(இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவதற்கு முன்பு எனது முக்கியக் குறிப்பைப் படியுங்கள் - நன்றி).
(Please read my important note before using this website - Thank You).
திருப்புகழ் 817 கூர்வாய் நாராய்  (திருவாரூர்)
Thiruppugazh 817 kUrvAinArAi  (thiruvArUr)
Thiruppugazh - 817 kUrvAinArAi - thiruvArUrSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

 
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தானா தானா தானா தானா
     தானா தானத் ...... தனதான

......... பாடல் .........

கூர்வாய் நாராய் வாராய் போனார்
     கூடா ரேசற் ...... றலஆவி

கோதா னேன்மா தாமா றானாள்
     கோளே கேள்மற் ...... றிளவாடை

ஈர்வாள் போலே மேலே வீசா
     ஏறா வேறிட் ...... டதுதீயின்

ஈயா வாழ்வோர் பேரே பாடா
     ஈடே றாரிற் ...... கெடலாமோ

சூர்வா ழாதே மாறா தேவாழ்
     சூழ்வா னோர்கட் ...... கருள்கூருந்

தோலா வேலா வீறா ரூர்வாழ்
     சோதீ பாகத் ...... துமையூடே

சேர்வாய் நீதீ வானோர் வீரா
     சேரா ரூரைச் ...... சுடுவார்தஞ்

சேயே வேளே பூவே கோவே
     தேவே தேவப் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

கூர்வாய் நாராய் வாராய் போனார் கூடாரே(ரோ) ...
கூர்மையான நீண்ட வாயை உடைய நாரையே, இங்கு வருவாய். என்னை
விட்டுப் பிரிந்தவர் மீண்டும் வந்து என்னைத் தழுவ மாட்டாரோ?

சற்று அல ஆவி கோது ஆனேன் மாதா மாறு ஆனாள் ...
கொஞ்சம் அல்ல, என் உயிர் பயனற்றது ஆயிற்று. என் தாயும் என்னோடு
மாறுபட்டுப் பகை ஆனாள்.

கோளே கேள் மற்று இள வாடை ஈர் வாள் போலே மேலே
வீசா
... சுற்றத்தார்கள் கோள் மூட்டுதலிலையே ஈடுபட்டு
இருக்கின்றார்கள். மேலும் இள வாடைக் காற்று அறுக்கின்ற வாளைப்
போல் என் மேல் வீசி,

ஏறா வேறிட்டு அது தீயின் ... எறிகின்ற நெருப்பைப் போல் உடல்
மீது படுகின்றது.

ஈயா வாழ்வோர் பேரே பாடா ஈடு ஏறாரில் கெடலாமோ ...
ஒருவருக்கும் கொடாமல் வாழ்கின்றவர்களின் பேர்களைப் பாடி
ஈடேறாது தவிப்போர் போல நானும் கெட்டுப் போகலாமோ?

சூர் வாழாதே மாறாதே வாழ் சூழ் வானோர்கட்கு அருள்
கூரும் தோலா வேலா
... சூரன் வாழாத வண்ணம், தங்களது சுக
நிலை மாறாமல் உள்ள வாழ்வைச் சூழும் தேவர்களுக்கு அருள் புரிந்த,
தோல்வியைக் கண்டறியாத வேலனே,

வீறு ஆரூர் வாழ் சோதீ பாகத்து உமை ஊடே சேர்வாய் ...
மேம்பட்டு விளங்கும் திருவாரூரில்* வீற்றிருக்கும் சோதி மயமான
சிவபெருமானுடைய பாகத்தில் உள்ள உமா தேவி (இவர்கள்) மத்தியில்
(சோமாஸ்கந்த மூர்த்தியாய் உருவில்) விளங்குவாய்.

நீதி வானோர் வீரா ... நீதிப் பெருமானே, தேவர்களுக்குத் தலைமை
தாங்கும் வீரனே,

சேரார் ஊரை சுடுவார் தம் சேயே வேளே பூவே கோவே ...
பகைவர்களுடைய திரிபுரங்களைச் சுட்டவராகிய சிவபெருமானுடைய
குழந்தையே, அரசே, பொலிவு உள்ளவனே, தலைவனே

தேவே தேவ பெருமாளே. ... தேவனே, தேவர்கள் பெருமாளே.


* திருவாரூர் நாகப்பட்டினத்துக்கு மேற்கே 14 மைலில் உள்ளது. மூவரின்
தேவாரமும் போற்றும் முதுநகர்.


