திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 806 காதோடு தோடிகலி (திருமாகாளம்) Thiruppugazh 806 kAdhOduthOdikali (thirumAkALam) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தானான தானதன தானதன தானதன தானான தானதன தானதன தானதன தானான தானதன தானதன தானதன ...... தனதான ......... பாடல் ......... காதோடு தோடிகலி யாடவிழி வாள்சுழல கோலாக லாரமுலை மார்புதைய பூணகல காரோடு கூடளக பாரமல ரோடலைய ...... அணைமீதே காலோடு காலிகலி யாடபரி நூபுரமொ டேகாச மானவுடை வீசியிடை நூல்துவள காவீர மானஇத ழூறல்தர நேரமென ...... மிடறோதை நாதான கீதகுயில் போலஅல்குல் மால்புரள மார்போடு தோள்கரமொ டாடிமிக நாணழிய நானாவி நோதமுற மாதரொடு கூடிமயல் ...... படுவேனை நானாரு நீயெவனெ னாமலென தாவிகவர் சீர்பாத மேகவலை யாயுமுன வேநிதமு நாதாகு மாரமுரு காஎனவு மோதஅருள் ...... புரிவாயே பாதாள சேடனுட லாயிரப ணாமகுட மாமேரொ டேழுகட லோதமலை சூரருடல் பாழாக தூளிவிணி லேறபுவி வாழவிடு ...... சுடர்வேலா பாலாழி மீதரவின் மேல்திருவொ டேயமளி சேர்நீல ரூபன்வலி ராவணகு ழாமிரிய பாரேவை யேவியமு ராரியைவர் தோழனரி ...... மருகோனே மாதாபு ராரிசுக வாரிபரை நாரியுமை ஆகாச ரூபியபி ராமிவல மேவுசிவன் மாடேறி யாடுமொரு நாதன்மகிழ் போதமருள் ...... குருநாதா வானோர்க ளீசன்மயி லோடுகுற மாதுமண வாளாகு காகுமர மாமயிலின் மீதுதிரு மாகாள மாநகரில் மாலொடடி யார்பரவு ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... காதோடு தோடு இகலி ஆட விழி வாள் சுழல கோலாகலம் ஆர முலை மார் புதைய பூண் அகல காரோடு கூட அளக பார(ம்) மலரோடு அலைய ... காதில் உள்ள தோடுடன் விரோதித்துப் பாயும் கண்கள் வாள் போலச் சுழல, ஆடம்பரமான முத்து மாலை அணிந்த தனங்கள் மார்பை மறைக்க, ஆபரணங்கள் அகன்று போக, மேகம் போன்ற கூந்தல் பாரம் மலர்களுடன் அலைய, அணை மீதே காலோடு கால் இகலி ஆட பரி நூபுரமொடு ஏகாசமான உடை வீசி இடை நூல் துவள ... படுக்கையின் மேல் காலுடன் கால் பின்னி அசைய, தரித்துள்ள சிலம்புடன் மேலே அணிந்துள்ள புடவை வீசப்பட்டு, நூல் போன்ற இடை துவண்டு போக, காவீரமான இதழ் ஊறல் தர நேர(ய)ம் என மிட(ற்)று ஓதை நாதான கீத குயில் போல அல்குல் மால் புரள மார்போடு தோள் கரமொடு ஆடி மிக நாண் அழிய ... செவ்வலரி போலச் சிவந்த வாயிதழ் ஊறலைக் கொடுக்க, அன்பு காட்டுவது போல கண்டத்தின் ஒலி (நாதமான) இனிய கீதம் போல் ஒலிக்கும் குயில் போல் விளங்க, பெண்குறியில் பரவச மயக்கம் ஏற்பட, மார்பும், தோளும், கையும் ஒன்றோடொன்று பிணைபட்டு ஆடி மிகவும் நாணம் கெட்டொழிய, நானா விநோதம் உற மாதரொடு கூடி மயல் படுவேனை ... பலவித வினோதங்களை அனுபவித்து பெண்களோடு கூடி மோக மயக்கம் கொள்கின்ற என்னை, நான் ஆரு நீ எவன் எனாமல் எனது ஆவி கவர் சீர் பாதமே கவலையாயும் உ(ன்)னவே நிதமு(ம்) நாதா குமார முருகா எனவும் ஓத அருள் புரிவாயே ... நான் யார், நீ எவன் என்று எண்ணாமல், என்னுடைய உயிரை வசீகரிக்கின்ற உனது சீரிய திருவடியின் தியானமே எனக்குள்ள கவலையாகவும், (உன்னைத்) துதிக்கவும், நாள்தோறும் நாதா, குமாரா, முருகா என்று ஓதவும் திருவருளைத் தந்து அருளுக. பாதாள சேடன் உடல் ஆயிர(ம்) பணா மகுட(ம்) மா மேரு ஒடே ஏழு கடல் ஓத(ம்) மலை சூரர் உடல் பாழாக தூளி வி(ண்)ணில் ஏற புவி வாழவிடு சுடர் வேலா ... பாதாளத்தில் உள்ள ஆதிசேஷனுடைய உடல், ஆயிரம் படங்களாகிய மகுடங்கள், மகா மேரு இவைகளுடன், ஏழு கடல்களின் வெள்ளம், கிரெளஞ்ச மலை, சூரர்களுடைய உடல் (இவை எல்லாம்) பாழ்பட, பொடிபட்ட தூள் விண்ணிலே போய்ப் படிய, உலகை வாழச் செலுத்தின ஒளி வேலனே, பால் ஆழி மீது அரவின் மேல் திருவொடே அமளி சேர் நீல ரூபன் வலி ராவண குழாம் இரிய பார் ஏவை ஏவிய முராரி ஐவர் தோழன் அரி மருகோனே ... திருப்பாற் கடலில் பாம்பின் மேல் லக்ஷ்மியுடன் படுக்கை கொண்ட நீல நிறத்துத் திருமால், வலிமை வாய்ந்த ராவணனும் அவன் கூட்டத்தாரும் அஞ்சி ஓடி விலக பூமியில் அம்பைச் செலுத்தின (ராமனும்), முராசுரனுடைய பகைவனும், பஞ்ச பாண்டவர் ஐவரின் தோழனுமாகிய (கண்ணனாகிய) திருமாலின் மருகோனே, மாதா புராரி சுகவாரி பரை நாரி உமை ஆகாச ரூபி அபிராமி வலம் மேவும் சிவன் மாடு ஏறி ஆடும் ஒரு நாதன் மகிழ் போதம் அருள் குருநாதா ... அன்னை, திரிபுரத்தை எரித்தவள், சுகக் கடல், பரதேவதை, பெண்ணரசி உமா தேவி, ஆகாச சொரூபி, அழகி (ஆகிய பார்வதியின்) வலப் பால் உள்ள சிவ பெருமான், ரிஷப வாகனத்தின் மேல் நடனம் செய்யும் ஒப்பற்ற தலைவனுக்கு மகிழும்படியான ஞானப் பொருளை உபதேசித்து அருளிய குரு மூர்த்தியே, வானோர்கள் ஈசன் மயிலோடு குற மாது மணவாளா குகா குமர ... தேவேந்திரன் வளர்த்த மயில் போன்ற தேவயானையுடன் குறப் பெண் வள்ளியை மணந்த மணவாளனே, குகனே, குமரனே, மா மயிலின் மீது திரு மாகாள மா நகரில் மாலொடு அடியார் பரவு பெருமாளே. ... சிறந்த மயிலின் மேல் திருமாகாள* மா நகரில் ஆசையுடன் அமர்ந்து, அடியார்கள் பரவி வழிபடும் பெருமாளே. |
* திருமாகாளம் தஞ்சை மாவட்டத்தில் பேரளத்துக்கு அருகில் உள்ளது. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 2.945 pg 2.946 pg 2.947 pg 2.948 WIKI_urai Song number: 810 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
திரு சபா. மெய்யப்பன் Thiru S. Meyyappan பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 806 - kAdhOdu thOdikali (thirumAkALam) kAthOdu thOdikali yAdavizhi vALsuzhala kOlAka lAramulai mArputhaiya pUNakala kArOdu kUdaLaka pAramala rOdalaiya ...... aNaimeethE kAlOdu kAlikali yAdapari nUpuramo dEkAsa mAnavudai veesiyidai nUlthuvaLa kAveera mAnaitha zhURalthara nEramena ...... midaROthai nAthAna keethakuyil pOlaalkul mAlpuraLa mArpOdu thOLkaramo dAdimika nANazhiya nAnAvi nOthamuRa mAtharodu kUdimayal ...... paduvEnai nAnAru neeyevane nAmalena thAvikavar seerpAtha mEkavalai yAyumuna vEnithamu nAthAku mAramuru kAenavu mOthaaruL ...... purivAyE pAthALa sEdanuda lAyirapa NAmakuda mAmEro dEzhukada lOthamalai cUrarudal pAzhAka thULiviNi lERapuvi vAzhavidu ...... sudarvElA pAlAzhi meetharavin mElthiruvo dEyamaLi sErneela rUpanvali rAvaNaku zhAmiriya pArEvai yEviyamu rAriyaivar thOzhanari ...... marukOnE mAthApu rArisuka vAriparai nAriyumai AkAsa rUpiyapi rAmivala mEvusivan mAdERi yAdumoru nAthanmakizh pOthamaruL ...... gurunAthA vAnOrka Leesanmayi lOdukuRa mAthumaNa vALAku kAkumara mAmayilin meethuthiru mAkALa mAnakaril mAlodadi yArparavu ...... perumALE. ......... Meaning ......... kAthOdu thOdu ikali Ada vizhi vAL suzhala kOlAkalam Ara mulai mAr puthaiya pUN akala kArOdu kUda aLaka pAra(m) malarOdu alaiya: Their eyes rolled like a sword leaping combatively up to the stud on the ears; their breasts wearing sophisticated string of pearls covered their chest; the ornaments moved aside and their cloud-like hair wearing flowers fluttered about; aNai meethE kAlOdu kAl ikali Ada pari nUpuramodu EkAsamAna udai veesi idai nUl thuvaLa: on the bed, their leg intertwined with their suitor's leg and shook; the anklets and the attire worn by them were spun off; their thread-like slender waist gave way; kAveeramAna ithazh URal thara nEra(ya)m ena mida(R)Ru Othai nAthAna keetha kuyil pOla alkul mAl puraLa mArpOdu thOL karamodu Adi mika nAN azhiya: their lips looking like the red flower offered their saliva; as if to demonstrate their love, the crooning that emanated from their throat sounded like the melodious music of the cuckoo; their genital became exhilarated; their chest, shoulders and arms interlocked with one another and shook to the point that modesty was destroyed; nAnA vinOtham uRa mAtharodu kUdi mayal paduvEnai: I have been having fun in so many ways copulating with girls and becoming dazed with passion; nAn Aru nee evan enAmal enathu Avi kavar seer pAthamE kavalaiyAyum u(n)navE nithamu(m) nAthA kumAra murukA enavum Otha aruL purivAyE: oh Lord, do not differentiate between me and You as if we are two individuals; kindly grant me the only concern of meditating upon Your hallowed feet that enchant my life and graciously make me praise You everyday praying "Oh Master, Oh KumArA and Oh MurugA!" pAthALa sEdan udal Ayira(m) paNA makuda(m) mA mEru odE Ezhu kadal Otha(m) malai cUrar udal pAzhAka thULi vi(N)Nil ERa puvi vAzhavidu sudar vElA: The body of the Serpent AdhisEshan in the netherworld, his thousand crowned-hoods, Mount MEru, the deluge in the seven seas, Mount Krouncha and the bodies of the demons were all destroyed and the resultant dust soared up and settled in the sky when You wielded the bright spear to rescue the world, Oh Lord! pAl Azhi meethu aravin mEl thiruvodE amaLi sEr neela rUpan vali rAvaNa kuzhAm iriya pAr Evai Eviya murAri aivar thOzhan ari marukOnE: He is the blue-hued Lord who, along with Lakshmi, slumbers on the Serpent-bed (AdhisEshan) over the milky ocean; He (coming as RAmA) wielded an arrow on this earth that scared away the mighty RAvaNan and his clan who went fleeing; He (coming as KrishNA) is the enemy of the demon Muran and the great friend of the five PANdavAs; and You are the nephew of that Lord VishNu! mAthA purAri sukavAri parai nAri umai AkAsa rUpi apirAmi valam mEvum sivan mAdu ERi Adum oru nAthan makizh pOtham aruL gurunAthA: She is the Mother who burnt down Thiripuram; She is the sea of bliss; She is the Supreme Deity, the Queen of all women, UmA DEvi; the sky is the form of this exquisitely beautiful PArvathi on whose right side Lord SivA is concorporate; He mounts the bull (Nandi) as His vehicle and dances upon it; He is the matchless leader, and You graciously preached to Him, to His elation, the fundamental principle of Knowledge, Oh Master! vAnOrkaL eesan mayilOdu kuRa mAthu maNavALA kukA kumara: You married the Divine Peacock, DEvayAnai, reared by Indra, the leader of the celestials; You are also the consort of VaLLi, the damsel of the KuRavAs, Oh GuhA, Oh KumarA! mA mayilin meethu thiru mAkALa mA nakaril mAlodu adiyAr paravu perumALE.: Mounting the famous peacock You are seated with relish in the town, ThirumAkALam; Your devotees prostrate at Your feet and worship You, Oh Great One! |
* ThirumAkALam is in ThanjAvUr district near the town, PEraLam. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |