திருப்புகழ் 805 சோதி மந்திரம்  (திருவம்பர்)
Thiruppugazh 805 sOdhimandhiram  (thiruvambar)
Thiruppugazh - 805 sOdhimandhiram - thiruvambarSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தான தந்தனந் தான தந்ததன
     தான தந்தனந் தான தந்ததன
          தான தந்தனந் தான தந்ததன ...... தந்ததான

......... பாடல் .........

சோதி மந்திரம் போத கம்பரவு
     ஞான கம்பரந் தேயி ருந்தவெளி
          தோட லர்ந்தபொன் பூவி ருந்தஇட ...... முங்கொளாமல்

சூது பந்தயம் பேசி யஞ்சுவகை
     சாதி விண்பறிந் தோடு கண்டர்மிகு
          தோத கம்பரிந் தாடு சிந்துபரி ...... கந்துபாயும்

வீதி மண்டலம் பூண மர்ந்துகழி
     கோல மண்டிநின் றாடி யின்பவகை
          வேணு மென்றுகண் சோர ஐம்புலனொ ...... டுங்குபோதில்

வேதி யன்புரிந் தேடு கண்டளவி
     லோடி வெஞ்சுடுங் காட ணைந்துசுட
          வீழ்கி வெந்துகுந் தீடு மிந்தஇட ...... ரென்றுபோமோ

ஆதி மண்டலஞ் சேர வும்பரம
     சோம மண்டலங் கூட வும்பதும
          வாளன் மண்டலஞ் சார வுஞ்சுழிப ...... டர்ந்ததோகை

ஆழி மண்டலந் தாவி யண்டமுத
     லான மண்டலந் தேடி யொன்றதொமு
          கான மண்டலஞ் சேட னங்கணயில் ...... கொண்டுலாவிச்

சூதர் மண்டலந் தூளெ ழுந்துபொடி
     யாகி விண்பறந் தோட மண்டியொரு
          சூரி யன்திரண் டோட கண்டுநகை ...... கொண்டவேலா

சோடை கொண்டுளங் கான மங்கைமய
     லாடி இந்திரன் தேவர் வந்துதொழ
          சோழ மண்டலஞ் சாரு மம்பர்வளர் ...... தம்பிரானே.

......... சொல் விளக்கம் .........

சோதி மந்திரம் போதகம் பரவு ஞான அகம் பரந்தே இருந்த
வெளி தோடு அலர்ந்த பொன் பூ இருந்த இடமும்
கொ(ள்)ளாமல்
... (யோகத்தால் அடையப்படும்) ஜோதி ஒளி மண்டபம்,
ஞான உபதேசத்தால் அடையக்கூடிய ஞானாகாசமாகிய பரந்த பெரு
வெளி, இதழ் அவிழ்ந்த (கற்பகப்) பொன் மலர் மணக்கும் தேவலோகம்
(இத்தகைய மேலான பதங்களை அடையும் முயற்சியைக்) கொள்ளாமல்,

சூது பந்தயம் பேசி அஞ்சு வகை சாதி விண் பறிந்து ஓடு
கண்டர் மிகு தோதகம் பரிந்து ஆடு சிந்து பரி கந்து பாயும்
வீதி மண்டலம் பூண் அமர்ந்து
... சூதாட்டப் பந்தயங்கள் பேசி, ஐந்து
வகைப்பட்ட இனத்தினரான ஐம்புலன்கள், விண்ணையும் நிலை பெயர்த்து
ஓட வல்ல வீரர்கள், மிக்க வஞ்சகச் செயல்களை அன்பு காட்டுவது போல
காட்டி, கடல் குதிரை முழுப் பாய்ச்சல் பாய்வது போலப் பாய்ந்து செல்லும்
வீதிவட்டத்தில் சிக்கிக் கொண்டு,

கழி கோல(ம்) மண்டி நின்று ஆடி இன்ப வகை வேணும்
என்று கண் சோர ஐம்புலன் ஒடுங்கு போதில்
... மிக்க
அலங்காரங்கள் நிறையும்படி நின்று அனுபவித்து, இன்ப வகையே
வேண்டும் என்று இருந்தும், கண் பார்வை தளர்ந்து, ஐம்புலன்களும்
ஒடுங்குகின்ற சமயத்தில்,

வேதியன் புரிந்து ஏடு கண்ட அளவில் ஓடி வெம் சுடும் காடு
அணைந்து சுட வீழ்கி வெந்து உகுந்தீடும் இந்த இடர் என்று
போமோ
... பிரமன் தெரிந்து அனுப்பிய சீட்டைப் பார்த்த அளவில், உயிர்
பிரிந்து ஓட, கொடிய சுடுகாட்டைச் சேர்ந்து (என் உற்றார்) உடலைச் சுட்டு
எரிக்க, கழிந்து போய் சாம்பலாகிச் சிதறிப் போகின்ற இந்த துன்பம் என்று
ஒழியுமோ?

ஆதி(த்த) மண்டலம் சேரவும் பரம சோம மண்டலம் கூடவும்
பதும வாளன் மண்டலம் சாரவும்
... சூரிய மண்டலங்கள் யாவும்
ஒன்று சேரவும், சிறந்த சந்திர மண்டலங்கள் அதனுடன் சேரவும்,
தாமரையில் வீற்றிருக்கும் பிரமனது உலகம் அங்கு கூடவும்,

சுழி படர்ந்த தோகை ஆழி மண்டலம் தாவி அண்ட முதலான
மண்டலம் தேடி ஒன்ற அதொ முக(மா)ன மண்டலம் சேடன்
அங்கு அ(ண்)ண அயில் கொண்டு உலாவி
... (கண் போன்ற)
பீலிகள் படர்ந்துள்ள தோகையைக் கொண்ட உனது மயில் கடல்
வட்டத்தைக் கடந்து, ஆங்காங்கே உள்ள பற்பல அண்டங்களைத் தேடிப்
பொருந்தியும், கீழே உள்ள பாதாள லோகத்தில் உள்ள ஆதிசேஷனை
அங்கு கொத்தவும், கையில் நீ வேல் கொண்டு உலாவி,

சூதர் மண்டலம் தூள் எழுந்து பொடியாகி விண் பறந்து ஓட
மண்டி ஒரு சூரியன் திரண்டு ஓட கண்டு நகை கொண்ட
வேலா
... சூரியர்களின் மண்டலங்கள் தூளாகி எழுந்து பொடியாகி
வானில் பறந்தோடவும், அங்ஙனம் தூசுப்புயல் நெருங்கி வருவதைக்
கண்டு ஒவ்வொரு சூரியனும் (உருண்டு புரண்டு) ஓடுவதைக் கண்டு
சிரித்து விளையாடிய வேலனே,

சோடை கொண்டு உளம் கான மங்கை மயல் ஆடி இந்திரன்
தேவர் வந்து தொழ
... உள்ளத்தில் விருப்பம் கொண்டு காட்டில் வாழும்
மங்கையாகிய வள்ளியின் மீது எழுந்த மோகத்தில் அவளுடன்
விளையாடி, இந்திரனும் மற்ற தேவர்களும் வந்து வணங்க,

சோழ மண்டலம் சாரும் அம்பர் வளர் தம்பிரானே. ... சோழ
மண்டலத்தைச் சார்ந்த திருவம்பர்* என்னும் தலத்தில் வாழ்ந்து
வீற்றிருக்கும் தம்பிரானே.


* திருவம்பர் தஞ்சை மாவட்டத்தில் பேரளத்துக்கு அருகில் உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.941  pg 2.942  pg 2.943  pg 2.944 
 WIKI_urai Song number: 809 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 805 - sOdhi mandhiram (thiruvambar)

sOdhi mandhiram pOtha kamparavu
     njAna kamparan thEyi runthaveLi
          thOda larnthapon pUvi runthaida ...... mungoLAmal

cUthu panthayam pEsi yanjuvakai
     sAthi viNpaRin thOdu kaNdarmiku
          thOtha kampAin thAdu sinthupari ...... kanthupAyum

veethi maNdalam pUNa marnthukazhi
     kOla maNdinin RAdi yinpavakai
          vENu menRukaN sOra aimpulano ...... dungupOthil

vEthi yanpurin thEdu kaNdaLavi
     lOdi vemchudung kAda Nainthusuda
          veezhki venthukun theedu minthaida ...... renRupOmO

