திருப்புகழ் 838 தொடுத்த நாள்முதல்  (வலிவலம்)
Thiruppugazh 838 thoduththanALmudhal  (valivalam)
Thiruppugazh - 838 thoduththanALmudhal - valivalamSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனத்த தானன தனதன தனதன
     தனத்த தானன தனதன தனதன
          தனத்த தானன தனதன தனதன ...... தனதான

......... பாடல் .........

தொடுத்த நாள்முதல் மருவிய இளைஞனும்
     இருக்க வேறொரு பெயர்தம திடமது
          துவட்சி யேபெறி லவருடன் மருவிடு ...... பொதுமாதர்

துவக்கி லேயடி படநறு மலரயன்
     விதித்த தோதக வினையுறு தகவது
          துறக்க நீறிட அரகர வெனவுள ...... மமையாதே

அடுத்த பேர்மனை துணைவியர் தமர்பொருள்
     பெருத்த வாழ்விது சதமென மகிழ்வுறு
          மசட்ட னாதுலன் அவமது தவிரநி ...... னடியாரோ

டமர்த்தி மாமலர் கொடுவழி படஎனை
     யிருத்தி யேபர கதிபெற மயில்மிசை
          யரத்த மாமணி யணிகழ லிணைதொழ ...... அருள்தாராய்

எடுத்த வேல்பிழை புகலரி தெனஎதிர்
     விடுத்து ராவணன் மணிமுடி துணிபட
          எதிர்த்து மோர்கணை விடல்தெரி கரதலன் ...... மருகோனே

எருக்கு மாலிகை குவளையி னறுமலர்
     கடுக்கை மாலிகை பகிரதி சிறுபிறை
          யெலுப்பு மாலிகை புனைசடி லவனருள் ...... புதல்வோனே

வடுத்த மாவென நிலைபெறு நிருதனை
     அடக்க ஏழ்கட லெழுவரை துகளெழ
          வடித்த வேல்விடு கரதல ம்ருகமத ...... புயவேளே

வனத்தில் வாழ்குற மகள்முலை முழுகிய
     கடப்ப மாலிகை யணிபுய அமரர்கள்
          மதித்த சேவக வலிவல நகருறை ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

தொடுத்த நாள் முதல் மருவிய இளைஞனும் இருக்க ...
முதலிலிருந்தே பழக்கப்பட்ட ஒரு இளைஞன் இருக்கவும்,

வேறொரு பெயர் தமது இடம் அது துவட்சியே பெறில்
அவருடன் மருவிடு(ம்) பொது மாதர் துவக்கிலே அடி பட
...
வேறொருவர் இடத்தில் சமயம் கிடைக்கும்போது காம ஒழுக்கத்தில்
ஈடுபட்டுச் சேரும் பொது மகளிர்களின் சிக்கலில் அகப்படும்படியாக,

நறு மலர் அயன் விதித்த தோதக வினை உறு தகவு அது
துறக்க
... தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமன் விதித்த துக்கம் தரும்
தந்திரமான செயல்களால் நேரும் தீய ஒழுக்கத்தை ஒழிக்கவும்,

நீறு இட அரகர என உ(ள்)ளம் அமையாதே ... திரு நீற்றை
இடவும், அரகர என்று கூறவும் என் உள்ளம் பொருந்தாதோ?

அடுத்த பேர் மனை துணைவியர் தமர் பொருள் பெருத்த
வாழ்வு இது சதம் என
... உற்றார்களும், மனைவி, சகோதரிகளும்,
சுற்றத்தாரும், செல்வமும் (இவைகள் கூடிய) பெரிய வாழ்வாகிய
இதனையே நிலைத்திருப்பது என்று,

மகிழ் உறும் அசட்டன் ஆதுலன் அவம் அது தவிர ...
எனக்குள்ளேயே மகிழ்கின்ற முட்டாள், வறிஞன் (ஆகிய எனது)
வீணான வாழ்க்கை ஒழிய,

நின் அடியாரோடு அமர்த்தி மா மலர் கொ(ண்)டு வழி பட
எனை இருத்தியே
... உனது அடியார்களுடன் ஒருவனாகச் சேர்த்து,
நல்ல மலர்களைக் கொண்டு உன்னை வழிபட, என்னைத் தவ நிலையில்
இருக்கச் செய்து,

பர கதி பெற மயில் மிசை அரத்த மா மணி அணி கழல்
இணை தொழ அருள் தாராய்
... மேலான கதியை நான் அடைய,
மயிலின் மீது ஏறி, சிவந்த இரத்தினங்கள் பொருந்திய, வீரக் கழல்கள்
அணிந்த உனது திருவடிகளைத் தொழும்படியாக அருள் புரிவாயாக.

எடுத்த வேல் பிழை புகல் அரிது என எதிர் விடுத்து ... நீ
எடுத்துச் செலுத்திய வேலாயுதம் குறி தவறுதல் இல்லை என்பது
போல, எதிரே செலுத்தி

ராவணன் மணி முடி துணி பட எதிர்த்தும் ஓர் கணை விடல்
தெரி கரதலன் மருகோனே
... ராவணனுடைய இரத்தின முடிகள்
சிதறுமாறு எதிர்த்தும், ஒப்பற்ற அம்பைச் செலுத்தவும் வல்ல
திருக்கரத்தை உடைய ராமனின் (திருமாலின்) மருகனே,

எருக்கு மாலிகை குவளையின் நறு மலர் கடுக்கை மாலிகை
பகிரதி சிறு பிறை
... வெள்ளெருக்கு மாலை, கழுநீரின் வாசனை
உள்ள மலர், கொன்றை மாலை, கங்கை ஆறு, இளம்பிறை,

எலுப்பு மாலிகை புனை சடில் அவன் அருள் புதல்வோனே ...
எலும்பு மாலை (இவற்றை எல்லாம்) அணிந்த சடையை உடைய
சிவபெருமானின் மகனே,

வடுத்த மா என நிலை பெறு நிருதனை அடக்க ... பிஞ்சு விட்ட
மாவடு வெளியே தோன்றும்படி அமைந்த (மாமரமாக) நிலை பெற்று
நின்ற சூரனை அடக்கவும்,

ஏழ் கடல் எழு வரை துகள் எழ ... ஏழு கடல்களும் வற்ற, ஏழு
மலைகளும் பொடியாக,

வடித்த வேல் விடு கரதல ம்ருகமத புய வேளே ... கூரிய
வேலாயுதத்தைச் செலுத்திய திருக்கரத்தை உடையவனே, கஸ்தூரி
அணிந்த திருப்புயங்களை உடையவனே,

வனத்தில் வாழ் குற மகள் முலை முழுகிய கடப்ப மாலிகை
அணி புய
... காட்டில் வசிக்கின்ற குறப் பெண்ணாகிய வள்ளியின்
மார்பிலே முழுகிய கடப்ப மாலையை அணிந்த திருப்புயனே,

அமரர்கள் மதித்த சேவக வலிவல நகர் உறை பெருமாளே. ...
தேவர்கள் மதிக்கின்ற வலிமையுள்ளவனே, வலிவலம்* என்னும்
தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.


* வலிவலம் திருவாரூருக்கு அருகில் உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.1025  pg 2.1026  pg 2.1027  pg 2.1028  pg 2.1029  pg 2.1030 
 WIKI_urai Song number: 842 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 838 - thoduththa nALmudhal (valivalam)

thoduththa nALmuthal maruviya iLainjanum
     irukka vERoru peyarthama thidamathu
          thuvatchi yEpeRi lavarudan maruvidu ...... pothumAthar

thuvakki lEyadi padanaRu malarayan
     vithiththa thOthaka vinaiyuRu thakavathu
          thuRakka neeRida arahara venavuLa ...... mamaiyAthE

aduththa pErmanai thuNaiviyar thamarporuL
     peruththa vAzhvithu sathamena makizhvuRu
          masatta nAthulan avamathu thavirani ...... nadiyArO

damarththi mAmalar koduvazhi padaenai
     yiruththi yEpara kathipeRa mayilmisai
          yaraththa mAmaNi yaNikazha liNaithozha ...... aruLthArAy

eduththa vElpizhai pukalari thenaethir
     viduththu rAvaNan maNimudi thuNipada
          ethirththu mOrkaNai vidaltheri karathalan ...... marukOnE

erukku mAlikai kuvaLaiyi naRumalar
     kadukkai mAlikai pakirathi siRupiRai
          yeluppu mAlikai punaisadi lavanaruL ...... puthalvOnE

vaduththa mAvena nilaipeRu niruthanai
     adakka Ezhkada lezhuvarai thukaLezha
          vadiththa vElvidu karathala mrukamatha ...... puyavELE

vanaththil vAzhkuRa makaLmulai muzhukiya
     kadappa mAlikai yaNipuya amararkaL
          mathiththa sEvaka valivala nakaruRai ...... perumALE.

......... Meaning .........

thoduththa nAL muthal maruviya iLainjanum irukka: While she has been having an affair with a young lad whom she knew from the beginning,

vERoru peyar thamathu idam athu thuvatchiyE peRil avarudan maruvidu(m) pothu mAthar thuvakkilE adi pada: she looks for an opportunity to engage herself in carnal relationship with someone else; I have been ensnared in traps laid by whores like her;

naRu malar ayan vithiththa thOthaka vinai uRu thakavu athu thuRakka: to get rid of the vice caused by the tricks played upon me as destined by BrahmA, ensconced on a lotus,

neeRu ida arahara ena u(L)Lam amaiyAthE: to wear the holy ash and to chant the Lord's name as "Hara Hara!", why cannot my mind concentrate?

aduththa pEr manai thuNaiviyar thamar poruL peruththa vAzhvu ithu satham ena: The great life that I lead, along with my friends, wife, sisters, relatives and wealth, is considered by me as permanent;

makizh uRum asaddan Athulan avam athu thavira: I am an utter fool pleased within myself; to put an end to this miserable and wasteful life,

nin adiyArOdu amarththi mA malar ko(N)du vazhi pada enai iruththiyE: You have to place me in a blissful state among Your devotees, making me worship You with the choicest flowers;

para kathi peRa mayil misai araththa mA maNi aNi kazhal iNai thozha aruL thArAy: in order that I am liberated, kindly mount Your peacock and bless me with Your hallowed feet, wearing the triumphant anklets, studded with great red gems!

eduththa vEl pizhai pukal arithu ena ethir viduththu: He shot His weapon just like You do Your spear, with the quality of rarely missing the target;

rAvaNan maNi mudi thuNi pada ethirththum Or kaNai vidal theri karathalan marukOnE: He knocked the gem-studded crowns of RAvaNan, wielding His matchless arrow; such a powerful hand belonged to Rama; You are the nephew of that Lord VishNu!

erukku mAlikai kuvaLaiyin naRu malar kadukkai mAlikai pakirathi siRu piRai: The garland of erukku leaves, garlands of fragrant red lilies and kondRai (Indian laburnum) flowers, the river Gangai, crescent moon,

eluppu mAlikai punai sadil avan aruL puthalvOnE: and the garland of bones adorn His matted hair; You are the son of that Lord SivA!

vaduththa mA ena nilai peRu niruthanai adakka: He assumed the disguise of a mango tree, standing firm with baby mangoes sprouting out; that demon SUran was totally subdued;

Ezh kadal ezhu varai thukaL ezha: the seven seas dried up; and the seven hills were shattered to pieces;

vadiththa vEl vidu karathala mrukamatha puya vELE: when You wielded Your sharp spear from Your lovely hand! Your shoulders wear the fragrant musk, Oh Lord!

vanaththil vAzh kuRa makaL mulai muzhukiya kadappa mAlikai aNi puya: The kadappa garland on Your shoulders is submerged under the bosom of VaLLi, the damsel of the KuRavAs, who lives in the forest!

amararkaL mathiththa sEvaka valivala nakar uRai perumALE.: Your valour is highly regarded by the celestials! You have Your abode in Valivalam*, Oh Great One!


* Valivalam is situated near ThiruvArUr.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 838 thoduththa nALmudhal - valivalam

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]