திருப்புகழ் 836 அயிலார் மைக்கடு  (திருக்குடவாயில்)
Thiruppugazh 836 ayilArmaikkadu  (thirukkudavAyil)
Thiruppugazh - 836 ayilArmaikkadu - thirukkudavAyilSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனனா தத்தன தனனா தத்தன
     தனனா தத்தன ...... தனதான

......... பாடல் .........

அயிலார் மைக்கடு விழியார் மட்டைகள்
     அயலார் நத்திடு ...... விலைமாதர்

அணைமீ திற்றுயில் பொழுதே தெட்டிக
     ளவரே வற்செய்து ...... தமியேனும்

மயலா கித்திரி வதுதா னற்றிட
     மலமா யைக்குண ...... மதுமாற

மறையால் மிக்கருள் பெறவே யற்புத
     மதுமா லைப்பத ...... மருள்வாயே

கயிலா யப்பதி யுடையா ருக்கொரு
     பொருளே கட்டளை ...... யிடுவோனே

கடலோ டிப்புகு முதுசூர் பொட்டெழ
     கதிர் வேல் விட்டிடு ...... திறலோனே

குயிலா லித்திடு பொழிலே சுற்றிய
     குடவா யிற்பதி ...... யுறைவோனே

குறமா தைப்புணர் சதுரா வித்தக
     குறையா மெய்த்தவர் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

அயில் ஆர் மைக் கடு விழியார் மட்டைகள் அயலார் நத்திடு
விலைமாதர்
... வேல் போன்ற, மை பூசிய, விஷம் கொண்ட கண்களை
உடையவர்கள், பயனற்றவர்கள், பக்கத்தில் வருபவர்கள் விரும்புகின்ற
வேசிகள்,

அணை மீதில் துயில் பொழுதே தெட்டிகள் அவர் ஏவல்
செய்து தமியேனும்
... படுக்கையில் தூங்கும் பொழுதிலேயே
வஞ்சிப்பவர்கள், அவர்கள் ஏவின வேலைகளைச் செய்து
தன்னந்தனியனான அடியேனும்

மயலாகித் திரிவது தான் அற்றிட மல மாயைக் குணம் அது
மாற
... மயக்கம் கொண்டவனாகத் திரிகின்ற செய்கை ஒழிந்து போக,
ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களால் ஏற்படும் தீய குணம்
ஒழிந்து போக,

மறையால் மிக்க அருள் பெறவே அற்புத மது மாலைப் பதம்
அருள்வாயே
... வேதங்களை நான் ஓதி ஓதி, நின் திருவருளைப்
பெறுமாறு, அற்புதமான தேன் நிரம்பிய மாலைகள் அணியப்பட்ட
திருவடியைத் தந்து அருளுக.

கயிலாயப் பதி உடையாருக்கு ஒரு பொருளே கட்டளை
இடுவோனே
... கயிலை மலையை உடையவராகிய சிவபெருமானுக்கு
ஒப்பற்ற பிரணவப் பொருளை மேல் நிலையில் நின்று உபதேசித்தவனே,

கடல் ஓடிப் புகு முது சூர் பொட்டு எழ கதிர் வேல் விட்டிடு
திறலோனே
... கடலில் ஓடிப் புகுந்த பழைய சூரன் அழிபட, ஒளி
பொருந்திய வேலை விட்ட பராக்கிரமசாலியே,

குயில் ஆலித்திடு பொழிலே சுற்றிய குடவாயில் பதி
உறைவோனே
... குயில்கள் கூவுகின்ற சோலைகள் சூழ்ந்துள்ள
குடவாயில்* என்னும் நகரில் உறைபவனே,

குற மாதைப் புணர் சதுரா வித்தக குறையா மெய்த்தவர்
பெருமாளே.
... குறப் பெண்ணாகிய வள்ளியை மணம் செய்த
வல்லமை உடையவனே, ஞான மூர்த்தியே, குறைவுபடாத உண்மைத்
தவ நிலையை உடையார் தம் பெருமாளே.


* திருக்குடவாயில் திருவாரூரிலிருந்து நீடாமங்கலம் போகும் வழியில் குறடாச்சேரி
ரயில் நிலையத்தின் வடக்கே 8 மைலில் உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.1021  pg 2.1022  pg 2.1023  pg 2.1024 
 WIKI_urai Song number: 840 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 836 - ayilAr maikkadu (thirukkudavAyil)

ayilAr maikkadu vizhiyAr mattaikaL
     ayalAr naththidu ...... vilaimAthar

aNaimee thitRuyil pozhuthE thettika
     LavarE vaRseythu ...... thamiyEnum

mayalA kiththiri vathuthA natRida
     malamA yaikkuNa ...... mathumARa

maRaiyAl mikkaruL peRavE yaRputha
     mathumA laippatha ...... maruLvAyE

kayilA yappathi yudaiyA rukkoru
     poruLE kattaLai ...... yiduvOnE

kadalO dippuku muthucUr pottezha
     kathir vEl vittidu ...... thiRalOnE

kuyilA liththidu pozhilE sutRiya
     kudavA yiRpathi ...... yuRaivOnE

kuRamA thaippuNar sathurA viththaka
     kuRaiyA meyththavar ...... perumALE.

......... Meaning .........

ayil Ar maik kadu vizhiyAr mattaikaL ayalAr naththidu vilaimAthar: They have poisonous eyes, looking like the spear, smeared with black paint; they are utterly useless; they are the whores sought after by passers-by;

aNai meethil thuyil pozhuthE thettikaL avar Eval seythu thamiyEnum: they are capable of deceit even when one is asleep on the bed; I have been a lone runner of errands for them;

mayalAkith thirivathu thAn atRida mala mAyaik kuNam athu mARa: in order to put an end to my roaming about in a daze and to get rid of my wickedness arising from the three slags, namely, haughtiness, karma and delusion,

maRaiyAl mikka aruL peRavE aRputha mathu mAlaip patham aruLvAyE: I wish to chant the VEdAs repeatedly so as to obtain Your gracious blessing; for that, kindly grant me Your hallowed feet adorned with garlands oozing with wonderful honey!

kayilAyap pathi udaiyArukku oru poruLE kattaLai iduvOnE: You preached from a high pedestal to the Lord of KailAsh, SivA, the meaning of the matchless PraNava ManthrA!

kadal Odip puku muthu cUr pottu ezha kathir vEl vittidu thiRalOnE: When the old demon, SUran, hid himself in the sea, You wielded Your dazzling spear to destroy him, Oh valorous One!

kuyil Aliththidu pozhilE sutRiya kudavAyil pathi uRaivOnE: You have Your abode in the town of KudavAyil, surrounded by groves where cuckoos are chirping and cooing!

kuRa mAthaip puNar sathurA viththaka kuRaiyA meyththavar perumALE.: You have united in holy matrimony with VaLLi, the damsel of the KuRavAs, Oh Brave One! You are the Epitome of True Knowledge! You are the Lord of the devotees who are impeccable and have performed pure penance, Oh Great One!


* ThirukkudavAyil is on the route from ThiruvArUr to NeedAmangalam, 8 miles north of KoRadAcheri railway station.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 836 ayilAr maikkadu - thirukkudavAyil

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]