பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1016

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

457 திருப்புகழ் உரை ولقواLة (கனசெப்பு) பொற்சிமிழ், தாமரையின் மொட்டு, மலை இவைக்கு நிகர் என்று சொல்லப்படும், கொண்ட முத்துமாலை அணிந்துள்ள கொங்கை (மனத்திலே) தைக்க (அழுந்திப்பதிய) - அந்த எண்ணம் மனத்தைவிட்டு நீங்காமல். வலிமை வாய்ந்த கலவியின்பத்தில் (புணர்ச்சியில்) உள்ளம் (மனது) நச்சி (விருப்பம் கொண்டு), அதனால் வளம் செல்வம்-உடல்நலம் ஆகிய வளப்பங்கள் அழிந்து, வறுமையை அடைந்து, சோம்பல் அடைந்து, மனம் மயங்கி அழிந்து மெலிவு ஆடைந்துள்ள தனியனாகிய எனக்கு உனது தாமரையன்ன திருவடியை மிக்க அன்புடனே அருளுவதற்கு வந்துதவுக. தடையேயிலாத குறிதவறாத) அம்பைச் செலுத்தி மணி, வஜ்ரம் இவை பதிக்கப்பெற்ற கிரீடத்தைக் கொண்ட் தலை பத்து இருந்த துஷ்டன் - ராவணனுடைய உயிரை மாள்வித்துத் (போகச்செய்து) தாமரையில் வீற்றிருக்கும் மயில்-லக்ஷமி.சிதை-இருந்த சிறையை நீக்கிவந்த வெற்றியைக் கொண்ட (சக்ரதரனுக்கு) சக்ராயுதம் ஏந்தின திருமாலுக்கு மருகனே! மெய்ம்மை வாய்ந்த (அல்லது உறுதி பயக்கும் (கனகப்பொதுவில்) பொன்னம்பலத்தில் (பதஞ்சலி வியாக்ரபாதர் மீதுள்ள) அன்புடனே நடஞ்செய்த சிவபிரானுக்குக் கண்போல இனிய புதல்வனே! செழிப்புள்ள (நத்து) - சங்கு ஈன்ற முத்துக்கள் வயலிலே நிறைந்து விளங்கும் எட்டிகுடியில் வீற்றிருக்கும் பெருமாளே! (அருள்தற்கு வருவாயே) 838. கரிய குழலுக்கு ஒப்பானவை கருங்குவளையோ! (மாலோ) கருமையோ! அந்தக் கண்கள் இரண்டுக்கும் ஒப்பானவை சேல்மீனோ! வேலோ! பின்னர், அப் பெண்களின் சொல்லுக்கு இணை தெளிவுள்ள பாலோ, வெல்லமோ வடித்த தேனோ!