திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 801 எந்தன்சடலங்கம் (கந்தன்குடி) Thiruppugazh 801 endhansadalangam (kandhankudi) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தந்தந்தன தந்தந்தன தந்தந்தன தந்தந்தன தந்தந்தன தந்தந்தன ...... தனதான ......... பாடல் ......... எந்தன்சட லங்கம்பல பங்கம்படு தொந்தங்களை யென்றுந்துயர் பொன்றும்படி ...... யொருநாளே இன்பந்தரு செம்பொன்கழ லுந்துங்கழல் தந்தும்பினை யென்றும்படி பந்தங்கெட ...... மயிலேறி வந்தும்பிர சண்டம்பகி ரண்டம்புவி யெங்குந்திசை மண்டும்படி நின்றுஞ்சுட ...... ரொளிபோலும் வஞ்சங்குடி கொண்டுந்திரி நெஞ்சன்துக ளென்றுங்கொளும் வண்டன்தமி யன்றன்பவம் ...... ஒழியாதோ தந்தந்தன திந்திந்திமி யென்றும்பல சஞ்சங்கொடு தஞ்சம்புரி கொஞ்சுஞ்சிறு ...... மணியாரம் சந்தந்தொனி கண்டும்புய லங்கன்சிவ னம்பன்பதி சம்புந்தொழ நின்றுந்தினம் ...... விளையாடும் கந்தன்குக னென்றன்குரு வென்றுந்தொழு மன்பன்கவி கண்டுய்ந்திட அன்றன்பொடு ...... வருவோனே கண்டின்கனி சிந்துஞ்சுவை பொங்கும்புனல் தங்குஞ்சுனை கந்தன்குடி யின்தங்கிய ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... எந்தன்சடல அங்கம் பல பங்கம்படு ... எனது உடலாகிய உறுப்பு பலவகையான துன்பங்களில் படும் தொந்தங்களை யென்றுந்துயர் ... தொடர்புகள், என்றும் உள்ள துயரங்கள் யாவும் பொன்றும்படி யொருநாளே ... ஒழியும்படியான நாள் ஒன்று உண்டோ? இன்பந்தரு செம்பொன்கழலுந்தும் ... இன்பத்தைத் தரும் செம்பொன்னாலான வீரக்கழல்களை அணிந்த கழல் தந்தும்பினை யென்றும்படி ... திருவடிகளைத் தந்து பின்பு எப்போதும் போல பந்தங்கெட மயிலேறி வந்தும் ... என் பாச பந்தங்கள் அழிய நீ மயில் ஏறி வந்தும், பிரசண்டம் பகிரண்டம் புவியெங்கும் ... வீரத்துடன், வெளியுலக அண்டங்கள், பூவுலகம் எவ்விடத்தும் திசை மண்டும்படி நின்றுஞ்சுடரொளிபோலும் ... திசைகளெல்லாம் நிறையும்படி ஜோதி ஸ்வரூபமாக நின்றும், (அவ்வாறு நீ நிற்பதனால்) வஞ்சங்குடி கொண்டுந்திரி நெஞ்சன் ... வஞ்சகமே குடிகொண்டு திரிகின்ற நெஞ்சினனும், துகளென்றுங்கொளும் வண்டன் ... குற்றத்தையே எப்போதும் செய்கின்ற தீயவனும், தமி யன்றன்பவம் ஒழியாதோ ... தனியேனுமாகிய எனது பிறப்பு நீங்காதோ? தந்தந்தன திந்திந்திமி யென்றும் ... (அதே ஓசை) பல சஞ்சங்கொடு ... சஞ் சஞ்சென்ற பல ஓசைகளுடனும், தஞ்சம்புரி கொஞ்சுஞ் சிறு மணியாரம் ... அபயம் அளிக்கிறேன் என்று சொல்வது போலக் கொஞ்சும் ஒலியுள்ள சின்ன மணிமாலைகளின் சந்தந்தொனி கண்டும் ... சந்த ஒலியைக் கேட்டும், புயலங்கன்சிவனம்பன்பதி சம்புந்தொழ நின்றும் ... மேகவண்ணன் திருமால், சிவபிரான், பிரமன் மூவரும் தொழ நின்றும், தினம் விளையாடும் ... அடியார்களின் உள்ளத்தில் தினந்தோறும் விளையாடுகின்ற கந்தன்குக னென்றன்குரு வென்றுந்தொழும் ... கந்தனே, குகனே, எந்தன் குருவே என்றெல்லாம் தொழுத அன்பன்கவி கண்டுய்ந்திட ... அன்பன் நக்கீரனது பாடலைக் கேட்டு அவன் அடைபட்ட குகையினின்றும், பூதத்தினின்றும் நக்கீரன் பிழைத்து உய்யுமாறு அன்றன்பொடு வருவோனே ... அன்றொருநாள் அவனது முன்னிலையில் அன்போடு வந்தவனே, கண்டின்கனி சிந்துஞ்சுவை பொங்கும் ... கற்கண்டின் இனிப்புச் சுவையுள்ள பழங்கள் சிந்துவதால் சுவைமிக்க புனல் தங்குஞ்சுனை ... நீர் உள்ள சுனைகள் விளங்கும் கந்தன்குடி யின்தங்கிய பெருமாளே. ... கந்தன்குடி* என்ற தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே. |
* கந்தன்குடி காரைக்காலில் இருந்து பேரளம் செல்லும் ரயில் பாதையில் அம்பகரத்தூர் அருகே ஒரு மைலில் உள்ளது. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 2.935 pg 2.936 WIKI_urai Song number: 805 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
'குருஜி' ராகவன் அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள் 'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை & சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) Sri Maha Periyava Thirupugazh Sabha & Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) | பாடகர் பக்கத்திற்கு to singer's page |
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) இப்பாடலின் பொருள் Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) meanings in Tamil |
திரு சபா. மெய்யப்பன் Thiru S. Meyyappan பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
திருமதி காந்திமதி சந்தானம் Mrs Kanthimathy Santhanam பாடகர் பக்கத்திற்கு to singer's page |
Song 801 - endhansadalangam (kandhankudi) endhansada langampala bangampadu thondhankaLai endrunthuyar pondrumpadi ...... orunALE inbantharu semponkazha lundhunkazhal thandhumpinai endrumpadi bandhang keda ...... mayilERi vandhumpira chaNdambagi raNdambuvi engundhisai maNdumpadi nindrum suda ...... roLipOlum vanjankudi koNdunthiri nenjanthuga LendrunkoLum vaNdanthami yandranbavam ...... ozhiyAdhO thandhanthana dhindhindhimi endrumpala sanchankodu thanjampuri konjum siRu ...... maNiyAram chandham dhoni kaNdumpuya langansiva nambanpathi sambunthozha nindrundhinam ...... viLaiyAdum kandhanguha nendranguru vendrunthozhu manbankavi kaNduyndhida andranbodu ...... varuvOnE kaNdinkani sindhunsuvai pongumpunal thangunj sunai kandhankudi yinthangiya ...... perumALE. ......... Meaning ......... endhansada langampala bangampadu thondhankaLai endrunthuyar: My body has been subjected to so many deformities, ill-effects and constant suffering; pondrumpadi orunALE: Will there be a day when all these will end? inbantharu semponkazha lundhunkazhal thandhum: Please grant me Your lotus feet wearing the golden anklet so that I may have eternal bliss and pinai endrumpadi bandhang keda: my attachments are destroyed permanently thereafter. mayilERi vandhum: For that, You must come to me mounted on Your Peacock! pira chaNdambagi raNdambuvi: You must come with valour and illuminate all planets and this earth engundhisai maNdumpadi nindrum suda roLipOlum: in every direction, standing there like a radiant light! vanjankudi koNdunthiri nenjan: I am roaming about with a heart that is constantly scheming. thugaL endrunkoLum vaNdan: I am a wicked fellow always committing crimes. thami yandranbavam ozhiyAdhO: I am also a lonely man. Will the cycle of birth never cease for me? thandhanthana dhindhindhimi endrum: Making a sound like "thandhanthana dhindhindhimi" and pala sanchankodu: also like "sanjan sanjan" thanjampuri konjum siRu maNiyAram: are the beads in Your petite chains of gems as though they are saying to Your devotees "I shall give you refuge." chandham dhoni kaNdum: Listening to that rhythmic sound, puya langansiva nambanpathi sambunthozha: Vishnu, dark like the rainy cloud, SivA and BrahmA together worship You. nindrundhinam viLaiyAdum: You play in the hearts of Your devotees everyday! kandhanguha nendranguru vendrunthozhu manban: When Nakkeeran praised You as "KandhA, GuhA, My Master!", kavi kaNduyndhida andranbodu varuvOnE: You were moved by his poetry and came before him (releasing him from the devil and freeing him from the cave where he was imprisoned). kaNdinkani sindhunsuvai pongumpunal thangunj sunai: The fountains are filled with water sweetened by fruits dropping in them kandhankudi yinthangiya perumALE.: at Kandhankudi*, which is Your abode, Oh Great One! |
* Kandhankudi is situated a mile away from AmbakaraththUr railway station on the KAraikkAl - PeraLam route. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |