திருப்புகழ் 803 பனகப் படமிசைந்த  (திலதைப்பதி)
Thiruppugazh 803 panagappadamisaindha  (thiladhaippadhi)
Thiruppugazh - 803 panagappadamisaindha - thiladhaippadhiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனனத் தனன தந்த தனனத் தனன தந்த
     தனனத் தனன தந்த ...... தனதான

......... பாடல் .........

பனகப் படமி சைந்த முழையிற் றரள நின்று
     படர்பொற் பணிபு னைந்த ...... முலைமீதிற்

பரிவற் றெரியு நெஞ்சில் முகிலிற் கரிய கொண்டை
     படுபுட் பவன முன்றி ...... லியலாரும்

அனமொத் திடுசி றந்த நடையிற் கிளியி னின்சொல்
     அழகிற் றனித ளர்ந்து ...... மதிமோக

மளவிப் புளக கொங்கை குழையத் தழுவி யின்ப
     அலையிற் றிரிவ னென்று ...... மறிவேனோ

தனனத் தனன தந்த தனனத் தனன தந்த
     தனனத் தனன தந்த ...... தனதானா

தகிடத் தகிட தந்த திமிதத் திமித வென்று
     தனிமத் தளமு ழங்க ...... வருவோனே

செநெனற் கழனி பொங்கி திமிலக் கமல மண்டி
     செறிநற் கழைதி ரண்டு ...... வளமேவித்

திருநற் சிகரி துங்க வரையைப் பெருவு கின்ற
     திலதைப் பதிய மர்ந்த ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

ப(ன்)னகப் படம் இசைந்த முழையில் தரள(ம்) நின்று படர்
பொன் பணி புனைந்த முலை மீதே
... பாம்பின் படம் போன்ற
படம் உள்ள குகை போன்ற பெண்குறியிலும், முத்து மணி நின்று
அசைந்து உலவும் அழகிய ஆபரணங்களைப் பூண்டுள்ள மார்பகத்தின்
மேலும்,

பரிவு அற்று எரியு(ம்) நெஞ்சில் முகிலின் கரிய கொண்டை
படு புள் பவன(ம்) முன்றில் இயல் ஆரும் அ(ன்)னம் ஒத்திடு
சிறந்த நடையில் கிளியின் இன் சொல் அழகில் தனி
தளர்ந்தும்
... உண்மை அன்பு இல்லாமல் (பொருள் வேண்டியே)
எரிச்சல் படும் (வேசியர்) உள்ளத்திலும், மேகம் போன்ற கரு நிறம்
கொண்ட கூந்தலிலும், (எட்டுப் பறவைகள் செய்யும்) புட்குரல்களுக்கு
இருப்பிடமான கழுத்திலும், தகுதி நிறைந்துள்ள அன்ன நடைக்கு
ஒப்பான சிறந்த நடையிலும், கிளியின் இனிய மொழிக்கு ஒப்பான
சொல்லிலும், நான் தனித்து நின்று சிந்தித்துத் தளர்ந்தும்,

அதி மோகம் அளவிப் புளக கொங்கை குழையத் தழுவி இன்ப
அலையில் திரிவன் என்றும் அறிவேனோ
... காம இச்சையில்
மனம் கொண்டு புளகம் கொண்ட மார்பகங்களை குழையும்படியாகத்
தழுவி சிற்றின்பக் கடலில் அலைத்துச் செல்கின்றவனாகிய நான்
என்றேனும், எப்போதாவது அறிந்து உய்வேனோ?

தனனத் தனன தந்த தனனத் தனன தந்த
     தனனத் தனன தந்த ...... தனதானா
தகிடத் தகிட தந்த திமிதத் திமித என்று
தனி மத்தளம் முழங்க வருவோனே
... (இதே தாளத்தில்) தனியாக
மத்தளம் ஒலிக்க வருபவனே,

செ(ம்) நெ(ல்) நற் கழனி பொங்கி திமிலக் கமலம் அண்டி
செறி நல் கழை திரண்டு வளம் மேவி திரு நல் சிகரி துங்க
வரையைப் பொருவுகின்ற திலதைப்பதி அமர்ந்த
பெருமாளே.
... செம்மையான நெற்பயிர் விளையும் நல்ல வயல்கள்
செழிப்புற்று ஓங்கி, பெரிய மீன்களும் தாமரையும் நிறைந்து, நெருங்கிய
நல்ல கரும்புகளும் திரட்சியாக வளர்ந்து வளப்பம் உற்று, அழகிய
சிகரங்களை உடைய, உயர்ந்த மலைக்கு நிகராக விளங்கும் திலதைப்
பதி** என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.


* புட் குரல்கள் = காமக் கன்னியர் கண்டத்தில் உண்டாகும் எண் வகை ஒலிகள்.
மயில், புறா, அன்னம், காடை, நாரை, குயில், கோழி, வண்டு என்பன.


** திலதைப்பதிக்கு தற்போதைய பெயர் கோயிற்பத்து. தஞ்சை மாவட்டத்தில்
பேரளம் என்ற ஊரின் தென்மேற்கே 3 மைலில் இருக்கிறது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.937  pg 2.938  pg 2.939  pg 2.940 
 WIKI_urai Song number: 807 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 803 - panagap padamisaindha (thiladhaippadhi)

panakap padami saintha muzhaiyit RaraLa ninRu
     padarpoR paNipu naintha ...... mulaimeethiR

parivat Reriyu nenjil mukiliR kariya koNdai
     paduput pavana munRi ...... liyalArum

anamoth thidusi Rantha nadaiyiR kiLiyi ninsol
     azhakit Ranitha Larnthu ...... mathimOka

maLavip puLaka kongai kuzh aiyath thazhuvi yinpa
     alaiyit Ririva nenRu ...... maRivEnO

thananath thanana thantha thananath thanana thantha
     thananath thanana thantha ...... thanathAnA

thakidath thakida thantha thimithath thimitha venRu
     thanimath thaLamu zhanga ...... varuvOnE

senenaR kazhani pongi thimilak kamala maNdi
     seRinaR kazhaithi raNdu ...... vaLamEvith

thirunaR chikari thunga varaiyaip peruvu kinRa
     thilathaip pathiya marntha ...... perumALE.

......... Meaning .........

pa(n)nakap padam isaintha muzhaiyil tharaLa(m) ninRu padar pon paNi punaintha mulai meethE: Thinking about their genital that looks like the hood of the cobra and the cave, about their bosom adorned with beautiful jewels that heave on their chest with dazzling gems and pearls,

parivu atRu eriyu(m) nenjil mukilin kariya koNdai padu puL pavana(m) munRil iyal Arum a(n)nam oththidu siRantha nadaiyil kiLiyin in sol azhakil thani thaLarnthum: about their irritated mind that lacks true love (and is bent upon grabbing money), about their cloud-like dark hair, about their throat that is the origin of many crooning sounds (of eight kinds of birds*), about their elegant gait that is comparable to the worthy swan's way of walking and about their parrot-like sweet speech, I am excited in my loneliness and have become exhausted;

athi mOkam aLavip puLaka kongai kuzhaiyath thazhuvi inpa alaiyil thirivan enRum aRivEnO: obsessed with passionate thoughts, I hug their exhilarated breasts tightly and sink in the sea of carnal pleasure and get washed away by the waves; will I ever, at any time, attain Knowledge and find salvation?

thananath thanana thantha thananath thanana thantha
     thananath thanana thantha ...... thanathAnA
thakidath thakida thantha thimithath thimitha enRu
     thani maththaLam muzhanga varuvOnE:
You come against the background sound of beats (to this meter) from the solo percussion instrument;

se(m) ne(l) naR kazhani pongi thimilak kamalam aNdi seRi nal kazhai thiraNdu vaLam mEvi thiru nal sikari thunga varaiyaip poruvukinRa thiladhaippadhi amarntha perumALE.: Around this town, fertile fields are full of reddish paddy and fully-grown juicy sugarcanes are densely crammed together; the mountain here is comparable to tall mountains with high peaks; and You are seated here in Thiladhaippadhi**, Oh Great One!


* There are eight types of bird-sounds emanating from the throat of young women during passionate love-making:

peacock, pigeon, swan, turkey, crane, cuckoo, hen and beetle.


** Thiladhaippadhi is now known as KOyiRpaththu. It is in ThanjAvUr district, 3 miles southwest of PEraLam.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 803 panagap padamisaindha - thiladhaippadhi

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]