திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 807 குங்கும கற்பூர (இஞ்சிகுடி) Thiruppugazh 807 kungumakaRppUra (injikudi) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தந்ததனத் தான தான தனதன தந்ததனத் தான தான தனதன தந்ததனத் தான தான தனதன ...... தனதான ......... பாடல் ......... குங்குமகற் பூர நாவி யிமசல சந்தனகத் தூரி லேப பரிமள கொங்கைதனைக் கோலி நீடு முகபட ...... நகரேகை கொண்டைதனைக் கோதி வாரி வகைவகை துங்கமுடித் தால கால மெனவடல் கொண்டவிடப் பார்வை காதி னெதிர்பொரு ...... மமுதேயாம் அங்குளநிட் டூர மாய விழிகொடு வஞ்சமனத் தாசை கூறி யெவரையு மன்புடைமெய்க் கோல ராக விரகினி ...... லுறவாடி அன்றளவுக் கான காசு பொருள்கவர் மங்கையர்பொய்க் காதல் மோக வலைவிழ லன்றியுனைப் பாடி வீடு புகுவது ...... மொருநாளே சங்கதசக் ரீவ னோடு சொலவள மிண்டுசெயப் போன வாயு சுதனொடு சம்பவசுக் ரீவ னாதி யெழுபது ...... வெளமாகச் சண்டகவிச் சேனை யால்மு னலைகடல் குன்றிலடைத் தேறி மோச நிசிசரர் தங்கிளைகெட் டோட ஏவு சரபதி ...... மருகோனே எங்குநினைப் போர்கள் நேச சரவண சிந்துரகர்ப் பூர ஆறு முககுக எந்தனுடைச் சாமி நாத வயலியி ...... லுறைவேலா இன்புறுபொற் கூட மாட நவமணி மண்டபவித் தார வீதி புடைவளர் இஞ்சிகுடிப் பார்வ தீச ரருளிய ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... குங்கும கற்பூற நாவி இம சலம் சந்தன கத்தூரி லேப பரிமள கொங்கை தனைக் கோலி நீடு முக பட(ம்) நகரேகை ... குங்குமம், பச்சைக் கற்பூரம், புனுகுச் சட்டம், பன்னீர், சந்தனம், கஸ்தூரி (இவைகளின்) பூசுகையால் நறுமணம் கொண்டதும், நகரேகை கொண்டவையுமான மார்பகங்கள் வளையும்படி பெரிய ரவிக்கை, மேலாடை முதலியவற்றை அணிந்து, கொண்டை தனைக் கோதி வாரி வகை வகை துங்க முடித்து ஆலகாலம் என அடல் கொண்ட விடப் பார்வை காதின் எதிர் பொரும் அமுதேயாம் அங்கு உ(ள்)ள நிட்டூர மாய விழி கொடு ... கூந்தலைச் சீவி வாரி வித விதமாக அழகிய வகையில் முடித்து, ஆலகால விஷத்தைப்போல வலிமை கொண்ட நஞ்சை ஒத்த (கண்) காதின் எதிரில் போய் சண்டை இடும் அமுதம் போன்றதும், அங்கு உள்ள கொடுமை வாய்ந்ததுமான மாய சக்தி வாய்ந்த கண்ணைக் கொண்டு, வஞ்ச மனத்து ஆசை கூறி எவரையும் அன்பு உடை மெய்க் கோல ராக விரகினில் உறவாடி ... (உள்ளே) வஞ்சக மனத்துடனும், (புறத்தே) அன்பு மொழிகளைப் பேசியும் (சந்தித்த) எத்தகையவருடனும் அன்பு காட்டி, மெய்யே உருவெடுத்ததோ என்னும்படி ஆசை கூடிய சாமர்த்தியத்துடன் மொழிகளைப் பேசிச் சல்லாபித்து, அன்று அளவுக்கான காசு பொருள் கவர் மங்கையர் பொய்க் காதல் மோக வலை விழல் அன்றி உனைப் பாடி வீடு புகுவதும் ஒரு நாளே ... அன்றைய பொழுதுக்கான கைக்காசை அபகரிக்கும் விலைமாதர்களின் பொய்யன்பாகிய காம வலையில் விழுதல் இல்லாமல், உன்னைப் பாடி மோட்ச வீட்டில் புகும்படியான ஒரு நாள் எனக்குக் கிட்டாதோ? சங்க(ம்) தசக்ரீவனோடு சொல வள(ம்) மிண்டு செயப்போன வாயு சுதனொடு சம்பவ சுக்ரீவன் ஆதி எழுபது வெ(ள்)ளமாக ... கொத்தான பத்துத் தலைகளை உடைய ராவணனுடன் தூது செல்வதற்கு வேண்டிய சொல் வளம் முதலிய ஆற்றல் கொண்டு வீரச் செயல்கள் செய்வதற்குச் சென்ற வாயுவின் மகனான அனுமனோடு, ஜாம்பவான், சுக்ரீவன் முதலான எழுபது வெள்ளம் சேனைகளுடன் சண்ட கவிச் சேனையால் முன் அலை கடல் குன்றில் அடைத்து ஏறி மோச நிசாசரர் தம் கிளை கெட்டு ஓட ஏவு சரபதி மருகோனே ... வலிமை வாய்ந்த குரங்குப் படையால் முன்பு, அலைகின்ற கடலை சிறு மலைகள் கொண்டு அணைகட்டி (அக்கரையில் உள்ள இலங்கையில்) ஏறி, மோச எண்ணமுடைய அரக்கர்களுடைய சுற்றம் அழிந்து ஓடும்படி செலுத்திய அம்பினைக் கொண்ட ராமனின் மருகனே, எங்கு நினைப்போர்கள் நேச சரவண சிந்துர கர்ப்பூர ஆறு முக குக எந்தனுடைச் சாமி நாத வயலியில் உறைவேலா ... எங்கு வாழ்பவர்களுக்கும் நினைப்பவர்களுக்கும் நேசனே, சரவணனே, செம்பொடி பச்சைக் கற்புரம் (இவை அணிந்துள்ள) ஆறுமுகனே, குகனே, அடியேனுக்கு உரிய சாமிநாதப் பெருமானே, வயலூரில் வாழும் வேலனே, இன்புறு பொன் கூட மாட நவ மணி மண்டப வித்தார வீதி புடை வளர் இஞ்சி குடிப் பார்வதி ஈசர் அருளிய பெருமாளே. ... இன்பம் தரத் தக்க அழகிய கூடங்கள், மாடங்கள், புதிது புதிதான நவரத்தினங்கள், மண்டபங்கள், அகண்ட தெருக்களில் பக்கத்திலே வளர்கின்ற இஞ்சிகுடி என்னும் தலத்தில் பார்வதி பாகர் ஆகிய சிவபெருமான் பெற்றருளிய பெருமாளே. |
* இஞ்சிகுடி மயிலாடுதுறைக்கு 10 மைல் தெற்கேயுள்ள பேரளத்தின் அருகில் உள்ளது. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 2.947 pg 2.948 pg 2.949 pg 2.950 pg 2.951 pg 2.952 WIKI_urai Song number: 811 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
திரு சபா. மெய்யப்பன் Thiru S. Meyyappan பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 807 - kunguma kaRppUra (injikudi) thanthathanath thAna thAna thanathana thanthathanath thAna thAna thanathana thanthathanath thAna thAna thanathana ...... thanathAna ......... Song ......... kungumakaR pUra nAvi yimasala santhanakath thUri lEpa parimaLa kongaithanaik kOli needu mukapada ...... nakarEkai koNdaithanaik kOthi vAri vakaivakai thungamudith thAla kAla menavadal koNdavidap pArvai kAthi nethirporu ...... mamuthEyAm anguLanit tUra mAya vizhikodu vanjamanath thAsai kURi yevaraiyu manpudaimeyk kOla rAka virakini ...... luRavAdi anRaLavuk kAna kAsu poruLkavar mangaiyarpoyk kAthal mOka valaivizha lanRiyunaip pAdi veedu pukuvathu ...... morunALE sangathasak reeva nOdu solavaLa miNduseyap pOna vAyu suthanodu sampavasuk reeva nAthi yezhupathu ...... veLamAkac chaNdakavic chEnai yAlmu nalaikadal kunRiladaith thERi mOsa nisisarar thangiLaiket tOda Evu sarapathi ...... marukOnE enguninaip pOrkaL nEsa saravaNa sinthurakarp pUra ARu mukaguka enthanudaic chAmi nAtha vayaliyi ...... luRaivElA inpuRupoR kUda mAda navamaNi maNdapavith thAra veethi pudaivaLar injikudip pArva theesa raruLiya ...... perumALE. ......... Meaning ......... kunguma kaRpURa nAvi ima salam santhana kaththUri lEpa parimaLa kongai thanaik kOli needu muka pada(m) nakarEkai: Smeared with a paste of vermilion, fresh camphor, civet, sandalwood powder, rose water and musk, the breasts of the whores are fragrant; they have the marks of (their suitors') nail-etching; donning tight blouse and a covering cloth over their curvy bosom, koNdai thanaik