திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 832 ஓங்கும் ஐம்புல (எட்டிகுடி) Thiruppugazh 832 Ongumaimbula (ettikudi) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தாந்த தந்தன தான தனத்தம் ...... தனதான தாந்த தந்தன தான தனத்தம் ...... தனதான ......... பாடல் ......... ஓங்கு மைம்புல னோட நினைத்தின் ...... பயர்வேனை ஓம்பெ றும்ப்ரண வாதி யுரைத்தெந் ...... தனையாள்வாய் வாங்கி வெங்கணை சூரர் குலக்கொம் ...... புகடாவி வாங்கி நின்றன ஏவி லுகைக்குங் ...... குமரேசா மூங்கி லம்புய வாச மணக்குஞ் ...... சரிமானு மூண்ட பைங்குற மாது மணக்குந் ...... திருமார்பா காங்கை யங்கறு பாசில் மனத்தன் ...... பர்கள்வாழ்வே காஞ்சி ரங்குடி ஆறு முகத்தெம் ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... ஓங்கும் ஐம்புலன் ஓட ... மிகுத்து வளரும் ஐந்து புலன்களும் (சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் ஆகியவை) என்னை இழுத்தோட நினைத்து இன்பயர்வேனை ... யானும் அவ்வழியே ஓட நினைத்து, இன்பம் கொண்டு தளர்ச்சி அடைவேனை, ஓம்பெ றும்ப்ரண வாதி யுரைத்து ... ஓம் முதலிய ப்ரணவ மந்திரங்கள் அத்தனையும் எனக்கு உபதேசித்து, எந்தனையாள்வாய் ... என்னை ஆண்டருள்வாயாக. வாங்கி வெங்கணை சூரர் குலக்கொம்புகள் தாவி ... வில்லை வளைத்து கொடிய அம்புகளை ஏவி சூரர் குல இளைஞர்கள் பாய்ந்துவர, வாங்கி நின்றன ஏவில் உகைக்கும் குமரேசா ... வளைத்து நின்ற சூரர் சேனையை அம்பைச் செலுத்தியே வென்ற குமரேசனே, மூங்கில் அம் புய வாசமணக் குஞ்சரிமானும் ... மூங்கிலைப் போன்று அழகிய புயங்களை உடைய, நறுமணமிக்க (யானைமகள்) தேவயானையும், மூண்ட பைங்குற மாது மணக்குந் திருமார்பா ... உன்மேல் பக்தியும் காதலும் மூண்ட அழகிய குறப்பெண் வள்ளியும் மணந்த திருமார்பனே, காங்கை யங்கறு பாசில் மனத்து ... மனக்கொதிப்பே இல்லாதவர்களும், பாசம், பந்தம் ஆகியவை நீங்கிய மனத்தவர்களுமான அன்பர்கள்வாழ்வே ... அன்பர்களின் செல்வமே, காஞ்சி ரங்குடி ஆறு முகத்தெம் பெருமாளே. ... காஞ்சிரங்குடி (எட்டிக்குடி*) என்ற திருத்தலத்தில் ஆறுமுகத்தோடு அமர்ந்த எங்கள் பெருமாளே. |
* எட்டிகுடி நாகப்பட்டினத்துக்கு அருகே கீழ்வேளூர் ரயில் நிலையத்திற்குத் தெற்கே 7 மைல் தொலைவில் உள்ளது. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 2.1013 pg 2.1014 WIKI_urai Song number: 836 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
'குருஜி' ராகவன் அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள் 'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை & சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) Sri Maha Periyava Thirupugazh Sabha & Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) | பாடகர் பக்கத்திற்கு to singer's page |
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) இப்பாடலின் பொருள் Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) meanings in Tamil |
திரு சபா. மெய்யப்பன் Thiru S. Meyyappan பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 832 - Ongum aimpula (ettikkudy) Ongum aimpula nOda ninaiththu inbayarvEnai Ompe RumpraNa vAdhi uraiththu ...... endhanaiyALvAy vAngi venkaNai sUrar kulam kombu kadAvi vAngi nindrana Evi lugaikkung ...... kumarEsA mUngi lambuya vAsa maNakkum kunjarimAnum mUNda paingkuRa mAdhu maNakkum ...... thirumArbA kAngai yang kaRu pAsil manath anbargaLvAzhvE kAnchi rangudi ARu mugathem ...... perumALE. ......... Meaning ......... Ongum aimpula nOda: Unabated and uncontrolled my five senses (sight, hearing, smell, taste and touch) drag me away; and ninaiththu in bayarvEnai: I too willingly go along with them, experience the pleasure and tire out. OmpeRum praNavAdhi uraiththu: You have to teach me all the sacred ManthrAs like OM and endhanaiyALvAy: take control of me vAngi venkaNai sUrar kulam kombu kadAvi: The young asura (demonic) warriors shower terrific arrows by bending their bows, but vAngi nindrana Evi lugaikkung kumarEsA: You smash the encircling army by sending arrows Yourself, Oh Kumaresa! mUngi lambuya vAsa maNakkum kunjarimAnum: The fragrance exuding DEvayAnai, daughter of the elephant, (AirAvatham), with bamboo-like soft shoulders mUNda paingkuRa mAdhu maNakkum thirumArbA: and VaLLi, the beautiful damsel of KuRavAs, who adores You, both hugged You. kAngai yang kaRu pAsil manath anbargaLvAzhvE: For those devotees who entertain no grouse or any attachment, You are their Asset! kAnchi rangudi ARu mugath emperumALE.: You have Your abode as Kanchirankudi (Ettikudi*) where You appear with six faces, Oh Great One! |
* Ettikudi is is near NAgappattinam, 7 miles south of KeezhvELUr railway station. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |