ...... ganabArA

kaLaba pUN mulai URiya pAl uNu
     madhalaiyAy migu pAdalin meeRiya
          kavinya nAy viLaiyAdidam vAdhigaL ...... kazhuvERa

kurudhi ARezha veedhi elA malar
     niRaiva dhAyvida neeR idavE seydhu
          kodiya mARan mey kUnimirA munai ...... kulaiyAvAn

kudi pugeerena mA madhurApuri
     iyalai AraNa Urena nEr seydhu
          kudasai mAnagar vAzhvuRa mEviya ...... perumALE.

......... Meaning .........

surudhiyAy iyalAy iyal neediya thogudhiyAy: It is the VedA (scripture); literary Tamil and the predominant aspect of that Tamil literature;

veguvAy vegu bAshaikoL thodarbumAy: It is all and sundry; It is the commonest link between several languages;

adiyAy naduvAy migu thuNaiyAymEl: It is the foundation and the middle part as well; It is the closest companion; further,

thuRavumAy aRamAy neRiyAy: It is the renunciation of everything; It is the righteousness; It is the ethical code;

migu virivumAy viLaivAy aruL nyAnigaL sukamumAy: It is the vast expanse; It is the outcome; It is the bliss enjoyed by the gracious wise ones;

mugilAy mazhaiyAy ezhu sudarveesum parudhiyAy madhiyAy: It is the cloud; It is the rain; It is the Sun that emits seven different brightly coloured rays; It is the Moon;

niRai thAragai palavumAy veLiyAy oLiyAy: It is the multitude of stars; It is the ether and the bright effulgence;

ezhu pagalirA vilaiyAy nilaiyAy: It is a state where there is no day or night; It is in a state of stability;

migu paramAgum paRama mAyaiyi nErmaiyai: It is the supreme substance, which is the True Significance of the great delusion;

yAvarum aRiyo NAdhadhai: It is something that cannot be discerned by all;

nee guruvAy idhu pagarumARu seydhAy: You came as my Master and taught me* so that I could speak about It to this world!

mudhal nALuRu payanOthAn: Is this blessing due to the good deeds and penance I have done in my previous birth?

karudhum ARiru thOL mayil vEl ivai karu dhONA vagai: Your twelve shoulders, peacock and spear, which are praised by all, were deftly concealed** so that no one could see them,

yOr arasAy varu kavuNiyOr kula vEdhiyanAy: and You came as the prince (in SeegAzhi) taking birth as a brahmin in the KauNiya lineage;

umai ganabArA kaLaba pUN mulai URiya pAl uNu madhalaiyAy: You became the distinguished child (ThirugnAna SambandhAr) who imbibed the divine milk from the heavy, sandal-paste-smeared bosom of Mother PArvathi;

migu pAdalin meeRiya kaviny a nAy viLaiyAdidam: You were the prolific poet who sang great songs (ThEvAram) and were performing many a miracle; at that time,

vAdhigaL kazhuvERa kurudhi ARezha: the confronting ChamaNas (who challenged You for a debate were defeated and) sent to gallows; their blood gushed like a river;

veedhi elA malar niRaiva dhAyvida neeR idavE seydhu: people in the streets were showering flowers on You profusely, and You distributed the holy ash making everyone wear it;

kodiya mARan mey kUnimirA: the erstwhile evil king, KUn PANdiyan, who had a hunchback, was cured of his illness, and You straightened his back;

munai kulaiyAvAn kudi pugeerena: by destroying the enmity of ChamaNas, You blessed everyone to settle in the celestial world;

mA madhurApuri iyalai AraNa Urena nEr seydhu: You transformed the great city of Madhurai, which was a bastion of ChamaNas, into the most righteous place by renaming it as "The Seat of the VEdAs" (VEdapuri);

kudasai mAnagar vAzhvuRa mEviya perumALE.: You are seated with relish in ThirukkudavAyil***, Oh Great One!


* AruNagirinAthar remembers in ecstasy the preaching, specially given to him by Lord Murugan.


** Lord Murugan incarnated as ThirugnAna Sambandhar without His twelve shoulders, peacock and the spear.


*** ThirukkudavAyil is on the route from ThiruvArUr to NeedAmangalam, 8 miles north of KoRadAcheri railway station.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 837 surudhiyAy - thirukkudavAyil

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]