திருப்புகழ் 827 புலவரை ரக்ஷி  (சிக்கல்)
Thiruppugazh 827 pulavarairakshi  (sikkal)
Thiruppugazh - 827 pulavarairakshi - sikkalSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதன தத்தத் தந்தான தானன
     தனதன தத்தத் தந்தான தானன
          தனதன தத்தத் தந்தான தானன ...... தனதானா

......... பாடல் .........

புலவரை ரக்ஷிக் குந்தாரு வேமது
     ரிதகுண வெற்பொக் கும்பூவை மார்முலை
          பொருபுய திக்கெட் டும்போயு லாவிய ...... புகழாளா

பொருவரு நட்புப் பண்பான வாய்மையி
     லுலகிலு னக்கொப் புண்டோவெ னாநல
          பொருள்கள் நிரைத்துச் செம்பாக மாகிய ...... கவிபாடி

விலையில்த மிழ்ச்சொற் குன்போலு தாரிகள்
     எவரென மெத்தக் கொண்டாடி வாழ்வெனும்
          வெறிகொளு லுத்தர்க் கென்பாடு கூறிடு ...... மிடிதீர

மிகவரு மைப்பட் டுன்பாத தாமரை
     சரணமெ னப்பற் றும்பேதை யேன்மிசை
          விழியருள் வைத்துக் குன்றாத வாழ்வையு ...... மருள்வாயே

இலகிய வெட்சிச் செந்தாம மார்புய
     சிலைநுதல் மைக்கட் சிந்தூர வாணுதல்
          இமயம கட்குச் சந்தான மாகிய ...... முருகோனே

இளையகொ டிச்சிக் கும்பாக சாதன
     னுதவுமொ ருத்திக் குஞ்சீல நாயக
          எழிலியெ ழிற்பற் றுங்காய மாயவன் ...... மருகோனே

அலர்தரு புட்பத் துண்டாகும் வாசனை
     திசைதொறு முப்பத் தெண்காதம் வீசிய
          அணிபொழி லுக்குச் சஞ்சார மாமளி ...... யிசையாலே

அழகிய சிக்கற் சிங்கார வேலவ
     சமரிடை மெத்தப் பொங்கார மாய்வரும்
          அசுரரை வெட்டிச் சங்கார மாடிய ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

புலவரை ரக்ஷிக்குந் தாருவே ... புலவர்களை ஆதரித்துக்
காப்பாற்றும் கற்பக விருட்சமே,

மதுரிதகுண வெற்பொக் கும்பூவை மார்முலை பொருபுய ...
இனிய குணம் கொண்ட, மலை போன்ற மார்புடைய, பெண்களைத்
தழுவும் புயத்தினனே,

திக்கெட்டும்போயு லாவிய புகழாளா ... எட்டுத் திசைகளிலும்
சென்று பரவுகின்ற புகழை உடையவனே,

பொருவரு நட்புப் பண்பான வாய்மையில் ... உவமை கூற
முடியாத நட்புத்தன்மை உள்ள சத்திய நிலையில்

உலகிலு னக்கொப் புண்டோவெனா ... உலகில் உனக்கு
ஒப்பானவர்கள் உண்டோ என்றெல்லாம்

நல பொருள்கள் நிரைத்து ... நல்ல பொருளமைந்த சொற்களை
வரிசையாக வைத்து,

செம்பாக மாகிய கவிபாடி ... செவ்விய முறையில் புனையப்பட்ட
பாடல்களைப் பாடி,

விலையில்தமிழ்ச்சொற்கு உன்போல் உதாரிகள் எவரென ...
விலைமதிப்பற்ற தமிழ்ச் சொல்லை ஆதரிப்பதற்கு உன்னைப்
போல் சிறந்த
கொடையாளிகள் யார்தான் உள்ளார்கள் என்று

மெத்தக் கொண்டாடி வாழ்வெனும் ... நிரம்பப் புகழ்ந்து, தமது
வாழ்வே பெரிது என்ற

வெறிகொள் உலுத்தர்க்கு ... தீவிர உணர்ச்சி கொண்ட லோபிகளிடம்

என்பாடு கூறிடு மிடிதீர ... என் வருத்தங்களைப் போய் முறையிடும்
வறுமை நிலை தீர,

மிக அருமைப்பட்டு உன்பாத தாமரை ... மிக்க முயற்சி
எடுத்துக்கொண்டு, உனது தாமரைத் திருவடிகளை

சரணமெனப்பற் றும்பேதையேன்மிசை ... புகலிடம் என்று
பற்றியுள்ள பேதையாகிய என்மீது

விழியருள் வைத்துக் குன்றாத வாழ்வையுமருள்வாயே ... நீ
திருக்கண் அருள்வைத்து, குறைவில்லாத பேரின்ப வாழ்வைத்
தந்தருள்க.

இலகிய வெட்சிச் செந்தாம மார்புய ... விளங்கும் வெட்சிப்பூக்களால்
ஆன சிவந்த மாலை அணிந்த மார்பும் புயங்களும் கொண்டவனே,

சிலைநுதல் மைக்கட் சிந்தூர வாணுதல் ... வில்லைப் போன்ற
புருவத்தையும், மையிட்ட கண்களையும், குங்குமம் அணிந்த
ஒளிவீசும் நெற்றியையும் கொண்ட,

இமயமகட்குச் சந்தான மாகிய முருகோனே ... இமயமலையின்
மகளாகிய, பார்வதிக்கு மைந்தனாக வந்த முருகனே,

இளையகொடிச்சிக்கும் ... இளையவளும், மலை நாட்டுப்
பெண்ணாகிய வள்ளிக்கும்,

பாகசாதனன் உதவுமொருத்திக்குஞ் சீல நாயக ... பாகசாதனன்
எனப்படும் இந்திரன் பெற்ற ஒப்பற்ற தேவயானைக்கும் உரிய
பரிசுத்தமான நாயகனே,

எழிலியெழிற்பற்றுங் காய மாயவன் மருகோனே ... மேகத்தின்
அழகைக் கொண்ட கருந்திருமேனியை உடைய திருமாலின் மருமகனே,

அலர்தரு புட்பத்து உண்டாகும் வாசனை திசைதொறு ...
மலர்ந்த பூக்களிலிருந்து வரும் நறுமணம் எல்லாத் திசைகளிலும்

முப்பத் தெண்காதம் வீசிய ... முப்பத்தெட்டு காதம் வரை
(380 மைல்) வீசுகின்ற,

அணிபொழிலுக்குச் சஞ்சார மாமளி யிசையாலே ... அழகிய
நந்தவனங்களில் உலவும் வண்டுகளின் இசை ஒலிக்கும்

அழகிய சிக்கற் சிங்கார வேலவ ... அழகுபெற்று விளங்கும் சிக்கல்*
என்ற தலத்தில் வீற்றிருக்கும் சிங்கார வேலவனே,

சமரிடை மெத்தப் பொங்காரமாய்வரும் ... போரிடையே மிகவும்
சினத்தோடு வந்த

அசுரரை வெட்டிச் சங்கார மாடிய பெருமாளே. ... அசுரர்களை
வெட்டிச் சம்ஹாரம் செய்த பெருமாளே.


* சிக்கல் நாகப்பட்டினத்துக்கு மேற்கே 3 மைலில் உள்ளது.
சிக்கல் முருகனின் பெயர் சிங்கார வேலவன்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.1001  pg 2.1002  pg 2.1003  pg 2.1004 
 WIKI_urai Song number: 831 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 827 - pulavarai rakshi (sikkal)

pulavarai rakshikkun thAruvE madhu
     rithaguNa veRpokkum pUvai mArmulai
          porubuya dhikkettum pOy ulAviya ...... pugazhALA

poruvaru natpup paNbAna vAymaiyil
     ulagil unak oppuNdO venA nala
          poruLgaL niraiththuch sempAga mAgiya ...... kavipAdi

vilaiyil thamizhsoR kunpOl udhArigaL
     evarena meththak koNdAdi vAzhvenum
          veRikoL uluththark kenpAdu kURidu ...... miditheera