Athi maNdalanj chEra vumparama
     sOma maNdalang kUda vumpathuma
          vALan maNdalanj chAra vumchuzhipa ...... darnthathOkai

Azhi maNdalan thAvi yaNdamutha
     lAna maNdalan thEdi yonRathomu
          kAna maNdalanj chEda nangaNayil ...... koNdulAvic

cUthar maNdalan thULe zhunthupodi
     yAki viNpaRan thOda maNdiyoru
          cUri yanthiraN dOda kaNdunakai ...... koNdavElA

sOdai koNduLang kAna mangaimaya
     lAdi inthiran thEvar vanthuthozha
          chOzha maNdalanj chAru mamparvaLar ...... thambirAnE.

......... Meaning .........

sOdhi mandhiram pOthakam paravu njAna akam paranthE iruntha veLi thOdu alarntha pon pU iruntha idamum ko(L)LAmal: Without attempting to attain the exalted domains that include the bright hall of illumination (that is reachable through YogA), the wide milky way of knowledge that can be arrived at by listening to the master's preaching and the celestial world where fully blossomed golden kaRpaga flower exudes fragrance,

cUthu panthayam pEsi anju vakai sAthi viN paRinthu Odu kaNdar miku thOthakam parinthu Adu sinthu pari kanthu pAyum veethi maNdalam pUN amarnthu: I have been loudly betting in gambling dens; I have been ensnared in the terrestrial arena of five different types of senses that are powerful warriors capable of uprooting even the sky and running away a sprint at the full speed of the sea-horse and feigning love while harbouring treachery;

kazhi kOla(m) maNdi ninRu Adi inpa vakai vENum enRu kaN sOra aimpulan odungu pOthil: I have been enjoying a luxurious life full of adornment, preferring only pleasurable experiences; when my eyesight fails and the five sensory organs wear out,

vEthiyan purinthu Edu kaNda aLavil Odi vem chudum kAdu aNainthu suda veezhki venthu ukuntheedum intha idar enRu pOmO: and as soon as I read the memorandum selectively sent to me by Lord BrahmA, my life leaves the body and rushes away; my relatives take the body to the terrible cremation ground and burn it down; then I am reduced to ashes that are scattered away; when will this kind of misery end?

Athi(ththa) maNdalam sEravum parama sOma maNdalam kUdavum pathuma vALan maNdalam chAravum: All the solar systems gathered together and the great lunar zones joined with them; the world of Lord BrahmA, seated on a lotus, also united with the assembly;

chuzhi padarntha thOkai Azhi maNdalam thAvi aNda muthalAna maNdalam thEdi onRa atho muka(mA)na maNdalam sEdan angu a(N)Na ayil koNdu ulAvi: Your peacock, with its plume containing feathers designed like the eye, went beyond the boundaries of the seas and dashed up to the various solar systems and zones and lunged all the way down to the nether-world and pecked the serpent AdhisEshan while You flew around, holding the spear in Your hand;

cUthar maNdalam thUL ezhunthu podiyAki viN paRanthu Oda maNdi oru cUriyan thiraNdu Oda kaNdu nakai koNda vElA: when the solar systems blew into pieces and the debris was scattered in the sky, every sun became so scared of the approaching dust-storm and began to run away toppling over which sight made You laugh, Oh Sporty Lord with the spear!

sOdai koNdu uLam kAna mangai mayal Adi inthiran thEvar vanthu thozha: With tremendous desire for VaLLi, the damsel living in the forest, You played with her passionately; Indra and other celestials come to this place to worship You;

sOzha maNdalam sArum ampar vaLar thambirAnE.: It is this town Thiruvambar* in the Kingdom of the ChOzhAs where You are seated with relish, Oh Great One!


* Thiruvambar is near the town PEraLam in ThanjAvUr district.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 805 sOdhi mandhiram - thiruvambar

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]