பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1004

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாகபட்டினம்) திருப்புகழ் உரை 445 விளங்குகின்ற வெட்சிப் பூவாலாய சிவந்த மாலை அணிந்த மார்பும் புயமும் கொண்டவனே! வில்லைப்போன்ற புருவத்தையும், மையூசிய கண்களையும், குங்குமப்பொட்டு அணிந்த வீசும் நெற்றியையும் கொண்ட இமயமலைப் புத்திரியாகிய பார்வதிக்கு மைந்தனாக வந்த குழந்தையே! இளையவளும் (கொடிச்சி) மலைநாட்டுப் பெண்ணு. மாகிய வள்ளிக்கும், (பாகசாதனன்) இந்திரன் பெற்ற ஒப்பற்றவளாகிய தேவசேனைக்கும் உரிய பரிசுத்த நாயகனே! (எழிலி) மேகத்தின் அழகைக் கொண்ட திருமேனியை உடைய திருமாலின் மருகனே! மலர்கின்ற புஷ்பத்தில் உண்டாகின்ற வாசனையானது (திசைகள் தோறும்) எட்டுத் திசைகளிலும் முப்பத்தெட்டு காதம் வரை (380 மைல்) வரை வீசுகின்ற அழகிய நந்தவனங்களில் சஞ்சரிக்கும் வண்டின் இசை ஒலியால். அழகு பெற்று விளங்கும் சிக்கல் என்னும் தலத்தில் வீற்றிருக்கும் சிங்கார வேலனே! போரிடையே மிகவும் பொங்கிக் கொதிப்புடனே வந்த அசுரர்களை வெட்டிச் சங்கரித்த பெருமாளே! (குன்றாத வாழ்வையும் அருள்வாயே) நாகபட்டினம் 832. ஒலமிடுவதுபோல (அபயக்குறியுடன்) ஒலிசெய்து (அல்லது-சப்தமிட்டுப் பேரொலி செய்து) திரை எழுகின்ற கடல் வட்டத்துக்குள் உள்ள (இந்தப் பூமியில் உள்ள) ஊர்களில், முகில்) ஒன்று மேகம்போலக் கைம்மாறு கருதாது கொடுக்கும் பிரபுக்கள்), (தருக்கள்) ஒன்று கற்பகவிருகூடிம் போலக் (கேட்டதைக் கொடுக்கும் பிரபுக்கள்) யார் உள்ளார்கள் என்று (தேடிப்போய்). (444 ஆம் பக்கத் தொடர்ச்சி) அல்லது-தன்னிடையே கிடந்த மாமரமாம் சூரனைக் கொல்ல எழுந்த முருகவேளின் வேல் வருவதைக்கண்டு ஓலமிட்டு அஞ்சி இறைஞ்சின கடல் எனலுமாம்; உக்கிரபாண்டியன் கடல் சுவறவேலை விட்டபோது ஓலமிட்டதையும் குறிக்கலாம். (திருவிளை-புராணம்).