பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1028

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ഖിഖങ്ങil திருப்புகழ் உரை 469 கட்டிலே (சிக்கலிலே) மாட்டிக் கொள்ளும்படியாக நறுமணமுள்ள (தாமரை) மலரில் வீற்றிருக்கும் பிரமன் விதித்த வஞ்சகத்தொடு கூடிய (அல்லது துக்கம் தருவதான) வினை ப்ொருந்திய செயல்களை ஒழிக்கவும், திருநீறிடவும், ஹரஹர என்று வாய்விட்டுரைக்கவும் (என்னுடைய) (உள்ளம்) மனது பொருந்தாதோ! (அடுத்தபேர்) உற்றார்களும் (நட்பினரும்), மனைவியும், சகோதரிகளும், சுற்றத்தாரும், செல்வமும் ஆகிய இவை கூடிய பெரிய வாழ்வாகிய இதனையே (சதமென) நிலையானதென்று மகிழ்கின்ற (அசடன்) முட்டாள், (ஆதுலன்) வறிஞன் ஆகிய எனது வீணான வாழ்க்கை ஒழிய, உன்னுடைய அடியார்களோடு (என்னையும்) (ஒருவனாகச்) சேர்த்து நல்ல மலர்கொண்டு உன்னை வழிபடுமா என்னைத் (தவநிலையில்) இருத்தி, ம்ேலானகதியை (நான்) பெற, மயில்மீது விளங்கும் சிவந்த சிறந்த ரத்னமணிகள் பொருந்திய வீரக்கழல்களனிந்த இரு திருவடிகளைத் தொழும்படியாக உனது திரு அருளைத் தந்தருளுக; (நீ) எடுத்துச் செலுத்தின வேலாயுதமானது குறி) தவறுதல் இல்லை என்பதுபோல எதிரே பிரயோகித்து, இராவணனுடைய ரத்ன முடிகள் சிதறுமாறு எதிர்த்தும் நேராகத் தனது ஒப்பற்ற ஒரம்பைச் செலுத்தத் தெரிந்த திருக்கரத்தை உடைய திருமாலின் மருகனே! வெள்ளெருக்கு மாலை, குவளையின்) கழுநீரின் நறுமணமுள்ள மலர்மாலை, கொன்றைமாலை, கங்கை, இளம்பின்ற, எலும்புமாலை இவையெலாம் அணிந்துள்ள சடைப்பெருமான் அருளிய புதல்வனே! பிஞ்சுவிட்ட மாவடுக்கள் வெளியே தோன்றும்படி யமைந்த மாமரமாக நிலைபெற்று நின்ற அசுரனாம் சூரனை அடக்கவும், எழுகடல், எழுமலை இவை வற்றவும், பொடியாகவும், கூரிய வேலாயுதத்தைச் செலுத்தின திருக்கரங்களை யுடையவனே! கஸ்தூரியணிந்த திருப்புயங். களையுடைய செவ்வேளே!