பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1012

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

453 திருப்புகழ் உரை ليلقهولاة எட்டிகுடி 835. மார்பிலே பொருந்தி, இரண்டு சிமிழ்களாமென வட்ட வடிவுகொண்டு, குழைவு கொண்டு, புளகாங்கிதம் கொண்டு வலிமை கொண் டு, ஆடை சுற்றி அணியப்படும் இடைக்குச் சுமையாக (பாரமாக) ஒக்க அடுத்து - நன்கு பொருந்தி, (அமிதக் கெறுவத்துடன்)-அளவுகடந்த கர்வத்துடன் மேம்பட்டு விளங்கும் தன்மை கொண்டனவான (உபய) இரண்டு (களபம்) கலவைச் சாந்தும் (தளம்) செஞ்சாந்தும் நிரம்பின (வனம்) அழகுவாய்ந்த தருணத் தனமீதே இள முலைகள் மீது (சருவிச் சருவி) பழகிப் பழகி, தழுவித் தழுவி தவத்தை (அற்க விடுத்து) நிலையாக விடுத்து - வேரோடு விடுத்துத் திரிவேனோ f திருமாலுக்கு புத்திரனான (சித்தசன்) மன்மதன் என்னும் அந்தக் கடவுளுக்கு அருமையான திரு மைத்துனனே!வேளே! வலிமை வாய்ந்த நல்ல சேவற்கொடியைக் கட்டி, (அனர்த்த அசுரப் படையை) துன்பம் விளைவித்து வந்த அசுர சேனையுடன் சண்டை செய்தவனே! அன்புவைத்த அடியார்கள்மேல் கருணைவைத்துத் திருவருளைப் பாலிக்கும் ஞான மூர்த்தியே! முத்தமிழைச் சொன்னவனே (சம்பந்த மூர்த்தியாய்த் தேவாரப் பாக்களை அருளியவனே): வயல்களிற் பிரகாசிக்கின்ற முத்துக்களைக் கொண்ட எட்டிகுடி என்னும் பதியில் வீற்றிருக்கும் குமரப் பெருமாளே! (தவமற்க விடுத் துழல்வேனோ)