திருப்புகழ் 831 உரமுற் றிரு  (எட்டிகுடி)
Thiruppugazh 831 uramutRRiru  (ettikudi)
Thiruppugazh - 831 uramutRRiru - ettikudiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனனத் தனனத் தனனத் தனனத்
     தனனத் தனனத் ...... தனதான

......... பாடல் .........

உரமுற் றிருசெப் பெனவட் டமுமொத்
     திளகிப் புளகித் ...... திடமாயே

உடைசுற் றுமிடைச் சுமையொக் கஅடுத்
     தமிதக் கெறுவத் ...... துடன்வீறு

தரமொத் துபயக் களபத் தளமிக்
     கவனத் தருணத் ...... தனமீதே

சருவிச் சருவித் தழுவித் தழுவித்
     தவமற் கவிடுத் ...... துழல்வேனோ

அரிபுத் திரசித் தசஅக் கடவுட்
     கருமைத் திருமைத் ...... துனவேளே

அடல்குக் குடநற் கொடிகட் டியனர்த்
     தசுரப் படையைப் ...... பொருவோனே

பரிவுற் றவருக் கருள்வைத் தருள்வித்
     தகமுத் தமிழைப் ...... பகர்வோனே

பழனத் தொளிர்முத் தணியெட் டிகுடிப்
     பதியிற் குமரப் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

உரம் உற்று இரு செப்பு என வட்டமும் ஒத்து இளகிப் புளகித்
திடமாயே
... மார்பில் பொருந்தி இரண்டு சிமிழ்கள் போல வட்ட வடிவு
கொண்டு, குழைந்து புளகாங்கிதம் கொண்டு, வலிமை கொண்டு,

உடை சுற்றும் இடைச் சுமை ஒக்க அடுத்து அமிதக்
கெறுவத்துடன் வீறு தரம் ஒத்து உபயக் களபத் தள(ம்) மிக்க
வனத் தருணத் தனம் மீதே
... ஆடை சுற்றி அணியப்படும்
இடைக்குச் சுமையாக நன்கு பொருந்தி, அளவு கடந்த கர்வத்துடன்
மேம்பட்டு விளங்கும் தன்மை கொண்ட, இரண்டு கலவைச் சாந்தும்
செஞ்சாந்தும் நிரம்பிய அழகான, இளைய மார்பகங்கள் மீது,

சருவிச் சருவித் தழுவித் தழுவித் தவம் அற்க விடுத்து
உழல்வேனோ
... மிகப் பழகி தழுவித் தழுவி, தவ நிலையை வேரோடு
விட்டுத் தள்ளி நான் திரியலாமோ?

அரி புத்திர சித்தசன் அக் கடவுட்கு அருமைத் திரு மைத்துன
வேளே
... திருமாலுக்கு மகனான மன்மதன் என்னும் அந்தக்
கடவுளுக்கு அருமையான, அழகிய மைத்துனனே*, செவ்வேளே,

அடல் குக்குட நல் கொடி கட்டி அனர்த்த அசுரப் படையைப்
பொருவோனே
... வலிமை வாய்ந்த சேவல் என்னும் நல்ல கொடியைக்
கட்டி, துன்பம் விளைவித்த அசுர சேனையுடன் சண்டை செய்தவனே,

பரிவுற்றவருக்கு அருள் வைத்து அருள் வித்தக முத்தமிழைப்
பகர்வோனே
... அன்பு வைத்த அடியார்களுக்கு கருணை வைத்து
திருவருளைப் பாலிக்கும் ஞான மூர்த்தியே, முத்தமிழில் தேவாரப்
பாக்களை (திருஞானசம்பந்தராக அவதரித்து) அருளியவனே,

பழனத்து ஒளிர் முத்து அணி எட்டிகுடிப் பதியில் குமரப்
பெருமாளே.
... வயல்களில் பிரகாசிக்கின்ற முத்துக்களைக் கொண்ட
எட்டிகுடி** என்னும் பதியில் குமரப் பெருமாளே.


* மன்மதன் திருமாலின் மகன். முருகன் திருமால் மகளாகிய வள்ளியை
மணந்தவன். எனவே முருகன் மன்மதனின் மைத்துனன்.


** எட்டிகுடி நாகப்பட்டினத்துக்கு அருகே கீழ்வேளூர் ரயில் நிலையத்திற்குத்
தெற்கே 7 மைல் தொலைவில் உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.1011  pg 2.1012 
 WIKI_urai Song number: 835 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 831 - uramutRiru (Ettikudi)

uramut Rirusep penavat tamumoth
     thiLakip puLakith ...... thidamAyE

udaisut Rumidaic chumaiyok kaaduth
     thamithak keRuvath ...... thudanveeRu

tharamoth thupayak kaLapath thaLamik
     kavanath tharuNath ...... thanameethE

charuvic charuvith thazhuvith thazhuvith
     thavamaR kaviduth ...... thuzhalvEnO

ariputh thirasith thasaak kadavut
     karumaith thirumaith ...... thunavELE

adalkuk kudanaR kodikat tiyanarth
     thasurap padaiyaip ...... poruvOnE

parivut Ravaruk karuLvaith tharuLvith
     thakamuth thamizhaip ...... pakarvOnE

pazhanath thoLirmuth thaNiyet tikudip
     pathiyiR kumarap ...... perumALE.

......... Meaning .........

uram utRu iru seppu ena vattamum oththu iLakip puLakith thidamAyE: Their youthful breasts sit prettily on their chest like two round caskets; they are soft, enthralled and strong;

udai sutRum idaic chumai okka aduththu amithak keRuvaththudan veeRu tharam oththu upayak kaLapath thaLa(m) mikka vanath tharuNath thanam meethE: they weigh down fittingly on the waist wrapped around with an attire; they are exalted with limitless pride, smeared with sandalwood and vermillion paste; doting on them,

charuvic charuvith thazhuvith thazhuvith thavam aRka viduththu uzhalvEnO: I have been moving too close, hugging them repeatedly, and uprooting the path of sacramental meditation altogether; how can I roam about like this?

ari puththira siththasan ak kadavutku arumaith thiru maiththuna vELE: He is Manmathan (God of Love), son of Lord VishNu; and You are the unique and handsome cousin* of that Manmathan, Oh Reddish Lord!

adal kukkuda nal kodi katti anarththa asurap padaiyaip poruvOnE: You raised the great staff of Rooster and battled with the harassing army of the demons, Oh Lord!

parivutRavarukku aruL vaiththu aruL viththaka muththamizhaip pakarvOnE: You graciously protect those devotees who lovingly worship You, Oh Master of Knowledge! You came (as ThirugnAna Sambandhar) to compose hymns (ThEvAram) in the three branches of Tamil, Oh Lord!

pazhanaththu oLir muththu aNi ettikudip pathiyil kumarap perumALE.: This place Ettikudi** is surrounded by paddy fields where pearls dazzle; and it is Your abode, Oh KumarA, the Great One!


* Manmathan is the son of Lord VishNu. Murugan married VaLLi, the daughter of VishNu; so Murugan is the brother-in-law of Manmathan.


** Ettikudi is near NAgappattiNam, 7 miles south of KeezhvELUr railway station.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 831 uramutR Riru - ettikudi

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]