(இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவதற்கு முன்பு எனது முக்கியக் குறிப்பைப் படியுங்கள் - நன்றி).
(Please read my important note before using this website - Thank You).
திருப்புகழ் 833 கடல் ஒத்த விடம்  (எட்டிகுடி)
Thiruppugazh 833 kadaloththavidam  (ettikudi)
Thiruppugazh - 833 kadaloththavidam - ettikudiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

 
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதத்த தனதத்த தனதத்த தனதத்த
     தனதத்த தனதத்த ...... தனதானா

......... பாடல் .........

கடலொத்த விடமொத்த கணையொத்த பிணையொத்த
     கயலொத்த மலரொத்த ...... விழிமானார்

கனசெப்பு நளினத்து முகைவெற்பை நிகர்செப்பு
     கதிர்முத்து முலைதைக்க ...... அகலாதே

மிடலுற்ற கலவிக்கு ளுளநச்சி வளமற்று
     மிடிபட்டு மடிபட்டு ...... மனமாழ்கி

மெலிவுற்ற தமியற்கு னிருபத்ம சரணத்தை
     மிகநட்பொ டருள்தற்கு ...... வருவாயே

தடையற்ற கணைவிட்டு மணிவஜ்ர முடிபெற்ற
     தலைபத்து டையதுட்ட ...... னுயிர்போகச்

சலசத்து மயிலுற்ற சிறைவிட்டு வருவெற்றி
     தருசக்ர தரனுக்கு ...... மருகோனே

திடமுற்ற கனகப்பொ துவில்நட்பு டனடித்த
     சிவனுக்கு விழியொத்த ...... புதல்வோனே

செழுநத்து மிழுமுத்து வயலுக்குள் நிறைபெற்ற
     திகழெட்டி குடியுற்ற ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

கடல் ஒத்த விடம் ஒத்த கணை ஒத்த பிணை ஒத்த கயல்
ஒத்த மலர் ஒத்த விழி மானார்
... கடல், விஷம், அம்பு, மான், கயல்
மீன், தாமரை மலர் ஆகியவற்றை ஒத்ததாகிய கண்களை உடைய
விலைமாதர்களின்

கன செப்பு நளினத்து முகை வெற்பை நிகர் செப்பு கதிர்
முத்து முலை தைக்க அகலாதே
... பொன் சிமிழ், தாமரையின்
மொட்டு, மலை ஆகியவைகளுக்குச் சமம் என்று சொல்லப்படுவதும், ஒளி
கொண்ட முத்து மாலை அணிந்ததுமான மார்பகம் மனத்தில் அழுந்திப்
பதிய, அந்த எண்ணம் மனதை விட்டு அகலாமல்

மிடல் உற்ற கலவிக்குள் உள(ம்) நச்சி வளம் அற்று மிடி
பட்டு மடி பட்டு மன(ம்) மாழ்கி
... வலிமை வாய்ந்த புணர்ச்சி
இன்பத்தை உள்ளம் விரும்பி, செல்வம் இழந்து வறுமை அடைந்து
சோம்பல் மிகுந்து, மனம் மயங்கி அழிந்து

மெலிவு உற்ற தமியற்கு உ(ன்)னிரு பத்ம சரணத்தை மிக
நட்பொடு அருள்தற்கு வருவாயே
... மெலிவு அடைந்த
தனியனாகிய எனக்கு உன்னுடைய இரண்டு திருவடிக் கமலங்களை
மிக அன்புடன் அருள்வதற்கு வருவாயாக.

தடை அற்ற கணை விட்டு மணி வஜ்ர முடி பெற்ற தலை
பத்துடைய துட்டன் உயிர் போக
... தடையில்லாத அம்பைச்
செலுத்தி, மணி, வைரம் இவை பதிக்கப்பட்ட கிரீடத்தைக் கொண்ட
பத்து தலைகளை உடைய துஷ்டனாகிய ராவணனுடைய உயிரைப்
போகச் செய்து,

சலசத்து மயில் உற்ற சிறை விட்டு வரு வெற்றி தரு
சக்ரதரனுக்கு மருகோனே
... தாமரையில் வீற்றிருக்கும் மயில்
போன்ற சீதையை அவள் இருந்த சிறையினின்றும் விடுவித்து
வெற்றியைக் கொண்டவனும் (ஆகிய ராமனான) சக்ராயுதம் ஏந்திய
திருமாலுக்கு மருகனே,

திடம் உற்ற கனகப் பொதுவில் நட்புடன் நடித்த சிவனுக்கு
விழி ஒத்த புதல்வோனே
... மெய்ம்மை வாய்ந்த தில்லைக் கனக
சபையில் (பதஞ்சலி, வியாக்ரபாதர் மீதுள்ள) நட்பின் காரணமாக நடனம்
செய்த சிவபெருமானுக்கு கண் போன்ற இனிய மகனே,

செழு நத்து உமிழு(ம்) முத்து வயலுக்குள் நிறை பெற்ற திகழ்
எட்டிகுடி உற்ற பெருமாளே.
... செழிப்புள்ள சங்கு ஈன்ற முத்துக்கள்
வயலில் நிறைந்து விளங்கும் எட்டிகுடியில்* வீற்றிருக்கும் பெருமாளே.


