பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/946

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமாகாளம்) திருப்புகழ் உரை 387 திருமாகாளம் 810. காதிலுள்ள தோடுடன் (இகலி) மாறுபட்டுப் பாயும் கண் வாள்போலச் சுழல, (கோலாகல - ஆரம் - முலை) ஆடம்பரமுள்ளதும் முத்துமாலை அணிந்ததுமான கொங்கை (மார் - புதைய) மார்பை மறைக்க, (மார்பில் உள்ள) ஆபரணங்கள் அகன்றுபோக, மேகம் போன்ற கூந்தற்பாரம் அதிற் சூடியுள்ள மலர்களுடன் அலைய, படுக்கையின்மேல் காலுடன் கால் இகலி - மாறுபட்டு அசைய, (பரி) தரித்துள்ள, சிலம்புடன், மேலே அணிந்துள்ள ஆடைவீசப்பட்டு நூல்போன்ற இடை துவட்சியுற, காவீரமான - கவிரமான - செவ்வலரிபோலச் சிவந்த வாயிதழ் ஊறலைத்தர, அன்பு காட்டுவதுபோலக் கண்டத்து ஒலி. (நாதமான) இனிய ஒலியான கீதம்போல ஒலிக்கும் குயில்போல விளங்கி, அல்குலில் அன்பொழுச்கம் புரள. மார்பும், தோளும், கையும் ஒன்றோடொன்று பிணைபட்டு ஆடி மிகவும் நாணம் கெட்டழிய, பலவித வினோதங்களை அனுபவித்து, பெண்களோடு கூடி மோக மயக்கம் கொள்கின்ற என்னை நான் ஆர், நீ எவன் (எவன் நீ) என்று என்னைப் புறக்கணிக்காமல் என்னுடைய உயிரை வசீகரிக்கின்ற (உனது) சீரிய திருவடித் தியானமே எனக்குள்ள கவலையாய், (முன்னவே, நினைக்கவும்) நாள்தோறும் "நாதா! குமார! முருகா" என்று ஒதவும் திருவருளைத் தந்தருளுக! பாதாளத்தில் உள்ள ஆதிசேடனுடைய உடல், ஆயிரம் படங்களாம் மகுடங்கள், மகாமேரு இவைகளுடன் ஏழுகடல் வெள்ளம், கிரெளஞ்சமலை, சூரர் களின் உடல் - இவையெலாம் பாழ்பட, பொடிபட்ட துாள் விண்ணிலே போய்ப்படிய உலகுவாழச் செலுத்தின ஒளிவேலனே!