kOthi vAri vakai vakai thunga mudiththu AlakAlam ena adal koNda vidap pArvai kAthin ethir porum amuthEyAm angu u(L)La nittUra mAya vizhi kodu: they tidy their combed hair, tying it into many different knots and tufts; their eyes confronting the ears are filled with potent poison equivalent to the AlakAlam and also contain the divine nectar within them; they cast a magic and evil spell; vanja manaththu Asai kURi evaraiyum anpu udai meyk kOla rAka virakinil uRavAdi: hiding their treacherous mind, (outwardly) they speak sweet words of love to whomever they meet, creating an impression as if they are the incarnation of Truth itself; with that kind of lust-filled clever speech, they flirt about; anRu aLavukkAna kAsu poruL kavar mangaiyar poyk kAthal mOka valai vizhal anRi unaip pAdi veedu pukuvathum oru nALE: these whores are out to steal the belongings of their suitors one day at a time; lest I fall a victim into the web of their passionate and pretentious love, will I not be able to sing Your glory and seek the path towards salvation one of these days? sanga(m) thasakreevanOdu sola vaLa(m) miNdu seyappOna vAyu suthanodu sampava sukreevan Athi ezhupathu ve(L)LamAka: He had the gift of articulation to be sent as a messenger to RAvaNan, who had a bunch of ten heads; he also had other valorous attributes needed for his mission; He is the son of VAyu; with the help of that HanumAn, accompanied by JAmbavAn, Sugreevan and over seventy thousand soldiers, saNda kavic chEnaiyAl mun alai kadal kunRil adaiththu ERi mOsa nisAsarar tham kiLai kettu Oda Evu sarapathi marukOnE: assisted by a strong and powerful army of monkeys, a bridge was built using small hillets over the wavy sea across to LankA where the treacherous demons, with their entire clan, were annihilated by the unique arrow wielded by RAmA; and You are His nephew, Oh Lord! engu ninaippOrkaL nEsa saravaNa sinthura karppUra ARu muka guka enthanudaic chAmi nAtha vayaliyil uRaivElA: You are the dear friend of Your devotees wherever they are who meditate on You, Oh SaravaNA! Oh GuhA, with six hallowed faces, You are Lord SwAminAthan belonging to Your slave, namely myself! You are the Lord with the spear having an abode at VayalUr! inpuRu pon kUda mAda nava maNi maNdapa viththAra veethi pudai vaLar inji kudip pArvathi eesar aruLiya perumALE.: In this town injikudi*, the broad streets are full of lavish halls, terraces, novel and precious gems and stone-pillared structures that are very pleasing; You are seated in this town having been delivered by Goddess PArvathi and Lord SivA who is concorporate on Her side, Oh Great One! |
* Injikudi is near PEraLam, 10 miles south of MayilAduthuRai. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |