திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 830 விழுதாதெனவே (நாகப்பட்டினம்) Thiruppugazh 830 vizhudhAdhenavE (nAgappattinam) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனனா தனனா தனனா தனனா தனனா தனனா ...... தனதான ......... பாடல் ......... விழுதா தெனவே கருதா துடலை வினைசேர் வதுவே ...... புரிதாக விருதா வினிலே யுலகா யதமே லிடவே மடவார் ...... மயலாலே அழுதா கெடவே அவமா கிடநா ளடைவே கழியா ...... துனையோதி அலர்தா ளடியே னுறவாய் மருவோ ரழியா வரமே ...... தருவாயே தொழுதார் வினைவே ரடியோ டறவே துகள்தீர் பரமே ...... தருதேவா சுரர்பூபதியே கருணா லயனே சுகிர்தா வடியார் ...... பெருவாழ்வே எழுதா மறைமா முடிவே வடிவே லிறைவா எனையா ...... ளுடையோனே இறைவா எதுதா வதுதா தனையே இணைநா கையில்வாழ் ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... விழுதா தெனவே கருதா துடலை ... (இறைவனருளால்) விழுகின்ற தாது (சுக்கிலம்)தான் இந்த உடல் என்று புரிந்து கொள்ளாமல், வினைசேர் வதுவே புரிதாக ... வினைகளை மேலும் மேலும் சேர்ப்பதையே விரும்புவதாக, விருதா வினிலே ... வாழ்நாளை வீணாக்கி, உலகா யதமேலிடவே ... (தேகமே ஆத்மா, போகமே மோட்சம் என்ற) உலக வழக்கில் புத்தி மேலிட, மடவார் மயலாலே ... பெண்களின் மேல் ஆசை மயக்கம் மிகுந்து, அழுது ஆகெடவே அவமாகிட ... அழுதும், கெட்டுப்போயும், கேவலமாகி நாளடைவே கழியாது ... வாழ்க்கை முழுவதும் கழிந்து போகாமல், உனையோதி ... உன்னைப் புகழ்ந்து துதித்து, அலர்தா ளடியே னுறவாய் ... மலர்ந்த தாமரை போன்ற உன் திருவடிகளே எனக்கு உறவாக மருவோரழியா வரமே தருவாயே ... பொருந்திய ஒப்பற்ற அழியாத வரம் நீ தந்தருள்வாயாக. தொழுதார் வினை ... தொழுகின்ற அடியார்கள்தம் வினையின் வே ர்யோ டறவே ... வேர் அடியோடு அற்றுப்போகும்படியாக துகள்தீர் பரமே தருதேவா ... குற்றமற்ற பரமபதத்தைத் தரும் தேவனே, சுரர்பூபதியே ... தேவர்களுக்கு அரசனே, கருணா லயனே ... கருணைக்கு இருப்பிடமானவனே, சுகிர்தா அடியார் பெருவாழ்வே ... புண்ணியனே, அடியார்களின் பெருவாழ்வே, எழுதா மறைமா முடிவே ... எழுதப்படாத மறையாம் வேதத்தின் முடிவானவனே, வடிவேலிறைவா ... கூரிய வேலை ஏந்திய இறைவனே, எனையாளுடையோனே ... என்னை ஆட்கொண்டுள்ளவனே, இறைவா எதுதா அதுதா ... இறைவனே, நீ எது தரவேண்டுமோ அதைத் தந்தருள். தனையே இணைநா கையில் ... தனக்குத் தானே இணையாகும் நாகப்பட்டினத்தில் வாழ் பெருமாளே. ... வீற்றிருக்கின்ற பெருமாளே. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 2.1009 pg 2.1010 WIKI_urai Song number: 834 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
'குருஜி' ராகவன் அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள் 'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை & சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) Sri Maha Periyava Thirupugazh Sabha & Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) | பாடகர் பக்கத்திற்கு to singer's page |
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) இப்பாடலின் பொருள் Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) meanings in Tamil |
திரு சபா. மெய்யப்பன் Thiru S. Meyyappan பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 830 - vizhudhAdhenavE (nAgappattinam) vizhudhA dhenavE karudhAdh udalai vinaisEr vadhuvE ...... puridhAga virudhA vinilE ulagA yadha mEl idavE madavAr ...... mayalAlE azhudhA kedavE avamAgida nAL adaivE kAzhiyAdh ...... unaiyOdhi alarthAL adiyEn uRavAy maruvavOr azhiyA varamE ...... tharuvAyE thozhudhAr vinai vEradiyOd aRavE thugaLtheer paramE ...... tharudhEvA surar bUpathiyE karuNA layanE sukirthA vadiyAr ...... peru vAzhvE ezhudhA maRai mA mudivE vadivEl iRaivA enaiyAL ...... udaiyOnE iRaivA edhuthA adhuthA thanaiyE iNainA gaiyil vAzh ...... perumALE. ......... Meaning ......... vizhudhA dhenavE karudhAdh udalai: Without realizing that this body is nothing but a sperm which fell into a womb (by Divine grace), vinaisEr vadhuvE puridhAga: I have been multiplying my karmas willingly, virudhA vinilE: wasting my life; ulagA yadha mElidvE: my mind was filled up with worldly matters (thinking that this body is the soul and carnal pleasure is the heaven) and madavAr mayalAlE: passion for women azhudhA kedavE avamAgida: made me cry, degenerate and degrade myself. nALadaivE kAzhiyAdh: I do not want to waste my life in this way. unaiyOdhi alarthAL adiyEn uRavAy: I must praise Your fresh flowery feet which are my only relationship, maruvavOr azhiyA varamE tharuvAyE: and You must grant me that unique and everlasting boon. thozhudhAr vinai vEradiyOd aRavE: To uproot the karmas of Your devotees, thugaLtheer paramE tharudhEvA: You grant them unblemished Heaven, Oh Lord! surar bUpathiyE karuNA layanE: You are the King of all DEvAs and the Seat of Compassion! sukirthA vadiyAr peru vAzhvE: You are the Blessed One and Bestower of great life to Your devotees! ezhudhA maRai mA mudivE: You are at the Zenith of unwritten VEdAs! vadivEl iRaivA enaiyAL udaiyOnE: Oh God with the Spear, You have already conquered me! iRaivA edhuthA adhuthA: My God, grant me whatever You deem fit to grant me! thanaiyE iNainA gaiyil vAzh perumALE.: You reside at unique NAgappattinam, Oh Great One! |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |