பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1026

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வலிவலம்) திருப்புகழ் உரை 467 யாவராலும் கருதிப் போற்றப்படும் பன்னிரு தோள்கள், மயில், மேல் இவைதமை எவரும் கண்டு கருதா வகையில் (மறைத்து), (காழிப்பதி) அரசாக வந்த கவுணிய குலத்தின = சிறந்த (வேதியனாய்) மறையோனாய், உமாதேவியின் § шгтлгLогт6uт கலவைச் சாந்து அணிந்த கொங்கையில் ஊறின பாலை உண்ட குழந்தையாய், மிக்க பாடல்கள் பாடுவதில் எவரினும் மேம்பட்ட கவிஞனாய்த் திருவிளையாடல்கள் செய்திருந்த சமயத்தில், வீண்வாதுக்கு வந்த (சமணர்கள்) கழுவிலேறவும். அவர்கள் ரத்தம் ாகப் பெருகவும், வீதிகளில் எல்லாம் பூமாரி §§°). யாவரும் இடும்படிச்செய்து, (கொடிய) மனக்கோட்டம் கொண்டிருந்த செம்மைநெறி கோனி (விளைவுபட்டு)ச் சமண்ச்ார்பிற் பட்டிருந்த பாண்டியனுடைய கூன் பட்ட உடல் நிமிர்ந்து விளங்கவும், (முனை) (சமனன்) பகையை அழித்து, வானில் (ப்ொன்னுலகில்) குடி புகுவீர்களாக எனச் சிறந்த மதுரைப் பட்டணத்தின் (முன்பிருந்த சமணன்) நிலையை மாற்றி வேதபுரி என்னும்படியாக அந்த ஊரை நேர்மையான செந்நெறியிற் சேர்ப்பித்துத் திருக்குடவாயில் என்னும் பெரிய நகரத்தில் வாழ்வுகொண்டு வீற்றிருக்கும் பெருமாளே! (நீ குருவாய் இது பகருமாறு செய்தாய்) வலிவலம் 842. முதன் முதலாகப் பழக்கம் ஏற்பட்ட நாள் முதலாகத் தம்மிடம் பொருந்தியிருக்கும் ர் இளைஞன் இருக்கவும், வேறொரு பேர்வழி தேதி: (காமத்தினால்) குழைவு கொண்டு வரப்பெற்றால் அவருடன் சேர்கின்ற பொதுமகளிருடைய

  1. வான்குடி புகீரென (மதுராபுரி யியலை ஆரண ஊரென நேர் செய்து). சமணரொடு செய்த வாதில் இறுதியாகப் பாடின திருப்பாசுரத்துப் பதிகப் பயனைக் கூறுமிடத்து

"பாசுரஞ் சொன்ன பத்தும் வல்லார்கள் வானோர் உலகாளவும் வல்லரன்றே" எனச் சம்பந்தப் பெருமான் அருளியுள்ளார்-சம்பந்தர் 3.54-12