* எட்டிகுடி நாகப்பட்டினத்துக்கு அருகே கீழ்வேளூர் ரயில் நிலையத்திற்குத்
தெற்கே 7 மைல் தொலைவில் உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.1013  pg 2.1014  pg 2.1015  pg 2.1016 
 WIKI_urai Song number: 837 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

YouTube  'YouTube' Links for this song  
  இப்பாடலுக்கான யூ ட்யூப் பதிவுகள்  

to come வரவிருக்கின்றது

 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 


Song 833 - kadal oththa vidam (ettikudi)

kadaloththa vidamoththa kaNaiyoththa piNaiyoththa
     kayaloththa malaroththa ...... vizhimAnAr

kanaseppu naLinaththu mukaiveRpai nikarseppu
     kathirmuththu mulaithaikka ...... akalAthE

midalutRa kalavikku LuLanacchi vaLamatRu
     midipattu madipattu ...... manamAzhki

melivutRa thamiyaRku nirupathma saraNaththai
     mikanatpo daruLthaRku ...... varuvAyE

thadaiyatRa kaNaivittu maNivajra mudipetRa
     thalaipaththu daiyathutta ...... nuyirpOkac

chalasaththu mayilutRa siRaivittu varuvetRi
     tharusakra tharanukku ...... marukOnE

thidamutRa kanakappo thuvilntpu danadiththa
     sivanukku vizhiyoththa ...... puthalvOnE

sezhunaththu mizhumuththu vayalukkuL niRaipetRa
     thikazhetti kudiyutRa ...... perumALE.

......... Meaning .........

kadal oththa vidam oththa kaNai oththa piNai oththa kayal oththa malar oththa vizhi mAnAr: The eyes of these whores are like the sea, poison, arrow, deer, kayal fish and lotus;

kana seppu naLinaththu mukai veRpai nikar seppu kathir muththu mulai thaikka akalAthE: their bosom, wearing the bright necklace of pearl, is comparable to a tint golden container, the bud of lotus and the mountain; when the very thought of that bosom firmly entrenches itself in my mind, it lingers on;

midal utRa kalavikkuL uLa(m) nacchi vaLam atRu midi pattu madi pattu mana(m) mAzhki: my heart hankers after the bliss of robust carnal pleasure; after losing my wealth, and being poverty-stricken, I become increasingly lethargic with my mind being blown away in delusion;

melivu utRa thamiyaRku u(n)niru pathma saraNaththai mika nadpodu aruLthaRku varuvAyE: I have become so weak and lonely; kindly come to me to grant Your hallowed lotus feet!

thadai atRa kaNai vittu maNi vajra mudi petRa thalai paththudaiya thuttan uyir pOka: He wielded His unstoppable arrow and took the life of the evil demon, RAvaNan, who had ten heads adorned by crowns embedded with gems and diamonds;

chalasaththu mayil utRa siRai vittu varu vetRi tharu sakratharanukku marukOnE: He then successfully freed SeethA, who looked like a peacock on the lotus, from her prison; He is RAmA, holding the disc in His hand as Lord VishNu; You are His nephew!

thidam utRa kanakap pothuvil natpudan nadiththa sivanukku vizhi oththa puthalvOnE: He danced on the golden stage in Chidhambaram, the city of eternal truth, for the sake of His friendship (with Pathanjali and VyAkrapAthar); He is Lord SivA, and You are His son dear to Him like His eye, Oh Lord!

sezhu naththu umizhu(m) muththu vayalukkuL niRai petRa thikazh ettikudi utRa perumALE.: This place ettikudi* is full of fertile paddy fields where plenty of rich conch-shells yield precious pearl; and it is Your abode, Oh Great One!


* Ettikudi is near NAgappattinam, 7 miles south of KeezhvELUr railway station.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
 

Thiru Arunagirinathar's Thiruppugazh - 833 kadal oththa vidam - ettikudi


   Kaumaram.com சமீபத்தில் DDOS தாக்குதலால் பாதிக்கப்பட்டது.
எனவே, படங்கள் மற்றும் ஆடியோ தற்காலிகமாக கிடைக்காது.
நான் இதை படிப்படியாக சரிசெய்ய முயற்சிக்கிறேன்.
உங்கள் பொறுமைக்கும் புரிந்துணர்வுக்கும் நன்றி. ... வலைத்தள நிர்வாகி.  



  Kaumaram.com was recently affected by DDOS attack.
As such, images and audio will be temporarily unavailable.
I am trying to correct this progressively.
Thank you for your patience and understanding. ... webmaster.  


... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 


Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

PLEASE do not ask me for songs about other deities or for BOOKS - This is NOT a bookshop - sorry.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

© Copyright Kaumaram dot com - 2001-2040

COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED.

Please contact me (the webmaster), if you wish to place a link in your website.

email: kaumaram@gmail.com

Disclaimer:

Although necessary efforts have been taken by me (the webmaster),
to keep the items in www.kaumaram.com safe from viruses etc.,
I am NOT responsible for any damage caused by use of
and/or downloading of any item from this website or from linked external sites.
Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items
from the internet for maximum safety and security.

 மேலே   top