திருப்புகழ் 802 இறையத்தனையோ  (திலதைப்பதி)
Thiruppugazh 802 iRaiyaththanaiyO  (thiladhaippadhi)
Thiruppugazh - 802 iRaiyaththanaiyO - thiladhaippadhiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனனத் தனனா ...... தனதான

......... பாடல் .........

இறையத் தனையோ ...... அதுதானும்

இலையிட் டுணலேய் ...... தருகாலம்

அறையிற் பெரிதா ...... மலமாயை

அலையப் படுமா ...... றினியாமோ

மறையத் தனைமா ...... சிறைசாலை

வழியுய்த் துயர்வா ...... னுறுதேவர்

சிறையைத் தவிரா ...... விடும்வேலா

திலதைப் பதிவாழ் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

இட்டுணல் ஏய்தருகாலம் ... மற்ற ஒருவருக்கு உணவு இட்டபின்
நாம் உண்ணுதல் என்ற அறநெறி என்னிடத்தில் பொருந்தி இருந்த காலம்

இறையத்தனையோ அதுதானும் இலை ... ஓர் அணு எவ்வளவு
உள்ளதோ அந்த அளவு கூட என்னிடம் இல்லை.

அறையிற் பெரிதாம் ... (அந்த நெறி எவ்வளவு இருந்தது என)
சொல்வதானால் நான் அந்நெறியை விட்ட காலம்தான் மிகப் பெரியது.

மலமாயை அலையப் படுமாறு இனியாமோ ... மும்மலங்களிலும்
மாயையிலும் அலைச்சல் உறுகின்ற இந்தத் தீய நெறி இனிமேல் எனக்குக்
கூடாது.

மறை அத்தனை மா சிறைசாலை வழியுய்த்து ... வேதம் கற்ற
தலைவனாகிய பிரமனை பெரிய சிறைச்சாலைக்குப் போகும்படியாகச்
செய்து,

உயர்வானுறு தேவர் ... உயர்ந்த வானிலுள்ள தேவர்களின்

சிறையைத் தவிரா விடும்வேலா ... சிறையை நீக்கிவிட்ட வேலனே,

திலதைப் பதிவாழ் பெருமாளே. ... திலதைப்பதி* என்னும்
திருத்தலத்தில் வாழ்கின்ற பெருமாளே.


* திலதைப்பதிக்கு தற்போதைய பெயர் கோயிற்பத்து. தஞ்சை மாவட்டத்தில்
பேரளம் என்ற ஊரின் தென்மேற்கே 3 மைலில் இருக்கிறது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.937  pg 2.938 
 WIKI_urai Song number: 806 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Mayiladuthurai Thiru S. Sivakumar
'மயிலாடுதுறை' திரு சொ. சிவகுமார்

Thiru S. Sivakumar
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 802 - iRaiyaththanaiyO (thiladhaippadhi)

iRai aththanaiyO ...... adhuthAnum
     ilaiyit tuNalEy ...... tharukAlam

aRaiyiR peridhA ...... mala mAyai
     alaiyap padumA ...... RiniyAmO

maRai yaththanai mA ...... siRai sAlai
     vazhi uyth thuyarvA ...... nuRu dhEvar

siRaiyaith thavirA ...... vidum vElA
     thiladhaip padhi vAzh ...... perumALE.

......... Meaning .........

iRai aththanaiyO adhuthAnum: Not even for the duration of the size of an atom;

ilaiyit tuNalEy tharukAlam: I observed the good principle of eating my food only after serving someone else.

aRaiyiR peridhAm: If I begin to speak about the time (that I did not observe this good principle), that duration is really long!

mala mAyai alaiyap padumA RiniyAmO: I should not be caught in the vicious cycle of three slags (arrogance, karma and delusion) any more.

maRai yaththanai mA siRai sAlai vazhi uyththu: You sent the Scholar of VEdAs, BrahmA, to the prison!

uyarvA nuRu dhEvar siRaiyaith thavirA vidum vElA: You liberated all the DEvAs from their bondage, Oh VElA,

thiladhaip padhi vAzh perumALE.: You have Your abode at Thilathaippathi, Oh Great One!


* Thilathaippathi is now known as KOyiRpaththu.
It is situated 3 miles southwest of PEraLam in ThanjavUr District.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 802 iRaiyaththanaiyO - thiladhaippadhi

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]