பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1022

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குடவாயில் திருப்புகழ் உரை 463 அம்பு முதலிய பாணங்களைக் கொண்டிருந்தகும்பனும்) கும்பகர்ணனும் உள்ளங்கலங்கக் கொடுங் கோபத்துடன் நின்று அம்பை ஏவி வெற்றிகொண்ட மேக வர்ணனாம் திருமாலின் மருகனே! பிறை, (கரந்தை) திருநீற்றுப் பச்சை, தும்பை, கொன்றை, 巒 கங்கை, இவைதமை அணியும் சிவபிரானுடைய (சிவபிரான் தேவர்கள் பால்வைத்த) அன்பால் தோன்றின குமரேசனே! தேவேந்திரன் தன் பதத்தைப் பெறுமாறு தேவர்களுடைய பயத்தைத் தவிர்த்த பின்னர், எண்கண் என்னும் தலத்தில் வீற்றிருந்தருளும் பெருமாளே! (செம்பதம் பணிந்திரென்று மொழிவாயே) திருக்குடவாயில் 840. வேல் போன்ற, கரிய விஷம் போன்ற (அல்லது மையூசிய விஷம் கொண்ட) கண்களை உடையவர்கள். (மட்டைகள்) - பயனற்றவர்கள், பக்கத்தில் வருபவர்கள் (அல்லது பிறர்) ஆசை கொள்ளும் விலைமா தர்கள் (விலைக்கு Զ-Լ—GԾԴGՆ) விற்பவர்கள்) படுக்கையில் பொழுதிலேயே (தெட்டிகள்) வஞ்சிப்பவர்கள்-(ஆ ய பொ துமகளிர் ) ஏவின வேலைகளைச் செய்து அடியேனும் மோக மயக்கம் கொண்டவனாய்த் திரிகின்றதுதான் ஒழிந்துபோக, ஆணவம், கன்மம், மாயை எனப்படும் மும்மலங்களால் ஏற்படும் மாயைக்குணம் ஒழிந்துபோக மறைகளை வேதங்களை ஒதுவதால் (ஒதி) நிரம்பத் திருவருளை நான் பெறுமாறு அற்புதமான தேன் நிரம்பிய மாலைகள் அணியப்பட்ட உனது திருவடியைத் தந்தருளுக. கயிலாயப்பதியை உடையவராகிய சிவனுக்கு ஒப்பற்ற பிரணவப் பொருளை மேல்நிலையில் நின்று உபதேசித்தவனே! கடலில் ஒடிப் புகுந்த பழைய சூரன் அழிபட ஒளி வேலைப் பிரயோகித்த பராக்ரமசாலியே!