பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/980

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாரூர்) திருப்புகம் உரை (822) 421 (சேர்வாய்) (சோமாஸ்கந்த மூர்த்தி உருவில்) விளங்குவாய்! நீதிப்பெருமானே! தேவர்களுக்கு வீரனே! (சேரார்) பகைவர்களுடைய ஊரை (திரிபுராதிகளின் ஊரைச்) சுட்டவராகிய சிவனது குழந்தையே! வேளே! (பூவே).பொலிவு உள்ளவனே! தலைவனே! தேவனே! தேவப் பெருமாளே! (ஈடேறாரிற் கெடலாமோ) 822. பால் தானோ நீ, தேன் தானோ நீ, வெல்லக்கட்டி தானோ நீ தேவர்கள் (பாராவாரத்து) - கடலினின்றும் கடைந்தெடுத்த அமுதமோ நீ. உலகோரின் சிறப்புப் பொருளோ நீ, மன்மதன் போன்ற அழகிய வாழ்வோ நீ, (பானோ)-பாதுவோ (சூரியனோ நீ), (வான்) சிறந்த முத்தோ நீ என்று விரிவாகத் (தாய்மார்) தாலோ தாலேலோ என்று என்னை (அருமையுடன்) பாடாமலும், தாய்மார்கள் (நேசத்து) அன்புடனே (உனு - உன்னு) நினைத்து, (சாரம்) தனசாரமாம்-முலைப்பால் தராமலும், (பேர் ஈயாதே).* புகழ்ச்சிக்கு உரிய பேர் ஒன்றும் கொடாமலும், (அன்புடனே என்னுடன்) குலவாமலும் இகழ்ச்சிக்கிடமாய் நான் வளர்வது நீதியோதான்! (ஆலோலம்) வள்ளி ஆயால் ஒட்டும் ஒலியைக் (கேளா) கேட்டு, மேலோர் நாள்-முன்பு ஒரு நாள், (மால்) ஆசை - (ஆனாது) - கெடாவகையில் குறையா வகையில்), (ஏனற் - புனமேபோய்) அவளிருந்த தினைப்புனத்துக்குச் சென்று. (ஆயாள்):தாய் வள்ளியின் கால்மேலே வீழ்ந்தும், (வாழா) அதனால் வாழ்வு பயன்பட்டதென்று வாழ்ந்தும், (ஆளா) வள்ளிக்கு ஆளாக-(வேளைப் புகுவோனே). சமயத்திற் புகுந்து நின்றவனே! (அல்லது பொழுது போக்கினவனே) (வள்ளி வேளைக்காரனாக விளையாடினவனே):

  • தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலில் தோன்றாமை நன்று' - திருக்குறள் 236-ன் கருத்து.