பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/992

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரியமடம்) திருப்புகழ் உரை 433 தழுவிக் காமலீலைகளைச் செய்தவனாய்ச் சிறந்த என் உடலையும் அருமையான வாழ்நாளையும் வீணிலே போக்குகின்ற (தலை அறிவிலேனை) உத்தம அறிவு இல்லாத நான் (அல்லது முதலில் அறியவேண்டிய ஆரம்ப அறிவும் இல்லாத நான் நன்னெறியிலே நிற்கும்படி நீ தயை புரிந்து) திகூைடி செய்தருளவேண்டும். அளவிலாத தமிழறிவால் உயர்ந்துள்ள சாமர்த்திய சாலியே போற்றி! திரு அண்ணாமலைப்பதிக் கோபுரத்தில் விரும்பி வீற்றிருப்பவனே போற்றி! வலிய மயிலை நடத்தி ஒட்டினதிற் பிரியம் வைத்தவனே போற்றி! (அவதானம்) மேன்மையான செயல்களைச் செய்த ஆறுமுக சுவாமி என்னும் தலைவனே போற்றி எல்லாப் பூமிகளிலும் ஓடிவந்த நிருத்த மூர்த்திய்ே போற்றி! அருணகிரிநாத என்று என்னை அழைத்த அப்பா போற்றி! அசுரத் தலைவர்களின் (432 ஆம் பக்கத் தொடர்ச்சி) f தமிழால் உயர் சமர்த்தன்-சம்பந்தப் பெருமான், முத்தமிழ் விரகர். + தனக்கு அருளிய முருகவேளை அருணகிரியார் இங்கு குறிக்கின்றார்.இவர் தான் ஆடக விசித்ரகண கோபுர முகப்பில் அருணாபுரியில் நிற்கும் அடையாளக்காரன்" (வேளைக்காரன் வகுப்பு). அடலருணைத் திருக்கோபுரத்தே அந்த வாயிலுக்கு வட வருகிற் சென்று தண்டு கொண்டேன்.இளைய களிற்றினையே (கந்தரலங்காரம்)-காப்புச் செய்யுள்-எனக் குறிப்பிக்கப்பட்டவர். X அகிலதலம் ஓடிவந்தது.பாடல் 184-பக்கம் 430-கீழ்க்குறிப்பு பாடல் 267 பக்கம் 164-கிழ்க்குறிப்பு. O இந்த அடி நாதன்' எனும் பட்டத்தைத் தந்து அருணகிரிநாத என முருகவேள் தன்னை அழைத்த வரலாற்றைக் கூறுகின்றது (அருணகிரிநாதர் வரலாறு-பக்கம் 6, 231-பார்க்க).