miga arumaip pattun pAdha thAmarai
     saraNa menap patrum pEdhai yEnmisai
          vizhi aruL vaiththu kundrAdha vAzhvaiyum ...... aruLvAyE

ilagiya vetchich sendhAma mArbuya
     silainudhal maikkat sindhUra vANudhal
          imaya magatkuch santhAna mAgiya ...... murugOnE

iLaiya kodicchikkum bAga sAdhanan
     udhavum orutthikkum seela nAyaka
          ezhili yezhiRpatrung kAya mAyavan ...... marugOnE

alar tharu pushpath thundAgum vAsanai
     disaithoRu muppath theN kAdham veesiya
          aNi pozhilukkuch sanjchAra mAmaLi ...... isaiyAlE

azhagiya sikkaR singAra vElava
     samaridai meththap pongAramAy varum
          asurarai vetti sankAra mAdiya ...... perumALE.

......... Meaning .........

pulavarai rakshikkun thAruvE: "Oh You are the (wish-yielding) KaRpaga Tree looking after the poets!

madhurithaguNa veRpokkum pUvai mArmulai porubuya: Your shoulders embrace the mountain-like bosoms of virtuous women!

dhikkettum pOy ulAviya pugazhALA: Your fame has spread in all the eight directions!

poruvaru natpup paNbAna vAymaiyil: For matchless and true friendship,

ulagil unak oppuNdO venA nala poruLgaL niraiththuch: could there be anyone in this world equal to you?" - with these choicest words, so well arranged,

sempAga mAgiya kavipAdi: I composed exquisite poems;

vilaiyil thamizhsoR kunpOl udhArigaL evarena meththak koNdAdi: I sang with profuse plaudits saying "For protecting the priceless words of Tamil, could there be a more generous person than you?"

vAzhvenum veRikoL uluththark kenpAdu kURidu miditheera: To end the penury which pushed me into crying my heart out to those stingy people who are obsessed only with their lives,

miga arumaip pattun pAdha thAmarai: I take immense pains to attain Your lotus feet

saraNa menap patrum pEdhai yEnmisai: and hold on to them as my sole refuge; on this poor me,

vizhi aruL vaiththu kundrAdha vAzhvaiyum aruLvAyE: kindly cast Your gracious eyes and bless me with an unalloyed blissful life!

ilagiya vetchich sendhAma mArbuya: You wear the elegant garland of vetchi flowers on Your chest and shoulders!

silainudhal maikkat sindhUra vANudhal: She has bow-like brows, darkened eyelashes and sparkling vermilion - affixed forehead;

imaya magatkuch santhAna mAgiya murugOnE: and She is the daughter of Mount HimavAn; You are Her Son, Oh MurugA!

iLaiya kodicchikkum bAga sAdhanan udhavum orutthikkum seela nAyaka: You are the immaculate consort of both VaLLi, the young mountain-girl, and DEvayAnai, the unique daughter of IndrA (BAga SAdhanan)!

ezhili yezhiRpatrung kAya mAyavan marugOnE: You are the nephew of the mystic one, Vishnu, whose body is of the complexion of beautiful dark cloud.

alar tharu pushpath thundAgum vAsanai: The fragrance from the fully blossomed flowers from this place,

disaithoRu muppath theN kAdham veesiya: extend up to 38 kAdhams (380 miles) in all the directions;

aNi pozhilukkuch sanjchAra mAmaLi isaiyAlE: beetles roam about with a musical drone in the lush groves;

azhagiya sikkaR singAra vElava: this is exquisite Sikkal* where You are seated with the name "SingAra VElavan".

samaridai meththap pongAramAy varum asurarai: The aggressive and angry demons who advanced in the battlefield

vetti sankAra mAdiya perumALE.: were all killed and destroyed by You, Oh Great One!


* Sikkal is 3 miles west of NAgappattinam.
Murugan is known as SingAra VElavan, literally meaning "Lord with the ornamental spear".

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 827 pulavarai rakshi - sikkal

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]