இப்பாடல் அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் முருகனைப் பிரிந்த
தலைவியாக புலவர் தம்மையே எண்ணிப் பாடியது. தாயாரின் கோபம், ஊர்ப்
பெண்களின் ஏச்சு, வாடைக் காற்று முதலியன தலைவியின் பிரிவுத்துயரைக்
கூட்டுவன.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.977  pg 2.978  pg 2.979  pg 2.980 
 WIKI_urai Song number: 821 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

YouTube  'YouTube' Links for this song  
  இப்பாடலுக்கான யூ ட்யூப் பதிவுகள்  

to come வரவிருக்கின்றது

 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 


Song 817 - kUrvAy nArAy (thiruvArUr)

kUrvAy nArAy vArAy pOnAr
     kUdA rEsat ...... RalaAvi

kOthA nEnmA thAmA RAnAL
     kOLE kELmat ...... RiLavAdai

eervAL pOlE mElE veesA
     ERA vERit ...... tathutheeyin

eeyA vAzhvOr pErE pAdA
     eedE RAriR ...... kedalAmO

cUrvA zhAthE mARA thEvAzh
     sUzhvA nOrkat ...... karuLkUrum

thOlA vElA veeRA rUrvAzh
     sOthee pAkath ...... thumaiyUdE

sErvAy neethee vAnOr veerA
     sErA rUraic ...... chuduvArtham

sEyE vELE pUvE kOvE
     thEvE thEvap ...... perumALE.

......... Meaning .........

kUrvAy nArAy vArAy pOnAr kUdArE: Come here, oh stork with a long and sharp beak, tell me whether or not He, who left me, will return to hug me again.

satRu ala Avi kOthu AnEn mAthA mARu AnAL: To say the least, my life has become a total waste; my mother too has become hostile bearing animosity towards me.

kOLE kEL matRu iLa vAdai eer vAL pOlE mElE veesA ERA vERittu athu theeyin: my relatives are bent upon spreading gossip about me; moreover, the so-called northerly gentle breeze blows on me like a scything sword and burns my body like a searing flames of fire.

eeyA vAzhvOr pErE pAdA eedu ERAril kedalAmO: Is it fair that I also suffer like those miserable poets praising in vain the names of those who lead a life totally bereft of charity?

cUhr vAzAthE mARAthE vAzh sUzh vAnOrkatku aruL kUrum thOlA vElA: Oh Lord with the spear who has never faced defeat, You graciously redeemed for them the happy life of the celestials by destroying the life of the demon SUran!

veeRu ArUr vAzh sOthee pAkaththu umai UdE sErvAy: In this famous place ThiruvArUr,* You are seated (as SomAskanthan) with SivA, a vision of effulgence, and DEvi UmA who is concorporate with SivA!

neethi vAnOr veerA: You are the Lord dispensing justice to all! You are the valorous leader of the celestials!

sErAr Urai suduvAr tham sEyE vELE pUvE kOvE: You are the child of Lord SivA who burnt down Thiripuram belonging to the hostile demons! You are the reddish God of Love! You are the handsome king!

thEvE thEvap perumALE.: Oh Lord, You are the God of all the celestials, Oh Great One!


* ThiruvArUr is 14 miles west of NAgappattinam. It is the unique ancient place praised by the Trinity of Saivite poets


This song has been written in the Nayaka-Nayaki BhAva portraying the pangs of separation of the heroine from Lord Murugan.
The poet personifies himself as the heroine. The hostile mother, the scandal-mongering relatives and the northerly breeze are some of the sources which aggravate the agony of her separation from the Lord.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
 

Thiru Arunagirinathar's Thiruppugazh - 817 kUrvAi nArAi - thiruvArUr


   Kaumaram.com சமீபத்தில் DDOS தாக்குதலால் பாதிக்கப்பட்டது.
எனவே, படங்கள் மற்றும் ஆடியோ தற்காலிகமாக கிடைக்காது.
நான் இதை படிப்படியாக சரிசெய்ய முயற்சிக்கிறேன்.
உங்கள் பொறுமைக்கும் புரிந்துணர்வுக்கும் நன்றி. ... வலைத்தள நிர்வாகி.  



  Kaumaram.com was recently affected by DDOS attack.
As such, images and audio will be temporarily unavailable.
I am trying to correct this progressively.
Thank you for your patience and understanding. ... webmaster.  


... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 


Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

PLEASE do not ask me for songs about other deities or for BOOKS - This is NOT a bookshop - sorry.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

© Copyright Kaumaram dot com - 2001-2040

COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED.

Please contact me (the webmaster), if you wish to place a link in your website.

email: kaumaram@gmail.com

Disclaimer:

Although necessary efforts have been taken by me (the webmaster),
to keep the items in www.kaumaram.com safe from viruses etc.,
I am NOT responsible for any damage caused by use of
and/or downloading of any item from this website or from linked external sites.
Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items
from the internet for maximum safety and security.

 மேலே   top