திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 818 பாலோ தேனோ பாகோ (திருவாரூர்) Thiruppugazh 818 pAlOthEnOpAgO (thiruvArUr) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தானா தானா தானா தானா தானா தானத் ...... தனதான ......... பாடல் ......... பாலோ தேனோ பாகோ வானோர் பாரா வாரத் ...... தமுதேயோ பாரோர் சீரோ வேளேர் வாழ்வோ பானோ வான்முத் ...... தெனநீளத் தாலோ தாலே லோபா டாதே தாய்மார் நேசத் ...... துனுசாரந் தாரா தேபே ரீயா தேபே சாதே யேசத் ...... தகுமோதான் ஆலோல் கேளா மேலோர் நாண்மா லானா தேனற் ...... புனமேபோய் ஆயாள் தாள்மேல் வீழா வாழா ஆளா வேளைப் ...... புகுவோனே சேலோ டேசே ராரால் சாலார் சீரா ரூரிற் ...... பெருவாழ்வே சேயே வேளே பூவே கோவே தேவே தேவப் ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... பாலோ தேனோ பாகோ ... நீ பால் தானோ, தேன்தானோ, வெல்லக்கட்டிதானோ? வானோர் பாராவாரத்து அமுதேயோ ... தேவர்கள் பாற்கடலில் இருந்து கடைந்தெடுத்த அமுதமோ? பாரோர் சீரோ வேள் ஏர் வாழ்வோ ... நீ இவ்வுலகிலுள்ளோரின் சிறப்புப் பொருளோ? மன்மதனுக்கு நிகரான வாழ்வோ நீ? பானோ வான்முத்தென ... பானுவோ (சூரியனோ) நீ? சிறந்த முத்தோ நீ? என்றெல்லாம் நீளத் தாலோ தாலேலோ பாடாதே ... விரிவாகத் தாலோ தாலேலோ என்று தாய்மார் என்னைத் தாலாட்டுப் பாடாமலும், தாய்மார் நேசத்து உனு சாரந் தாராதே ... தாய்மார் அன்புடன் என்னை நினைத்து தாய்ப்பால் தராமலும், பேர் ஈயாதே பேசாதே ... புகழ்ச்சிக்கு உரிய பெயர் ஒன்றும் எனக்குச் சூட்டாமலும், அன்புடன் என்னோடு பேசாமலும், ஏசத் தகுமோதான் ... ஏச்சுக்கு இடமாக நான் வளர்வது நீதியாகுமோ? ஆலோல் கேளா மேலோர் நாள் ... வள்ளி ஆலோலம் என்று கூவி பறவைகளை ஓட்டும் குரலோசை கேட்டு, முன்னொரு நாளில், மால் ஆனாது ஏனற்புனமேபோய் ... ஆசை குன்றாத நிலையில் அவளிருந்த தினைப்புனத்திற்குச் சென்று, ஆயாள் தாள்மேல் வீழா வாழா ... அந்த வள்ளித் தாயின் பாதங்களில் விழுந்தும், அதனால் வாழ்வு பயன்பெற்றது என்று கூறி வாழ்ந்தும், ஆளா வேளைப்புகுவோனே ... அவளுக்கு ஆளாக, வேளைக்காரனாக, சமயத்தில் புகுந்து விளையாடியவனே, சேலோடே சேர் ஆரால் சாலார் ... சேல் மீனோடு சேர்ந்து ஆரல் மீன்கள் மிக நிறைந்துள்ள சீர் ஆரூரிற் பெருவாழ்வே ... சீர்பெற்ற திருவாரூர்* தலத்தின் பெருஞ் செல்வமே, சேயே வேளே பூவே கோவே ... இறைவன் சேயே, கந்த வேளே, மலர் போன்ற பொலிவு உள்ளவனே, அரசே, தேவே தேவப்பெருமாளே. ... இறைவனே, தேவர்களின் பெருமாளே. |
* திருவாரூர் நாகப்பட்டினத்துக்கு மேற்கே 14 மைலில் உள்ளது. மூவரின் தேவாரமும் போற்றும் முதுநகர். |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 2.979 pg 2.980 pg 2.981 pg 2.982 WIKI_urai Song number: 822 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
'குருஜி' ராகவன் அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள் 'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை & சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) Sri Maha Periyava Thirupugazh Sabha & Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) | பாடகர் பக்கத்திற்கு to singer's page |
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) இப்பாடலின் பொருள் Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) meanings in Tamil |
திரு சபா. மெய்யப்பன் Thiru S. Meyyappan பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
M.S. பாலஷ்ரவண்லக்ஷ்மி புதுச்சேரி M.S. Balashravanlakshmi Puducherry பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
'குமார வயலூர்' திரு T. பாலசந்தர் Thiru T. Balachandhar பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
திருமதி வே. மாலதி, சென்னை Mrs. Malathi Velayudhan, Chennai பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 818 - pAlO thEnO pAgO (thiruvArUr) pAlO thEnO pAkO vAnOr pArA vArath ...... thamuthEyO pArOr seerO vELEr vAzhvO pAnO vAnmuth ...... thenaneeLath thAlO thAlE lOpA dAthE thAymAr nEsath ...... thunusAram thArA thEpE reeyA thEpE sAthE yEsath ...... thakumOthAn AlOl kELA mElOr nANmA lAnA thEnaR ...... punamEpOy AyAL thALmEl veezhA vAzhA ALA vELaip ...... pukuvOnE sElO dEsE rArAl sAlAr seerA rUriR ...... peruvAzhvE sEyE vELE pUvE kOvE thEvE thEvap ...... perumALE. ......... Meaning ......... pAlO thEnO pAkO: "Are you sweet like milk or honey or solid jaggery? vAnOr pArA vArath thamuthEyO: or are you the nectar drawn out by the celestials from the milky ocean? pArOr seerO vELEr vAzhvO: Are you the treasure owned by the people of the world? Or are you blessed with a life like that of the God of Love (Manmathan)? pAnO vAnmuth thena: Are you the sun or the most precious pearl?" - with such greetings, neeLath thAlO thAlE lOpA dAthE: lullabies were no longer sung to me; thAymAr nEsath thunusAram thArAthE: no mother thought of me with love and breast-fed me; pEreeyAthE pEsAthE: I was not given any worthy name nor was I ever spoken to with love; yEsath thakumOthAn: I was only ridiculed. Is it fair? AlOl kELA mElOr nAL: The other day, upon hearing the shouts of VaLLi driving away the birds (while guarding the millet), mAlAnA thEnaR punamEpOy: You became so uncontrollably passionate that You proceeded right up to her millet field AyAL thALmEl veezhA vAzhA: and fell at the feet of Mother VaLLi declaring that Your life then became worth living; ALA vELaip pukuvOnE: thus You entered her life at an opportune moment as an attendant and servant and enjoyed her company fully! sElO dEsE rArAl sAlAr seerA rUriR peruvAzhvE: Along with sEl fish, there are plenty of Aaral fish in this prosperous place, ThiruvArUr*; and You are the treasure of this town! sEyE vELE pUvE kOvE: You are God's Son! You are Lord KandhA! You are fresh like the flower! Oh King! thEvE thEvap perumALE.: Oh Lord of all the celestials! Oh Great One! |
* ThiruvArUr is 14 miles west of NAgappattinam. It is the unique ancient place praised by the Trinity of Saivite poets. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |