பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/949

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

390 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை கொண்டைதனைக் கோதி வாரி "வகை வகை துங்கமுடித் தால கால மென வடல் கொண்டவிடப் பார்வை காதினெதிர்பொரு மமுதேயாம். அங்குளநிட் டூர மாய விழிகொடு வஞ்சமனத் தாசை கூறி யெவரையு மன்புடைமெய்க் கோல ராக விரகினி துறவாடி, அன்றளவுக் கான காசு பொருள்கவர் மங்கையர்பொய்க் காதல் மோக வலைவிழ லன்றியுனைப் பாடி வீடு புகுவது மொருநாளே. சங்கதசக் ரீவ னோடு t சொலவள மிண்டுசெயப் போன வாயு சுதனொடு சம்பவசுக் ரீவ னாதி யெழுபது வெளமாகச். சண்டகவிச் சேனை யால்மு Xணலைகடல் குன்றிலடைத் தேறி மோச நிசிசரர் தங்கிளைகெட் டோட ஏவு சரபதி மருகோனே, Oஎங்கநினைப் போர்கள் நேச சரவண சிந்துகர்ப் பூர ஆறு முககுக எந்தனுடைச் சாமி நாத வயலியி லுறைவேலா.

  • பெண்கள் கூந்தலை வகை வகையாக முடித்தல்: முடித்தல் ஐவகை என்ப; அவைதாம் - கொண்டை குழல், பனிச்சை முடி சுருள், (திவாகரம்): கொண்டை குழல், பணிச்சை அளகம், துஞ்சை எனவும் கூறுவர். இவைகளுக்கு ஐம்பான் முடி' எனப்பெயர்:

'குழலையும் அளகத்தையும் வகுத்தும், கொண்டையைத் தொகுத்தும், பணிச்சையையும் துஞ்சையையும் விரித்தும்" என விளக்கினார் - சிந்தாமணி 2437 உரையில். f சொலவள மின்டு செயப்போன அநுமான்' . அநுமானைச் சொல்லின் செல்வன்' என்றார் கம்பர் - "யார் கொல் இச் சொல்லின் செல்வன்......விரிஞ்சனோ விடை வல்லானோ" - கம்பரா-மராமர-20.

  1. எழுபது வெள்ளம் சேனை:

-பாடல் 515 பக்கம் 180-கீழ்க்குறிப்பு. X கடல் அடைத்தது: பாடல் 149-அடி 5, பாடல் 754-பக்கம் 248 கீழ்க்குறிப்பு. O இது உருக்கமுள்ள அடி மனப்பாடம் செய்யத் தக்கது.