திருப்புகழ் 828 ஓலமிட்டிரைத்து  (நாகப்பட்டினம்)
Thiruppugazh 828 Olamittiraiththu  (nAgappattinam)
Thiruppugazh - 828 Olamittiraiththu - nAgappattinamSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தான தத்த தத்த தந்த தான தத்த தத்த தந்த
     தான தத்த தத்த தந்த ...... தனதான

......... பாடல் .........

ஓல மிட்டி ரைத்தெ ழுந்த வேலை வட்ட மிட்ட இந்த
     ஊர்மு கிற்ற ருக்க ளொன்று ...... மவராரென்

றூம ரைப்ர சித்த ரென்று மூட ரைச்ச மர்த்த ரென்றும்
     ஊன ரைப்ர புக்க ளென்று ...... மறியாமற்

கோல முத்த மிழ்ப்ர பந்த மால ருக்கு ரைத்த நந்த
     கோடி யிச்சை செப்பி வம்பி ...... லுழல்நாயேன்

கோப மற்று மற்று மந்த மோக மற்று னைப்ப ணிந்து
     கூடு தற்கு முத்தி யென்று ...... தருவாயே

வாலை துர்க்கை சக்தி யம்பி லோக கத்தர் பித்தர் பங்கில்
     மாது பெற்றெ டுத்து கந்த ...... சிறியோனே

வாரி பொட்டெ ழக்ர வுஞ்சம் வீழ நெட்ட யிற்று ரந்த
     வாகை மற்பு யப்ர சண்ட ...... மயில்வீரா

ஞால வட்ட முற்ற வுண்டு நாக மெத்தை யிற்று யின்ற
     நார ணற்க ருட்சு ரந்த ...... மருகோனே

நாலு திக்கும் வெற்றி கொண்ட சூர பத்ம னைக்க ளைந்த
     நாக பட்டி னத்த மர்ந்த ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

ஓலமிட்டு இரைத்தெழுந்த வேலை ... ஓலம் இடுவதுபோல
அபயக்குரலுடன் பேரொலி செய்யும் அலைகடல்

வட்டமிட்ட இந்த ஊர் ... சூழ்ந்திருக்கும் இந்த ஊரில்

முகில் தருக்கள் ஒன்றும் அவர் யாரென்று ... மேகத்தைப் போல்
கைம்மாறு கருதாமல் கொடுக்கும் பிரபுக்கள், கற்பக விருட்சம் போல்
கேட்டதெல்லாம் தரும் பிரபுக்கள் யார் உள்ளார்கள் என்று தேடிப்போய்,

ஊமரை ப்ரசித்தரென்று மூடரைச் சமர்த்த ரென்றும் ... பேசவும்
வாய் வராதவர்களை மகா கீர்த்தி வாய்ந்த பிரபுக்கள் என்றும்,
முட்டாள்களைச் சமர்த்தர்கள் என்றும்

ஊனரை ப்ரபுக்க ளென்றும் அறியாமல் ... ஊனம் உள்ளவரைப்
பிரபுக்கள் என்றும், என் அறிவின்மையால்

கோல முத்தமிழ் ப்ரபந்த மாலருக்கு உரைத்து ... அழகிய
முத்தமிழ் நூல்களை மண்ணாசை பிடித்த மூடர்களுக்குச் சொல்லி,

அநந்த கோடி இச்சை செப்பி வம்பில் உழல்நாயேன் ...
எண்ணிலாத கோடிக்கணக்கான என் விருப்பங்களைத் தெரிவித்து
வீணே திரிகின்ற அடிநாயேன்,

கோப மற்று மற்றும் அந்த மோகமற்று ... கோபம் என்பதை
ஒழித்து, மேலும், அந்த ஆசை என்பதனை நீத்து,

உனைப்பணிந்து கூடுதற்கு ... உன்னைப் பணிந்து உன்
திருவடியைக் கூடுதற்கு

முத்தி யென்று தருவாயே ... முக்திநிலை என்றைக்குத்
தந்தருள்வாய்?

வாலை துர்க்கை சக்தி யம்பி ... வாலையும் (என்றும் இளையவள்),
துர்க்கையும், சக்தியும், அம்பிகையும்,

லோக கத்தர் பித்தர் பங்கில் ... உலகத்துக்கே தலைவர் ஆகிய
பித்தராம் சிவபிரானது இடப்பாகத்தில்

மாது பெற்றெடுத்து உகந்த சிறியோனே ... அமர்ந்தவளுமான
தேவி பெற்றெடுத்து மகிழ்ந்த இளையோனே,

வாரி பொட்டெழ க்ரவுஞ்சம் வீழ ... கடல் வற்றிப் போக,
கிரெளஞ்சமலை தூளாகி விழ,

நெட்டயில் துரந்த வாகை ... நீண்ட வேலைச் செலுத்திய, வெற்றி
வாகை சூடிய,

மற்புய ப்ரசண்ட மயில்வீரா ... மற்போருக்குத் திண்ணிய புயத்தை
உடைய பராக்ரமனே, மயில் வீரனே,

ஞால வட்டம் முற்ற வுண்டு ... பூமி மண்டலம் முழுமையும் உண்டு
தன் வயிற்றிலே அடக்கியவரும்,

நாக மெத்தை யிற்று யின்ற ... ஆதிசேஷன் என்னும் பாம்புப்
படுக்கையிலே துயில் கொள்பவரும்

நாரணற்கு அருட்சு ரந்த மருகோனே ... ஆகிய நாராயணருக்கு
அருள் பாலித்த மருமகனே,

நாலு திக்கும் வெற்றி கொண்ட சூர பத்மனைக் களைந்த ...
நான்கு திசைகளிலும் ஜயித்த சூரபத்மனை அகற்றியவனே,

நாக பட்டினத்தமர்ந்த பெருமாளே. ... நாகப்பட்டினம் என்னும்
தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.1003  pg 2.1004  pg 2.1005  pg 2.1006 
 WIKI_urai Song number: 832 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 828 - Olamittiraiththu (nAgappattinam)

Ola mitti raiththe zhuntha vElai vatta mitta intha
     Urmu kitRa rukka LonRu ...... mavarAren

RUma raipra siththa renRu mUda raichcha marththa renRum
     Una raipra pukka LenRu ...... maRiyAmaR

kOla muththa mizhpra pantha mAla rukku raiththa nantha
     kOdi yicchai seppi vampi ...... luzhalnAyEn

kOpa matRu matRu mantha mOka matRu naippa Ninthu
     kUdu thaRku muththi yenRu ...... tharuvAyE

vAlai thurkkai sakthi yampi lOka kaththar piththar pangil
     mAthu petRe duththu kantha ...... siRiyOnE

vAri potte zhakra vunjam veezha netta yitRu rantha
     vAkai maRpu yapra saNda ...... mayilveerA

gnAla vatta mutRa vuNdu nAka meththai yitRu yinRa
     nAra NaRka rutsu rantha ...... marukOnE

nAlu thikkum vetRi koNda sUra pathma naikka Laintha
     nAka patti naththa marntha ...... perumALE.

......... Meaning .........

Ola mitti raiththe zhuntha vElai vatta mitta intha Ur: This town is surrounded by sea having rising waves whining all the time.

mukitRa rukka LonRum avarArenRu: I roam here in search of wealthy lords who can give alms like the cloud (without expecting anything in return) or like the KaRpaga tree (granting whatever I desire).

Uma raiprasiththa renRu: Calling dumb ones as famous lords,

mUda raichcha marththa renRum: calling utter fools intelligent,

Una raipra pukka LenRum aRiyAmaR: and calling people with defective limbs as handsome lords, I was carrying on stupidly;

kOla muththa mizhpra pantha mAla rukku raiththu: and I was saying such things to these aggrandized fools, wasting on them beautiful poems from the three branches of Tamil.

anantha kOdi yicchai seppi vampil uzhalnAyEn: I was feeling like a lowly dog as I narrated millions of my desires to these people and roaming about as a wastrel;

kOpa matRu matRu mantha mOka matRu: I want to give up anger; and further, I want to steer clear of my desires.

unaippa NinthukUdu thaRku muththi yenRu tharuvAyE: When are You going to grant me Liberation so that I could prostrate before You and attain Your lotus feet?

vAlai thurkkai sakthi yampi: She is ever youthful; She is Durga; She is Sakthi; She is the Mother of the Universe;

lOka kaththar piththar pangil: She forms the left half of the body of SivA, who is the crazy Lord of the worlds;

mAthu petRe duththu kantha siRiyOnE: and that PArvathi delivered You happily, Oh Young One!

vAri pottezha kravunjam veezha: The seas dried up while Mount Krouncha was shattered

netta yitRu rantha: when You threw Your long spear!

vAkai maRpu ya: You were victorious! Your shoulders are strong and ask out for wrestling!

pra saNda mayilveerA: Your valour is world famous! You mount Your brave Peacock!

gnAla vatta mutRa vuNdu: He devoured the entire world and other planets;

nAka meththai yitRu yinRa: He slumbers on the thick bed of AdhisEshan (Serpent);

nAra NaRka rutsu rantha marukOnE: and He is NArAyanan (Vishnu). You are His kind nephew who bestowed grace on Him!

nAlu thikkum vetRi koNda sUra pathma naikka Laintha: SUra Pathman, who had conquered all worlds in all the four directions, succumbed to You in the battlefield!

nAka patti naththa marntha perumALE.: You have Your abode at NAgappattinam, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 828 Olamittiraiththu - nAgappattinam

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]