திருப்புகழ் 823 கலகவிழி மாமகளிர்  (பெரியமடம்)
Thiruppugazh 823 kalagavizhimAmagaLir  (periyamadam)
Thiruppugazh - 823 kalagavizhimAmagaLir - periyamadamSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதனன தானதன தத்தனா தாத்த
     தனதனன தானதன தத்தனா தாத்த
          தனதனன தானதன தத்தனா தாத்த ...... தனதான

......... பாடல் .........

கலகவிழி மாமகளிர் கைக்குளே யாய்ப்பொய்
     களவுமத னூல்பலப டித்தவா வேட்கை
          கனதனமு மார்புமுற லிச்சையா லார்த்து ...... கழுநீரார்

கமழ்நறைச வாதுபுழு கைத்துழாய் வார்த்து
     நிலவரசு நாடறிய கட்டில்போட் டார்ச்செய்
          கருமமறி யாதுசிறு புத்தியால் வாழ்க்கை ...... கருதாதே

தலமடைசு சாளரமு கப்பிலே காத்து
     நிறைபவுசு வாழ்வரசு சத்யமே வாய்த்த
          தெனவுருகி யோடியொரு சற்றுளே வார்த்தை ...... தடுமாறித்

தழுவியநு ராகமும்வி ளைத்துமா யாக்கை
     தனையுமரு நாளையும வத்திலே போக்கு
          தலையறிவி லேனைநெறி நிற்கநீ தீக்ஷை ...... தரவேணும்

அலகில்தமி ழாலுயர்ச மர்த்தனே போற்றி
     அருணைநகர் கோபுரவி ருப்பனே போற்றி
          அடல்மயில்ந டாவியப்ரி யத்தனே போற்றி ...... அவதான

அறுமுகசு வாமியெனும் அத்தனே போற்றி
     அகிலதல மோடிவரு நிர்த்தனே போற்றி
          அருணகிரி நாதஎனும் அப்பனே போற்றி ...... அசுரேசர்

பெலமடிய வேல்விடுக ரத்தனே போற்றி
     கரதலக பாலிகுரு வித்தனே போற்றி
          பெரியகுற மாதணைபு யத்தனே போற்றி ......பெருவாழ்வாம்

பிரமனறி யாவிரத தக்ஷிணா மூர்த்தி
     பரசமய கோளரித வத்தினால் வாய்த்த
          பெரியமட மேவியசு கத்தனே யோக்யர் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

கலக விழி மா மகளிர் கைக்குளே ஆய்ப் பொய் ... கலகத்தை
விளைவிக்கக் கூடிய கண்களை உடைய அழகிய விலைமாதர்களின்
கைகளில் அகப்பட்டு,

களவு மதன் நூல் பல படித்து அவா வேட்கை கன தனமும்
மார்பும் உறல் இச்சையால் ஆர்த்து
... களவு, பொய், காம சாஸ்திரம்
பலவும் கற்று, ஆசையுடனும், விருப்பத்துடனும் கனத்த மார்பகங்களோடு
நெஞ்சாரத் தழுவி மகிழ்ந்து,

கழு நீர் ஆர் கமழ் நறை சவாது புழு கைத் துழாய் வார்த்து ...
செங்கழுநீர் மலர்களை நிரப்பி, மணக்கும் ஜவ்வாது, புனுகு இவைகளைக்
கலந்து ஊற்றி பரிமளிக்க வைத்து,

நில அரசு நாடு அறிய கட்டில் போட்டார்ச் செய் கருமம்
அறியாது
... பூமியில் உள்ள அரசர் முதல் நாட்டில் உள்ள யாவரும்
அறியும்படியாக, கட்டில் படுக்கை போட்டவர்களாகிய வேசியர்கள்
செய்கின்ற தொழில்களின் சூதை அறியாமல்,

சிறு புத்தியால் வாழ்க்கை கருதாதே ... எனக்குள்ள அற்ப
புத்தியால் எனது வாழ்க்கையின் அருமையை எண்ணாமல்,

தலம் அடைசு சாளர முகப்பிலே காத்து நிறை பவுசு வாழ்வு
அரசு சத்யமே வாய்த்தது என உருகி
... (அந்த வேசியரின்)
இடத்தை நெருங்கிச் சென்று, ஜன்னலின் வாயில்களின் முன் பக்கத்தில்
காத்து நின்று, (அவர்களால் அழைக்கப்பட்டவுடன்) நிறைந்த செல்வமும்
அரச வாழ்வும் சத்தியப்பேறும் கிடைத்தன போல மனம் உருகி,

ஓடி ஒரு சற்றுளே வார்த்தை தடுமாறித் தழுவி அநுராகமும்
விளைத்து
... அவர்கள் வீட்டினுள் ஓடிச்சென்று, உள்ளே இருக்கும்
கொஞ்ச நேரத்துக்குள் பேசும் பேச்சும் தடுமாறி, அவர்களைத் தழுவி
காம லீலைகளைச் செய்தவனாய்,

மா யாக்கை தனையும் அரு நாளையும் அவத்திலே
போக்குதலை அறிவிலேனை
... சிறந்த உடலையும் அருமையான
வாழ் நாளையும் வீணில் கழிக்கின்றவனும், நல்லறிவு இல்லாதவனுமாகிய
என்னை,

நெறி நிற்க நீ தீக்ஷை* தரவேணும் ... நன்னெறியில் நிற்கும்படி நீ
தயை புரிந்து அறிவுரை செய்தருள வேண்டும்.

அலகு இல் தமிழால் உயர் சமர்த்தனே போற்றி ... எல்லை
இல்லாத தமிழறிவால் உயர்ந்துள்ள வல்லவனே, போற்றி,

அருணை நகர் கோபுரம் இருப்பனே போற்றி ...
திருவண்ணாமலையின் கோபுரத்தில் வீற்றிருப்பவனே, போற்றி,

அடல் மயில் நடாவிய ப்ரியத்தனே போற்றி ... வலிய மயிலை
ஓட்டுதலில் விருப்பு வைத்தவனே, போற்றி,

அவதான அறுமுக சுவாமி எனும் அத்தனே போற்றி ...
விந்தையான செயல்களைச் செய்த ஆறுமுகச் சுவாமி என்னும்
தலைவனே, போற்றி,

அகில தலம் ஓடி வரு நிர்த்தனே போற்றி ... எல்லாப் பூமிகளையும்
வலம் செய்து ஓடி வந்த நிருத்த மூர்த்தியே, போற்றி,

அருணகிரி நாத எனும் அப்பனே போற்றி ... அருணகிரி நாதரே
என்று என்னை அழைத்த அப்பனே, போற்றி,

அசுரேசர் பெல(ம்) மடிய வேல் விடு கரத்தனே போற்றி ...
அசுரர் தலைவர்களின் வலிமை அழிய வேலைச் செலுத்திய கரத்தினனே,
போற்றி,

கரதல கபாலி குரு வித்தனே போற்றி ... கையில் கபாலம் ஏந்திய
சிவபெருமானுக்கு ஞான உபதேச பண்டிதனாய் நின்றவனே, போற்றி,

பெரிய குற மாது அணை புயத்தனே போற்றி ... பெருமை வாய்ந்த
குறப் பெண்ணாகிய வள்ளி நாயகியை அணைகின்ற திருப்புயங்களை
உடையவனே, போற்றி,

பெரு வாழ்வாம் பிரமன் அறியா விரத தக்ஷிணா மூர்த்தி பர
சமய கோள் அரி
... பெருஞ் செல்வப் பொருளானதும், பிரமனும்
அறியாததுமாகிய பிரணவப் பொருளை உபதேசித்த தக்ஷிணா
மூர்த்தி சொரூபனே, மற்ற (சமண, புத்த) மதங்களை அழிக்க வந்த
(திருஞான சம்பந்த) சிங்கமே,

தவத்தினால் வாய்த்த பெரிய மடம் மேவிய சுகத்தனே
யோக்யர் பெருமாளே.
... தவச் செயலால் கிடைக்கும், பெரிய மடம்**
என்னும் இடத்தில் வீற்றிருக்கும், சுகப் பெருமானே, தூய யோகியர்கள்
போற்றும் பெருமாளே.


* தீக்ஷை என்பது குருவின் அறிவுரை. அது ஏழு வகைப்படும்:

நயன (கண்களால்), ஸ்பரிச (தொடுவதால்), மானச (மன அலைகளால்), வாசக (சொல்லால்),
சாஸ்திர (வேத நூல்களால்), யோக (யோகாப்பியாசத்தால்), ஔத்திரி (கேள்வி - பதில் மூலமாக)
என்பனவாகும்.


** பெரிய மடம் கும்பகோணத்தில் மகாமகக் குளத்துக்கு வட கரையில் உள்ள
சைவ மடம்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.989  pg 2.990  pg 2.991  pg 2.992  pg 2.993  pg 2.994 
 WIKI_urai Song number: 827 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 823 - kalagavizhi mAmagaLir (periyamadam)

kalakavizhi mAmakaLir kaikkuLE yAyppoy
     kaLavumatha nUlpalapa diththavA vEtkai
          kanathanamu mArpumuRa licchaiyA lArththu ...... kazhuneerAr

kamazhnaRaisa vAthupuzhu kaiththuzhAy vArththu
     nilavarasu nAdaRiya kattilpOt tArcchey
          karumamaRi yAthusiRu puththiyAl vAzhkkai ...... karuthAthE

thalamadaisu sALaramu kappilE kAththu
     niRaipavusu vAzhvarasu sathyamE vAyththa
          thenavuruki yOdiyoru satRuLE vArththai ...... thadumARith

thazhuviyanu rAkamumvi LaiththumA yAkkai
     thanaiyumaru nALaiyuma vaththilE pOkku
          thalaiyaRivi lEnaineRi niRkanee theekshai ...... tharavENum

alakilthami zhAluyarsa marththanE pOtRi
     aruNainakar kOpuravi ruppanE pOtRi
          adalmayilna dAviyapri yaththanE pOtRi ...... avathAna

aRumukasu vAmiyenum aththanE pOtRi
     akilathala mOdivaru nirththanE pOtRi
          aruNakiri nAthaenum appanE pOtRi ...... asurEsar

pelamadiya vElviduka raththanE pOtRi
     karathalaka pAlikuru viththanE pOtRi
          periyakuRa mAthaNaipu yaththanE pOtRi ......peruvAzhvAm

piramanaRi yAviratha thakshiNA mUrththi
     parasamaya kOLaritha vaththinAl vAyththa
          periyamada mEviyasu kaththanE yOkyar ...... perumALE.

......... Meaning .........

kalaka vizhi mA makaLir kaikkuLE Ayp poy: Being ensnared within the hands of beautiful whores with rebellious eyes,

kaLavu mathan nUl pala padiththu avA vEtkai kana thanamum mArpum uRal icchaiyAl Arththu: I learnt theivery, lying and studied many erotic text books; with utmost desire, I heartily hugged their heavy bosom with relish;

kazhu neer Ar kamazh naRai savAthu puzhu kaith thuzhAy vArththu: they spread red lilies, sprinkled with fragrant javvAthu (a musk-like incence) and musk,

nila arasu nAdu aRiya kattil pOttArs sey karumam aRiyAthu: upon the cots, with well-made beds; they carried on with treacherous acts openly, with the knowledge of everyone on the earth, right from the king to the common man; not knowing what they were up to,

siRu puththiyAl vAzhkkai karuthAthE: and, due to my limited intellect, and without thinking about my precious life,

thalam adaisu sALara mukappilE kAththu niRai pavusu vAzhvu arasu sathyamE vAyththathu ena uruki: I used to approach their houses and bide my time in front of the windows and the doors; (once I was called in,) I felt as though enormous wealth, royalty and true fortune have all been showered upon me, and with a melting heart,

Odi oru satRuLE vArththai thadumARith thazhuvi anurAkamum viLaiththu: I ran into their house, and within the limited time I spent over there, I hugged them, with my speech faltering, and engaged in erotic acts;

mA yAkkai thanaiyum aru nALaiyum avaththilE pOkkuthalai aRivilEnai: I wasted my great body and frittered away invaluable life acting like a stupid fool;

neRi niRka nee theekshai* tharavENum: kindly teach me the instructive lesson that would show me the righteous path, Oh Lord!

alaku il thamizhAl uyar samarththanE pOtRi: You are a stalwart exalted with boundless knowledge of Tamil, I bow to You!

aruNai nakar kOpuram iruppanE pOtRi: You are seated in the temple tower of ThiruvaNNAmalai, I bow to You!

adal mayil nadAviya priyaththanE pOtRi: You drive the powerful peacock happily, I bow to You!

avathAna aRumuka suvAmi enum aththanE pOtRi: You are known as the six-faced Lord that has performed great miracles, I bow to You!

akila thalam Odi varu nirththanE pOtRi: You are the Lord well-versed in dancing and have flown around all the worlds speedily, I bow to You!

aruNakiri nAtha enum appanE pOtRi: You called me by the name of "AruNagiri Nathar", oh my Father, I bow to You!

asurEsar pela(m) madiya vEl vidu karaththanE pOtRi: You hold in Your hallowed hand the spear that was wielded to destroy the valour of the leaders of the demons, I bow to You!

karathala kapAli kuru viththanE pOtRi: You stood as the wisest and the greatest master to Lord SivA, who carries a skull in His hand, I bow to You!

periya kuRa mAthu aNai puyaththanE pOtRi: With Your hallowed shoulders You hugged VaLLi, the famous damsel of the KuRavAs, I bow to You!

peru vAzhvAm piraman aRiyA viratha thakshiNA mUrththi para samaya kOL ari: You are in the form of DhaksiNAmUrththy who preached the great and precious principle, PraNava ManthrA, that even BrahmA could not discern! You are the lion that came (in the form of ThirugnAna Sambandhar) to annihilate other religions (like buddhism and jainism)!

thavaththinAl vAyththa periya madam mEviya sukaththanE yOkyar perumALE.: You are the Lord of bliss that can be attained through penance and are seated in Periya madam**; You are the Lord that is praised by austere YOgis, Oh Great One!


* theekshai is the enlightening instruction from a master; it is of seven forms:

nayana - through sight, sparisa - through touch, mAnasa - through mental waves, vAchaka - through spoken word, sAsthira - through scriptural text, yOgA - through yOgA and ouththiri - through question and answer.


** Periya madam is the monastery on the northern bank of MahAmaha tank in KumbakONam.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 823 kalagavizhi mAmagaLir - periyamadam

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]